மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) ஜாதகம் கணிப்பு - சிறந்த விளையாட்டு வீரருக்கான...

மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) ஜாதகம் கணிப்பு

மகேந்திரசிங் தோனி சுருக்கமாக எம்எஸ் தோனி என்று அழைக்கப்படுகின்ற இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் கேப்டனாக விளங்கும் தோனியின் ஜாதகத்தின் மூலமாக தலைமைத்திறன், சிறந்த விளையாட்டு வீரருக்கான யோகங்கள், சூழ்நிலை தக்கவாறு திட்டங்களை தகவமைத்து கொள்ளும் ஆற்றல் இவைகளை எல்லாம் பார்போம்.  இவர் தன் விளையாட்டுத்திறமையின் மூலமாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார் மேலும் விளையாட்டுத்துறை மற்றும் விளம்பரங்கள் பங்கேற்பதன் மூலமாக நிறைந்த செல்வ வளத்தையும் பெற்றவர் இப்போது நம் பணிக்கு வருவோம்.
 பிரபலமான ஜாதகங்கள்
மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) ஜாதகம்

முதலில் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் ஆவதற்கு அடிப்படையாக செவ்வாயும், 3 ஆம் ஸ்தானமும் 5ஆம் ஸ்தானமும் உயர்ந்த பலமாக இருக்க வேண்டும், அது போக புதன், இராகு, குரு  நன்றாக இருக்க வேண்டும் இது அவரின் அறிவுக் கூர்மைக்காக மேலும் சூரியன், சனி நன்றாக இருக்க வேண்டும் இது அவரின் கை, கால்களின் திடத்திற்காக,

தோனியின் ஜாதகத்தில் 3 ஆம் ஸ்தானத்திற்கு உரிய செவ்வாய் 9 ஆம் ஸ்தானத்தில் தன் ஆதிபத்திய சாரம் பெற்ற மிருகசீரிசம் நட்சத்திரத்திலேயே அமர்ந்து 7ஆம் பார்வையாக 3 ஆம் இடத்தை பார்ப்பது விளையாட்டு வீரக்கான ஒரு சிறந்த அமைப்பாகும், அது போக 5ஆம் ஸ்தானத்திற்கு உரிய சனியும் 3ஆம் பார்வையாக 3 ஆம் இடத்தை பார்ப்பதும், கன்னி லக்னத்திற்கு யோகத்தை தரவல்ல திரிகோண ஸ்தானமான 9 ஆம் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன் மற்றொரு திரிகோண ஸ்தானமான 5 ஆம் ஸ்தான அதிபதியின் சாரம் பெற்று 5 ஆம் ஸ்தானத்தையே பார்ப்பதும் சிறந்த யோகம் ஆகும் மேலும் நவாம்ச லக்னத்திற்கு 5 ஆம் ஸ்தானத்திற்கு உரிய சூரியன் லக்னத்தில் உச்சமும் அடைகிறார்.

10 ஆம் ஸ்தானத்தில் புதன் செவ்வாயின் ஆதிபத்திய சாரம் பெற்ற மிருகசீரிசம் நட்சத்திரத்திலேயே அமர்ந்து ஆட்சி உயர்வை அடைந்துள்ளார், 8க்குடைய செவ்வாயின் சாரம் பெற்று 12 க்குடைய சூரியன் உடன் சேர்ந்ததால் கேந்திராதிபத்திய தோஷம் நிவர்த்தி பெற்று தன் முழுபலத்தையும் பெறுவார் இதனால் புத்திசாலிதனத்திற்கு காரகனான புதன் இப்படி சிறப்பை அடைந்ததால் தான் வித்தியாசமாகவும் அதே சமயம் சாமர்த்தியமான முடிவுக்களை தான் சார்ந்த விளையாட்டில் எடுத்து அனைவரையும் கவர்ந்தார் எம்எஸ் தோனி.

தைரிய ஸ்தானமான 3 ஆம் ஸ்தானத்திற்கு உரிய தைரிய காரகனும் ஆன செவ்வாய் 3 ஆம் இடத்தை பார்ப்பதால் எத்தகை சூழலிலும் அஞ்சாமல் இருக்கும் மனோதிடம் கிடைத்தது. 12 க்குடைய சூரியன் 10 ல் அமர்ந்ததால் விளையாட்டு வாழ்க்கையில் அதிக காயங்களையும், அவமானங்களையும் அடைந்திருப்பார் அதனாலும் மனபக்குவம் அவருக்கு கிடைத்திருக்கும். சனியும், சந்திரனும் சேர்ந்து சில பலவீனமான நிலைகளை தருவதால் மன காயங்களையும், துரோக செயல்களையும் அவர் வாழ்க்கையில் சந்திக்க வேண்டி வரும்.

லக்னத்தில் சந்திரன் அமைந்தால் அவரது எண்ணமும், செயலும் ஒரே திசையில் அதாவது அவரின் வாழ்க்கை திட்டங்களுக்கு எண்ணமும், உடலும் முழுமையாக ஒத்துழைக்கும், பொதுவாக லக்னத்தில் குரு, சந்திர சேர்க்கை சூழ்நிலை தக்கவாறு நடந்து கொள்ளும் பண்பை தரும் இது குருசந்திர யோகமும் ஏற்படும், மேலும் குரு பகவான் 12க்குடைய சூரியனின் சாரம் பெற்று 6 க்குடைய சனி உடன் சேர்ந்ததால் கேந்திராதிபத்திய தோஷம் நிவர்த்தி பெற்று தன் முழுபலத்தையும் பெறுவார் அந்த குரு பஞ்சாம்ச சக்கரங்களில் சுமார் நான்கு சக்கரங்களில் ஆட்சி அடைகிறார் இது ஆழமான வர்க்கோத்தம யோகம் ஆகும் இதனால் அது  சூழ்நிலை தக்கவாறு திட்டங்களை தகவமைத்து கொள்ளும் ஆற்றலை தந்தது, பொதுவாக புதன் அல்லது சுக்கிரன் இவர்கள் அமராத புதனின் இராசி வீட்டில் அதாவது கன்னி, மிதுனத்தில் குரு பகவான் அமர்ந்தால் அவர்களுக்கு அறிவுத்திறன், யோசனைகள் சற்று சிறப்பாகவே இருக்கும்.

தலைமை கிரகமான சூரியன், புதன் சேர்ந்தால் நிபுனத்துவ யோகம் ஏற்படும் அது போக தோனிக்கு லக்னாதிபதியான புதன் 10ல் ஆட்சியும் அடைகிறார், நிர்வாக கிரகமான செவ்வாயின் சாரமும் பெறுகிறார், பலமடைந்த செவ்வாயை குரு பார்க்கவும் செய்கிறார், தலைமைத்திறனுக்கான 9,10 ஸ்தானங்கள் வலுவடைந்து லக்னமும் வலுவடைந்துள்ளதால் தலைமை தாங்கும் திறன் நன்றாக வரும், 12 க்குடைய சூரியன் 10 ல் அமர்ந்ததால் சில எதிர் விமர்ச்சனங்களையும் சந்திக்க வேண்டிவரும், 10 ஆம் ஸ்தானத்திற்கு அதிபதி புகழ் ஸ்தானமான 9 ஆம் ஸ்தானாதிபதியின் சாரம் பெற்று ஆட்சியும் அடைந்ததால் உலக புகழையும் அடைந்தார்.

14 வயதில் தொடங்கிய சுய சாரம் பெற்ற செவ்வாயின் திசையிலேயே கிரிக்கெட் போட்டித்தொடரில் தோனி பங்கேற்க்க ஆரம்பித்து விட்டார், இதே திசையில் தனது பதினெட்டாவது வயதில் ரஞ்சி டிராபியில் பிஹார் அணிக்காக களமிறங்கினார், 21 வயதில் தொடங்கிய 5ஆம் ஸ்தானத்திற்கு உரிய சனியின் சாரம் பெற்ற இராகு திசையில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்க்க ஆரம்பித்து விட்டார், இராகு திசையில் சனியின் புத்தியிலேயே தோனி தென் ஆப்ரிக்காவில் நடந்த ஆரம்ப ICC  உலக டிவெண்டி 20 க்கான இந்திய அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் அதற்கு பிறகு அவர் தொட்ட தெல்லாம் வெற்றியே, விளையாட்டு வீரர்களின் விளையாட்டு வாழ்க்கை மிக குறுகியது என்பதால் இந்த இராகு திசையின் பிற்பாதியிலேயே சந்திர, செவ்வாயின் புத்திகளில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என தோனி முடிவு செய்துவிடுவார்

லக்னத்திலே குரு, சந்திர, சனி கிரகங்கள் அமர்ந்துள்ளதால் தன் மீதிகால வாழ்க்கையை வித்தியாசமானதாகவும், தொழில் துறை சார்ந்த ஆக அமைத்துக் கொள்வார், சமூக தொண்டு மற்றும் ஆன்மீக ஆர்வமும் மிகுந்தவர்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) ஜாதகம் கணிப்பு - சிறந்த விளையாட்டு வீரருக்கான..."

கருத்துரையிடுக

Powered by Blogger