ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 2 - புனர்பூ தோஷம்...

ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 2 - புனர்பூ தோஷம்

ஜோதிடத்தில் உள்ள அசுப தோஷங்கள் பற்றி சில சில தோஷங்களாக இந்த பகுதிகளில் பார்த்து வருகிறோம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ஒரு தோஷமானாலும் அது அந்த ஜாதகரீதியாக தீவிரமானால் தான் அந்த தோஷங்களால் தீய பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


புனர்பூ தோஷம்

திருமண தோஷங்களில் சற்று கடுமையான தோஷம் இந்த புனர்பூ தோஷம் ஆகும் இது திருமண திடீர் தடை, திருமண தாமதம், திருமணத்திற்கு முன்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும் தோஷம், வரன் தேடிவதற்கு கூட தாமத படுத்தும், நல்ல வரன்கள் அமைந்தாலும் தட்டிகழிக்க வைக்கும், மிக கடுமையாக இருந்தால் பிரம்மச்சாரி வாழ்க்கையை கூட வாழ வைத்துவிடும்

இப்பேர்பட்ட தோஷம் எப்படி ஏற்படுகிறது சனி பகவானும், சந்திர பகவானும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அல்லது சனியின் சமசப்தமமாக அதாவது சனிக்கு 7 ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் அல்லது சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரதில் சந்திரன் இருந்து, சந்திரனின் நட்சத்திரமான ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரதில் சனி இருந்தால் புனர்பூ தோஷம் ஏற்படும்.

சனியோ சந்திரனோ யாரோ ஒருவர் மற்றவரின் நட்சத்திரதில் இருந்தாலும், நவாம்சத்தில் சனி பகவானும், சந்திர பகவானும் ஒன்றாக சேர்ந்து இருந்தாலும் பாதி அளவிலான புனர்பூ தோஷத்தை ஏற்படுத்தும்.

இதன் பலன் மேலே சொன்னது போல வேதகால ஜோதிடம் சொல்லி உள்ளது, தற்காலத்தில் நிச்சயதார்த்துக்கு பின் திருமணம் நின்றுவிடுதல், விவகாரத்து, மறுமணம், திருமணத்திற்கு முன்பான உடல்உறவு காரணமான பிரச்சினைகளால் தடை, திருமணம் செய்துவைப்பதற்கு கூட ஆள் இல்லாமல் தவித்தல் இது போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும் வலிமை பெற்றது இந்த புனர்பூ தோஷம்.

விதிவிலக்கு சுப பலமான குரு பகவான் பார்வை சனி, சந்திரனுக்கு கிடைக்க வேண்டும் அப்படி கிடைத்தால் புனர்பூ தோஷம் பெரிய அளவில் குறையும், சில ஜாதகங்களில் சனி, சந்திரனுடன் குரு, சுக்கிரன் சேர்க்கை கூட சற்று இந்த தோஷத்தை மட்டுப்படுத்துகிறது.

புனர்பூ தோஷம் ஒரு வகை உதாரண படம்
 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


1 Response to "ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 2 - புனர்பூ தோஷம்..."

  1. Unknown says:

    என் ஜாதகத்தில் சந்திரன் +சூரியன் + புதன், சனி ஆகியவை உள்ளன.லக்கனத்தில் இருந்து 4 ம் விட்டில் உள்ளது..கன்னி இலக்கனம்...

கருத்துரையிடுக

Powered by Blogger