ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 3 - சந்திர மங்கள யோகம், சப்தமசந்திர யோகம்...

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 3 - சந்திர மங்கள யோகம், சப்தமசந்திர யோகம்...

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

போன பதிவில் -
 
இந்த தொகுப்பில் சந்திர மங்கள யோகம், சப்தமசந்திர யோகம் ஆகிவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
சந்திர மங்கள யோகா

செவ்வாய் சந்திரன் ஒன்று சேர்ந்தாலே, சமசப்தமமாக வரும் போதோ இந்த சந்திர மங்கள யோகம் உருவாகிறது. தில் செவ்வாயோ ல்லது சந்திரனோ ஆட்சி, உச்சம் பெற வேண்டும், அல்லது நல்ல நட்பு கிரங்களின் சாரங்களை பெற வேண்டும்.

இதன் யோகத்தின் பலன்கள் பணம் விஷயங்களில் பலம்வாய்ந்தவராக இருப்பார், மது வஸ்துகளை விற்பனை செய்தல், பெரிய நட்சத்திர தங்கும் விடுதிகளை (Star Hotel) நடத்துதல், பெரிய பூங்காக்களை (Theme Parks)  நிறுவுதல், போகுவரத்து சேவைகளை செய்யுதல் (Travel Services), பெரிய பண்ணைகளை நடத்துதல், பெரிய உணவகங்களை நடத்துதல், மேலே சொல்லப்பட்ட ஏதேனும் துறையில் சிறந்து விளங்குவர், நல்ல நீர்வளம் நிறைந்த நிலங்களை அடைதல், கால்நடைகள் வசதி, நிறைய வேலையாட்கள் போன்ற யோகமான அமைப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, சட்டத்திற்கு புறம்பான விஷயங்களையும் சரிகட்டி நினைத்ததை செயல்படுத்தி விடுவார்கள்.

சந்திர மங்கள யோகம் ஒரு வகை உதாரண படம்


சப்தமசந்திர யோகம்

லக்ன யோக கிரகங்கள் அல்லது சுப கிரகங்கள் சந்திரனிலிருந்து 6 ,7, 8 ஆம் வீட்டில் தொடர்ந்து இருந்தால் இந்த சப்தமசந்திர யோகம் உருவாகிறது. இதில் லக்னத்திற்கு 6,8,12 ஆம் வீட்டில் சந்திரன் மறைந்து விடக்கூடாது.

இதன் யோகத்தின் பலன்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுவார்,  கண்ணியமான தகுதியை வாழ்க்கையில் அடைவார், எதிரிகளை வீழ்த்த கூடியவர், ஆரோக்கியமான உடல்வாகு இருக்கும் மற்றும் நீண்ட நாள் வாழும் பாக்கியம் பெற்றவர்,  பாசமான உறவுகள், ஆடம்பரங்கள் சூழ்ந்த சூழ்நிலைகளை பெற்றிருக்கவேண்டும்.

சப்தமசந்திர யோகம் ஒரு வகை உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 3 - சந்திர மங்கள யோகம், சப்தமசந்திர யோகம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger