தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி தசாம்சம், 10ஆம் பாத துவைதாம்சம் பகுதி 1...

தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி தசாம்சமும், 10ஆம் பாத துவைதாம்சமும் பகுதி 1...

ஒருவரின் தொழில் வாழ்க்கை அமையும் விதம் அதில் ஏற்படும் யோகங்கள், விருத்தி, பெரிய அளவில் தொழில் செய்தல், பல வேலையாட்களை சேர்த்து செய்தல், சுய தொழில் அல்லது மற்றவரிடம் வேலை பார்க்கும் நிலை, அதில் ஏற்படும் உயர்வு, அரசாங்க பதவிகள், அரசாங்க திட்டங்களிலின் மூலம் தொழில் செய்தல், அரசியல் பணி, பாதுகாப்பு துறை பணி, பேச்சு போன்ற தன் தனிபட்ட திறமையை பயன்படுத்தி தொழில் செய்தல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில், ஆன்மீக பணி செய்தல், சட்டத்துக்கு புறம்பான தொழில் செய்தல், பாவத் தொழிலில்களை செய்தல் என இன்னும் பலவாக மனிதர்கள் தங்களின் வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விதிக்கபட்ட கர்மங்களை செய்கிறார்கள் அதன் சிறப்பு தாழ்வுகளை காட்டும்படியாக ஜோதிடம் உள்ளது.



அதிலும் இக்காலகட்டகளில் பல தொழில்கள் பல்கி பெருகிவிட்டன எனவே தொழிலை காட்டும் ஸ்தானங்களுக்கு நாம் நிறைய ஆராய்ச்சிகளை செய்தே முடிவுக்கு வரவேண்டி உள்ளது ஜோதிடத்தில் ஒருவரின் தொழில் வாழ்க்கையை காட்டும் ஸ்தானங்களாக இராசி கட்டத்தின் 4,5,7,9,10,11 ஆகிய ஸ்தானங்கள் உள்ளன மற்றும் அந்த ஸ்தானாதிபதிகள் உள்ளனர் இதை சற்று விளக்கமாக கூறுவதானால்



4 ஆம் ஸ்தானம் அந்த ஸ்தானாதிபதி - வேலை வாய்ப்பு பயிற்சி, தொழில் பயிற்சி, வியாபார பயிற்சி, கல்யாணத்திற்கு முன்பே சேர்க்கும் வருமானம் ஆகியவற்றை காட்டும் ஸ்தானம் ஆகும்.



5 ஆம் ஸ்தானம் அந்த ஸ்தானாதிபதி - 'பதவி பூர்வபுண்ணியனாம்' எனபது சுலோகம் தொழிலில் இருக்கும் பதவி, அடைவிருக்கும் பதவி உயர்வு காட்டும் ஸ்தானம் பதவியே ஒருவருக்கு இருக்கும் அதிகார பலத்தையும் மதிப்பையும் காட்டும் என்பதை மறந்து விடக்கூடாது.



7 ஆம் ஸ்தானம் அந்த ஸ்தானாதிபதி - கூட்டுத்தொழில், தொழிலில் ஏற்படும் பண உதவிகள், மூதலீடுகளில் ஏற்படும் ஒற்றுமை, சேர்ந்து உழைக்கும் பண்புகள் ஆகியவற்றை காட்டும் ஸ்தானம் ஆகும்.



9 ஆம் ஸ்தானம் அந்த ஸ்தானாதிபதி - தந்தை, பூர்வீக தொழில்கள், முன்னோர்களின் அறிவற்றால் ஈடுபட்ட தொழில்கள் ஆகியவற்றை காட்டும் ஸ்தானம் ஆகும்.



10 ஆம் ஸ்தானம் அந்த ஸ்தானாதிபதி - தொழிலை காட்டும் மிகமுக்கியமான ஸ்தானம் இது இதில் கடுமையான உழைப்பு, தொழில் வெற்றி, லாபம், முன்னேற்றம், தொழில் போட்டி, பொறாமை, மேல் சம அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு, அதிகார போட்டி, தொழிலில் போட்டியிடும் திறன் துணிவு, நிர்வாக திறன், வியாபாரம் செய்தல், மக்கள் தொடர்பு, சேவை செய்தல், பதவி பொறுப்புகள் என முக்கியமானவை காட்டும் ஸ்தானம் ஆகும்.



மேலும் 10 ஆம் ஸ்தானத்தையே தொழில் லக்னமாக பார்த்து பலன் சொல்லும் முறை என்றும் இப்படி என்னதான் இந்த முறைகளும் ஸ்தானங்களும் இருந்தாலும் தற்காலத்தில் மேலும் ஒருவர் செய்யும் தொழிலின் ஆழமான பலத்தை அறிய தசாம்சத்தையும் இன்னும் ஆழமான விவரங்களை அறிய 10ஆம் பாத துவைதாம்ச சக்கரத்தின் பலமும் முக்கியம் இதற்கு உதாரணமாக...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி தசாம்சம், 10ஆம் பாத துவைதாம்சம் பகுதி 1..."

கருத்துரையிடுக

Powered by Blogger