ஏ.ஆர்.ரஹ்மான் (A. R. Rahman) ஜாதகம் கணிப்பு - இசைத்துறை, பாடகர், தாள இசை...


.ஆர்.ரஹ்மான் (A. R. Rahman) ஜாதகம் கணிப்பு - இசைத்துறை, பாடகர், தாள இசை...

இந்தியத் திரைப்படத்தின் சிறந்த இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவரும், இசைப்புயல் என்று தமிழர்களால் பாராட்ட படுபவரும் உலக அளவில் ஆசியாவின் மொசார்ட் என்று அழைக்கப்படுபவரும் ஆன . ஆர். ரகுமானின் ஜாதகத்தின் மூலம் இசைத்துறை, பாடகர், தாள இசை ஆகிய துறைகளில் சாதிப்பதற்க்கான ஜோதிட அமைப்புகளை பார்க்கலாம்.

.ஆர்.ரஹ்மான் (A. R. Rahman) ஜாதகம்
 
முதலில் இவர் சிறு வயதிலேயே தந்தையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது இப்படிபட்ட துயரம் ஏற்பட்டதற்க்கான ஜாதக அமைப்புகள் ஆவது இவரின் ஜாதகத்தில் லக்னத்தின் படி தந்தையின் காரகத்துவம் பெற்ற குரு லக்ன பகை சாரம் பெற்றும் மேலும் பொதுவான தந்தைகாரகனான சூரியன் 9ல் அமைய பெற்றும் இவர்கள் இருவரும் நவாம்சத்தில் 6ல் மறைவு காண்பதும் முக்கிய காரணங்கள் ஆகும், சூரியன் 9ல் அமைய பெற்றது நல்லது தானே என நீங்கள் நினைக்கலாம் ஆம் நல்லது தான் ஆனால் காரகோ பவ நாஸ்தி என்ற அடிப்படையில் தந்தையின் அமைப்புக்கு கெடுதி, மேலும் சூரியன் நவாம்சத்தில் நீசமும் அடைகிறார்.

மதமாற்றம், இளமையில் வறுமை என இப்படி நிறைய விஷயங்களை இந்த ஜாதகத்தில் சொல்லாம் இருந்தாலும் நாம் எடுத்துக் கொண்ட இசைத்துறை சம்பந்தபட்ட விஷயங்களை மட்டும் பார்போம் இசைத்துறையில் சாதிப்பதற்க்கு 2,3,5,11 ஆகிய ஸ்தானங்கள் நன்றாக அமைய வேண்டும் மேலும் அதன் ஸ்தானாதிபதிகளும் நன்றாக அமைய வேண்டும், பிறகு சுக்கிரன், குரு, சனி ஆகிய கிரகங்கள் மிக பலமாக அமைய வேண்டும்.

இவரின் ஜாதகத்தில் பாட்டுக்கு காரகத்துவம் பெற்ற இரண்டாம் ஸ்தானாதிபதி சுக்கிரன் 8ல் மறைந்தாலும் நட்பு சாரம் பெற்று 7 ஆம் பார்வையாக இரண்டாம் ஸ்தானத்தை பார்க்கிறார் அதுபோக நவாம்சத்தில் உச்சமும் அடைகிறார், அதுபோக சஷ்டாம்சம், பாத துவைதாம்சம், அஷ்டாம்சம், துவாதம்சம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் உச்சமும் ஆட்சியும் அடைகிறார், சுக்கிரன் இப்படி பலம் பெற்றதால் நல்ல வசீகர குரலும், பாடும் பாவத்தாலும் அனைவரையும் கவர்ந்தார்.

முன்றாம் ஸ்தானம் இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை ஆகியவற்றை காட்டும் அந்த ஸ்தானாதிபதி புதன் 3,6 க்குடையவர் 8ல் அமைந்து விபரீதராஜயோகத்தையும், உடன் நட்பு கிரகமான சுக்கிரனுடன் சேர்ந்து வலுத்தும் உள்ளார் மறைந்த புதன் நிறைந்த அறிவு என்று பழம் வாக்கும் சொல்வதுண்டு. சில அம்சங்களிலில் நீசமும் அடைந்து தனது தீய காரகத்துவத்தை இழப்பதால் எதிரிகள், ரோகம் ஆகிய தொந்தரவுகள் பெரிய அளவில் இல்லாத நிலை ஏற்பட்டது.

இவரின் ஜாதகத்தில் மற்றவரை மகிழ்விக்கும் ஸ்தானமான 5ஆம் வீட்டின் அதிபதி சூரியன் 5க்கு 5ஆம் திரிகோண ஸ்தானமான 9ல் நட்பு வீட்டில் பலமாக உள்ளார் அவருக்கு இடமளித்த குரு லக்னத்தில் இருந்து 5 ஆம் பார்வையாக 5ஆம் ஸ்தானத்தையும் பார்க்கிறார், அதுபோக சூரியன் இரண்டாம் ஸ்தானாதிபதி சுக்கிரனின் சாரமும் பெறுகிறார், 11 ஆம் அதிபதியான சனியால் 7ஆம் பார்வையாக 5ஆம் ஸ்தானத்தையும் பார்க்கிறார் அதனால் இசைத்துறையால் மக்களை மகிழ்விக்கும் பணியை செய்துவருகிறார்.

இவரின் ஜாதகத்தில் இசையமைத்தல், இசைகருவிகளை மீட்டுதல் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்ற 11 ஆம் ஸ்தானாதிபதி சனி பகவான் 11ல் ஆட்சி பெற்று உள்ளார் பாதகாதிபதியானதால் ஆரம்பத்தில் சில இடர்களை கொடுத்தார், இருந்தாலும் சதுர்பாத துவைதாம்சம், திரிம்சாம்சம், அஷ்டாம்சம், பஞ்சாம்சம், திரேக்காணம் ஆகிய அனைத்து அம்ச சக்கரங்களிலும் உச்சமும் ஆட்சியும் அடைகிறார் இதன் மூலம் பலமான வர்க்கோத்தம யோகம் பெற்றுள்ளது அதாவது வர்க்கோத்தம பலம் பெறுவதன் மூலமாக சனி பகவான வெறும் மேலொட்டமான பலத்தை தண்டி ஆழமான பலத்தை பெறுகிறார், மேலும் அது அவருக்கு தொழில் காரகரும் ஆவதால் இடர்களுக்குபின் சனி பகவான் பலமான யோகத்தை தருவார் அதனால் தன் இசைத்துறையில் சிறந்த திறமையும் பெற்று அந்த இசைத்துறையால் நிறைந்த செல்வத்தையும், உலக புகழையும் பெற்றுள்ளார், சனி ஒரு தொண்டு கிரகம் என்பதால் வரும்காலத்தில் சமூக தொண்டுக்காகவும், தானதர்மம் செய்வதிலும் ஆர்வமுடன் ஈடுபடுவார். மேலும்
இராகுவின் சாரமும் பெற்ற சனி ஒரு இரவு கிரகம் அதனால் இரவில் இசை அமைப்பதில் ஆர்வம் கொண்டார்.

சுக்கிரனின் சாரம் பெற்ற குருவின் திசையில் புதனின் புத்தியில் இசைத்துறையில் இவரின் வெற்றிகள் ஆரம்பித்தன, இரண்டில் அமர்ந்த இராகுவின் சாரம் பெற்ற மிகபலமான சனியின் திசையில் உலக புகழும், தனது இசையால் 2009ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதும், 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது என பல விருதுகளையும் குவித்து கொண்டு வருகிறார். அடுத்து வருகிற புதன் திசையிலும் நல்ல புகழையும், நிறைந்த செல்வங்களை சேர்ப்பார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்



0 Response to "ஏ.ஆர்.ரஹ்மான் (A. R. Rahman) ஜாதகம் கணிப்பு - இசைத்துறை, பாடகர், தாள இசை..."

கருத்துரையிடுக

Powered by Blogger