12 ஸ்தானங்களில் கேந்திர ஸ்தானங்களின் சிறப்புகள்…


12 ஸ்தானங்களில் கேந்திர ஸ்தானங்களின் சிறப்புகள்
ஜனன லக்னத்திற்கு 1,4,7,10 ஆகிய ஸ்தானங்கள் கேந்திரங்கள் ஆகும், கேந்திரம் என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு முக்கியம், முக்கியமான என்று அர்த்தம் ஆம் நம் வாழ்வில் முக்கியமான செல்வங்களை குறிக்கும் ஸ்தானங்களே கேந்திர ஸ்தானங்கள் ஆகும் அதாவது மனித வாழ்க்கையில் அவனுடை மூல தலைவிதியை தீர்மானிக்க கூடிய 1வது ஸ்தானம் என்னும் லக்னம் பிரதன கேந்திரம், சுக போக வாழ்வை  தீர்மானிக்க கூடிய 4 வது ஸ்தானம் சதுர் கேந்திரம்,  இல்லற வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய 7 வது ஸ்தானம் சப்தம கேந்திரம், தொழில் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய 10வது ஸ்தானம் தசம கேந்திரம் ஆகிய நான்கு கேந்திரங்கள் ஆகும் எப்படி ஒரு மண்டபத்தை நான்கு தூண்களும் தாங்கி நிற்கிறதோ அதுபோல மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் நான்கு தூண்கள் தான் இந்த நான்கு  கேந்திர ஸ்தானங்கள்.

பிரதன கேந்திரம் - இங்கு புதன், குரு ஆகிய இரண்டு கிரகங்கள் இயல்பாக வலுவடைகின்றன, லக்னத்திற்கு சுப புதனாக இருந்து 1ல் அமரும்  அறிவார்ந்த ஆளுமை, சிறந்த நினைவாற்றல், விவேகமான புத்தி, நிறைய நண்பர் பட்டளம் தரக்கூடியவராகிரார், லக்னத்திற்கு சுப குருவாக 1ல் அமரும் போது தான் பார்க்கும் 5,7,9 ஆகிய ஸ்தானங்களின் பலன்களை சிறப்பாக்கி தருவார் உதாரணமாக 7 ஆம் வீட்டை பார்பதன் மூலமாக அன்பான மனைவி, நல்ல இல்லற வாழ்க்கையை தருவார்.

சதுர் கேந்திரம் - இங்கு சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்கள் இயல்பாக வலுவடைகின்றன, லக்னத்திற்கு சுப வளர்பிறை சந்திரன் 4ல் சாதகமான கூட்டுகிரகங்களுடன் அமரும் போது பேறு பெற்ற பிறப்பு, குழந்தை பருவத்தில் பாதுகாப்பு, நல்ல கல்வி வாய்ப்பு. லக்னத்திற்கு சுப சுக்கிரன் 4ல் சாதகமான கூட்டுகிரகங்களுடன் அமரும் போது பெற்றோர்கள் உயர் அந்தஸ்து மற்றும் நிதி நிலைமை கொண்டவராக இருப்பார், சரியான வயதிலேயே திருமணம்.

சப்தம கேந்திரம் - இங்கு சனி கிரகம் இயல்பாக வலுவடையும், லக்னத்திற்கு சுப சனியாக இருந்து 7ல் அமரும் போது திருமண விஷயங்களில் பாதிப்பை தந்தாலும் நல்ல வேலையாட்கள் அமைவது, நல்ல திறமையான வேலைக்காரனாக இருந்து நிறுவனத்தில் உயர் நிலை பெறுவது, வலுவான தொழில் போட்டியாளராக திகழ்வார்.

தசம கேந்திரம் - இங்கு சூரியன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்கள் இயல்பாக வலுவடைகின்றன, லக்னத்திற்கு சுப சூரியன் 10ல் அமரும் போது தொழில் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை பெறுவது, அதிகார பதவிகளை பெறுவதும் அமையும், லக்னத்திற்கு சுப செவ்வாய் அமரும் போது தொழில் வாழ்க்கையில் வரும் சாவல்களை வெல்லக்கூடியவர், போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார், தொடர்ந்து போராடக்கூடியவர் அதில் வெற்றிக் கனியை பறிக்காமல் விடமாட்டார்.


கேந்திர ஸ்தானம்
சிறப்பு பெயர்
லக்னம் - 1
ஜென்மம்
4 ஆம் ஸ்தானம்
நீர்க்கீழ்
7 ஆம் ஸ்தானம்
படுக்கை
10 ஆம் ஸ்தானம்
உச்சி
 
லக்னத்திற்கு பாவகிரகங்கள், 6,8,12 க்கு ஸ்தானாதிபதிகள் 1,4,7,10 வது வீடுகள் ஆகிய கேந்திரங்கள் ஸ்தானங்களில் அமர்ந்தால் : -
  • கடினமான சூழ்நிலையில் வாழ்க்கை அமைந்திருக்கும்.
  • வரையறுக்கப்பட்ட சம்பாதிக்கும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் இருப்பது அல்லது அவரே அந்த நிலைமையிருப்பது.
  • அசெளகரியத்தை வாழ்க்கை அமைப்பு. ஊட்டச்சத்து குறைபாடு
  • கவனக்குறைவாக அல்லது விதண்டா வாதம் பெற்றோர்கள் இருப்பது அல்லது அவரே அந்த நிலைமையிருப்பது. 
இப்படி கேந்திரங்களை சிறப்பித்தாலும் கேந்திரங்களைவிட திரிகோண ஸ்தானங்களை ஒருவரின் ஜாதகத்தில் முக்கியமாக கருதபட வேண்டியதும் பார்க்க படவேண்டியதும் ஆகும் எனவே திரிகோண ஸ்தானங்ககள் பற்றி பின் பதிவில் பார்ப்போம்.

0 Response to "12 ஸ்தானங்களில் கேந்திர ஸ்தானங்களின் சிறப்புகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger