ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) ஜாதகம் கணிப்பு - இயற்பியல் மேதை, முக்கிய விஞ்ஞானி...


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) ஜாதகம் கணிப்பு -   இயற்பியல் மேதை, முக்கிய விஞ்ஞானி...

நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என இவ்வகையானவர்களின் ஜாதகங்கள் பார்த்து பார்த்து சலித்துப் போனவர்களுக்காக இதோ இந்த ஜோதிட கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர், புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், அறிவியல் சார்ந்த எந்திரவியல் ( scientific mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவர், கோட்பாட்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவரும், E = mc2 என்ற இவரது சமன்பாட்டை சொன்னால் போதும் குழந்தைகள் முதல் அறிவியலாளர்கள் அனைவராலும் அறியபடும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் ஜாதகத்தின் மூலமாக சிறந்த அறிவியலாளர், சிறந்த கண்டுப்பிடிப்பாளர், அழியா புகழ் போன்றவற்றிக்கான ஜோதிட அமைப்புகளை பார்ப்போம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) ஜாதகம்
முதலில் ஆய்வு, ஆராய்ச்சி என்றால் அதற்கு முக்கிய காரகத்துவம் பெற்றவர் புதன் பகவான் ஆகும் வேத ஜோதிடத்தில் புதன் பகவானை பெரிய விஞ்ஞானி. தர்ம சாஸ்திரம், வித்யா சாஸ்திர நூல்களை படைப்பவர் என்று புகழ்கிறது, மேற்கத்திய ஜோதிடத்தில் புதன் பகவானை கடவுளின் தூதுவர் என்றும் பகுப்பாய்வு மற்றும் கணிப்பு தேவர் என்றும் கூறுகிறது,

இவரின் ஜாதகத்தில் புதனாகபட்டவர் நீசம் போல தெரியும் இது வெறும் மேற்பார்வைக்கே அவரின் இனிய நண்பர் சுக்கிரன் உடன் உச்சம் பெற்றுள்ளதாலும் லக்ன கேந்திரம், சந்திர திரிகோணம் பெற்றுள்ளதாலும் மேலும் துவாதசவர்க்க கட்டங்களில் சதுர்த்தாம்சம், பஞ்சாம்சம், சஷ்டாம்சம் ஆகிய சக்கரங்களில் ஆட்சி அடைவதாலும் நீசபங்க ராஜயோகத்தை புதன் அடைகிறார், நீசபங்க ராஜயோக என்றால் முதலில் கெடுதியான பலன்களை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு பெரிய அளவில் சிறப்பான பலன்களை தரும் அதற்கு உதாரணமாக இவரின் வாழ்க்கையிலேயே ஆரம்பத்தில் எழுதப் பேச முடியாமல் இவர் பத்து வயது வரை இருந்ததாகத் தாய் கருதினாள். 'எந்த உத்தியோகம் அவனுக்கு உகந்தது ' என்று தகப்பனார் ஒரு சமயம் கேட்டதற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர், 'ஆல்பர்ட் எதிலும் உருப்பட்டு சாதிக்கப் போவதில்லை' என்று சொன்னாராம் பின்னால் பெரிய அறிவியல் மேதையாக வந்தார் இது தான் நீசபங்க ராஜயோகம், ஆனால் பலரும் நீசபங்க ராஜ யோகம் அமைந்துவிட்டாதாக நினைப்பர் அது முறையான சரியான கிரக நிலைகளுக்கு மட்டுமே அமையும்.

அதுவும் கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானமான பத்தாம் ஸ்தானத்தில் அதுவும் அவரின் நட்பு கிரகமான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் புதன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார் சனி பகவானே வெடிப்பொருட்கள் (Explosives), எந்திரவியல் (Mechanical) உலோகவியலின் (Metallurgical) காரகன் அதனால் வெடிப்பொருட்கள் (Explosives), எந்திரவியல் மற்றும் உலோகவியலும் தன் ஆய்வு, ஆராய்ச்சி போன்ற அறிவியல் செயல்பாடுகளால் உலக போற்றும் அரிய கண்டுபிடிப்புகளை செய்தார், இதனால் அழிவு தரும் அணுகுண்டு விஞ்ஞானத்திற்கு பின்னால் இவரின் கண்டுபிடிப்புகள் பயன்பட்டு மனித இன அழிவுக்கு துணைபோனது ஆம் சனி பகவான் எமனின் தம்பி அல்லவோ.

ஜாதகத்தில் எட்டாம் வீடு சொல்லும் உண்மை என்ன? இந்த பதிவில் நான் தெரிவித்ததை போல ஆழமான கண்டுஅறியாத சிந்தனைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான ஸ்தானமும் மறைவான சாஸ்திர விஷயங்களை கற்றுக் கொள்ளுதல் வெளிக்கொண்டு வருதல் போன்ற ஸ்தானமும் ஆன எட்டாம் ஸ்தானத்தின் அதிபதி தன் சொந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருவுடன் பரிவர்த்தனையும் ஆகிறார் மேலும் நவாம்சத்தில் உச்சமும் ஆகிறார்,

அதுபோக செவ்வாய் பகவானே பொறியியல் (Engineering), எரிசக்தி (Energy), ஆயுதங்கள் (weapons) காரகத்துவம் பெற்றவர் இவரின் ஜாதகத்தில் எட்டாம் ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார், அதுபோக ஒளியியல், அணு, அணுக்கதிர் வீச்சிக்கு காரகத்துவம் பெற்ற சூரியனின் சாரம் பெற்ற இராகுவும் உடன் இணைகிறார் இதனால் அணு விஞ்ஞானம், எரிசக்தி துறையில் அதுவரை கண்டுஅறியாத மறைவான விஞ்ஞான விஷயங்களை கண்டு கொண்டு வெளிக்கொண்டு வந்து உலக அளவில் அறிவியலில் சாதனைக்குரிய மனிதராக போற்றபடுகிறார்.

வானவியலிலும் (Astronomy) இவர் குறிபிடதக்க கண்டுபிடிப்புகளை செய்துள்ளார் அதாவது விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதைபற்றிய இவரின் பிரபலமான சமன்பாடு தான் E=mc2  சரி விஷயத்திற்கு வருவோம் ஆகாயத்திற்கு காரகத்துவம் பெற்றவர் குரு பகவான் இவரின் முக்கிய கிரகங்கள் குரு வீட்டில் தான் அமைந்துள்ளன அதுபோக 9க்குடை சனியும் 10க்குடைய குருவும் பரிவர்த்தனை யோகமும் அடைந்துள்ளது இதனை 9,10 க்குடையவர்கள் இவர்கள் பரிவர்த்தனை யோகம் பெற்றது தர்மகர்மாதிபதி யோகம் சேர்த்து தரும்ஆகும் இந்த யோகம் அமைந்தவர்கள் செய்யும் செயல்கள் சிறந்த மதிப்பு, மரியாதையை தேடித் தரும், அது மிகச்சிறப்பாக அமைந்திருந்தால் மதிப்பு, மரியாதை, உலகப் புகழ் பெறும் யோகம் எல்லாம் சிறப்பாக அமையும் அத்தகைய யோகம் பெற்றுள்ளது, மேலும் குரு பகவான் உச்சம் அடைந்த செவ்வாயின் சாரம் பெற்று வலுக்கிறார்.

10ல் சூரியன், சுக்கிரன், புதன் கூட்டு அபரிமிதமான நிபுனத்துவ யோகத்தை தரும் சராசரி மனிதரைவிட சிந்திக்க வேகமும் கோணமும் சிறப்பாக இருக்கும், சந்திரன நீசம் ஆனால் அந்த இடத்தின் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றுள்ளதாலும் இன்னும் சில காரணங்களால் சந்திரனும் நீசபங்க ராஜயோகம் பெறுகிறது, புதனின் சாரம் பெற்ற சுக்கிரனின் திசையில் சார்பியல் கோட்பாடு போன்ற பலவிஷயங்களை கண்டறிந்தார், குருவின் சாரம் பெற்ற சூரியன் திசையில் நோபல் பரிசு கிடைத்தது.

இவ்வளவு விஷயங்களை சொன்னாலும் இதில் சில பாதகமான அமைப்புகளும் உள்ளன் அது அவரின் இல்வாழ்க்கை மற்றும் தனிபட்ட வாழ்விலும் மேலும் அலைக்களிக்க படும் துன்பங்களும் என துயரங்களும் உள்ளன ஆனால் நாம் எடுத்துக்கொண்ட கட்டுரை தக்கதை மட்டுமே எழுதி உள்ளேன்.

மேலே சொல்லபட்ட ஜோதிட கருத்துக்கள் சிலருக்கு புரியாமல் இருக்கலாம் ஆனால் இது ஒரு எதிர்கால ஜோதிடம் அறிவியல் வளர்ச்சிக்கான ஜோதிடம் இது தான் பிற்காலங்களில் உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வில் அறிவியல் சார்ந்த துறைகளில் எதில் அவர்களின் வாழ்க்கை அமையலாம் என்பதை தீர்மானிக்க உதவும் ஜோதிட வளர்ச்சி ஆகும், இனிவரும் இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ளதக்கதாக இவை இருக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) ஜாதகம் கணிப்பு - இயற்பியல் மேதை, முக்கிய விஞ்ஞானி..."

கருத்துரையிடுக

Powered by Blogger