12 ஸ்தானங்களில் 1, 5, 9 ஆம் திரிகோண ஸ்தானங்களின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…

12 ஸ்தானங்களில் 1, 5, 9 ஆம் திரிகோண ஸ்தானங்களின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்

ஜனன லக்னம் மற்றும் ஜனன லக்னத்திற்கு 5 ஆம் ஸ்தானம், 9 ஆம் ஸ்தானம் ஆகிய மூன்று ஸ்தானங்களும் திரிகோண ஸ்தானங்கள் என்று அழைக்கபடுகின்றன, திரிகோணம் என்று ஏன் அழைக்க வேண்டும் கோணம் என்றால் ஒரே புள்ளியில் இருந்து கிளம்பும் இரண்டு கோடுகள் உருவாக்கும் வடிவம் கோணம் (Angle) எனப்படும் திரிகோணம் என்றால் முன்று புள்ளியில் இருந்து கிளம்பும் கோடுகள் சேருவதால் இதற்கு திரிகோணம் என்று அழைக்கபடுகின்றது அது என்ன முன்று புள்ளிகள் அதுதான் லக்னம் மற்றும் ஜனன லக்னத்திற்கு 5 ஆம் ஸ்தானம், 9 ஆம் ஸ்தானம் ஆகும் உதாரணமாக இந்த படத்தை பாருங்கள்

மேஷம் லக்னமாக வைத்து அதிலிருந்து 5 ஸ்தானங்கள் எண்ணிவர சிம்மம் இராசி வரை ஒரு கோடு அடுத்து சிம்மம் முதல் 5 ஸ்தானங்கள் எண்ணிவர தனுசு இராசி வரை ஒரு கோடு  அடுத்து தனுசு முதல் 5 ஸ்தானங்கள் எண்ணிவர மேஷம் இராசி வரை ஒரு கோடு இவை இணைவதை கண்டால் ஒரு முக்கோணம் போல அமையும் எனவே இது திரிகோணம் என்று அழைக்கபட்டது,

சரி திரிகோணத்திற்கு அவ்வளவு என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம் ஆம் வாழ்க்கையின் போக்கை காண 27 நட்சத்திரங்களில் 9 கிரகங்களின் போக்கை வைத்து கணிக்கிறார்கள் இதில் அஸ்வினி முதலாக ரேவதி வரையிலான நட்சத்திரங்களில் 9 கிரக அதிபதிகள் பகிர்ந்து கொள்கிறார்கள் அதாவது கீழ்காணும் விதமாக -

எண்
பெயர்
அதிபதி
1
அஸ்வினி
கேது
2
பரணி
சுக்கிரன்
3
கார்த்திகை
சூரியன்
4
ரோகிணி
சந்திரன்
5
மிருகஷீரிஷம்
செவ்வாய்
6
திருவாதிரை
ராகு
7
புனர்பூசம்
வியாழன்(குரு)
8
பூசம்
சனி
9
ஆயில்யம்
புதன்
10
மகம்
கேது
11
பூரம்
சுக்கிரன்
12
உத்திரம்
சூரியன்
13
ஹஸ்தம்
சந்திரன்
14
சித்திரை
செவ்வாய்
15
சுவாதி
இராகு
16
விசாகம்
வியாழன்
17
அனுஷம்
சனி
18
கேட்டை
புதன்
19
மூலம்
கேது
20
பூராடம்
சுக்கிரன்
21
உத்திராடம்
சூரியன்
22
திருவோணம்
சந்திரன்
23
அவிட்டம்
செவ்வாய்
24
சதயம்
ராகு
25
பூரட்டாதி
வியாழன்
26
உத்திரட்டாதி
சனி
27
ரேவதி
புதன்

வேதகாலத்தில் மனித வாழ்க்கையை நான்கு விதமாக பிரித்து அதன் அடிப்படையினால் ஆன நால்வகை ஆசிரமங்களும் கடமைகளும் அவை... 

மீதி இந்த விடியோவில் விரிவாக விளக்கபட்டுள்ளது - 



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "12 ஸ்தானங்களில் 1, 5, 9 ஆம் திரிகோண ஸ்தானங்களின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger