கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

கும்பம் லக்னம் பற்றிய அடிப்படை :-
கும்பம் ஸ்திர லக்னம்
கும்பம் காற்று லக்னம்
கும்பம் ஆண் லக்னம்
கும்பம் காம லக்னம்
கும்பம் மேற்கு லக்னம்
கும்பம் சூத்திர லக்னம்
கும்பம் ஒற்றை லக்னம்

65% மேலாக நன்மையான பலன் தரும் கிரகங்கள் சுபர்
65% மேலாக தீமையான பலன் தரும் கிரகங்கள் பாபர்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னம் என்ற தலைவிதியை தீர்மானிக்கும் லக்னாதிபதி சனி பகவான் ஆவார் அவரே பாதி மறைவு ஸ்தானமாம் பன்னிரண்டாம் வீடு  -  அயன சயன, நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதியும் சனி பகவானே எனவே தான் இந்த லக்னம் மர்மமான லக்னம் என்றும் தத்துவ சித்தாந்த லக்னம் என்றும் இறைவனை கும்பத்தில் உள்ள கலச நீரில் வேத மந்திரங்களால் குடிகொள்ள வைத்து அந்த நீரை இறைவனின் சிலையில் கோபுரங்களில் அபிஷேகம் செய்விப்பது மரபு இதிலிருந்து கும்பத்தின் சிறப்பு புரியும் எளிய லக்னம், சமூக லக்னம் என்றும் கூறி அழைப்பர் இரு முரணான காரகத்துவங்களை ஒருங்கே கொண்டுள்ளதால் சனி பகவான் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 65% நன்மையான பலன்களையும் 35%  தீமையான பலன்களும் தரவல்லார். சனி திசையில் முதலில் 65% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 35%  தீமையான பலன்களும் தரவல்லார்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதியும் மேலும் பதினோராம் வீடு  -  லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கு அதிபதியும் குரு பகவானே ஆகும், எனவே கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலையை தீர்மானிக்கும் முக்கிய கிரகமாக குரு திகழ்கிறார் இவர் சிறப்பாக அமைந்தால் பண வசதி நிலைகள் மேம்படும், இருந்தாலும் சனியின் நட்பை குரு விரும்ப மாட்டார் ஆனால் கிடைக்கும் நன்மைகளை பயன்படுத்தி கொள்ளவார், கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் 60% நன்மையான பலன்களையும் 30%  தீமையான பலன்களும் தரவல்லார்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாம் வீடு  -  தைரிய ஸ்தானம், சகோதர ஸ்தானத்திற்கு அதிபதியும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதியும் செவ்வாய் ஆகும் மேலும் ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய கும்ப லக்னத்திற்கு 3,8 ஆம் ஸ்தானங்கள் மாரக ஸ்தானம் ஆகும் மாரக ஸ்தான ஆதிபத்தியமும் பெறுகிறார் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் செவ்வாய் பகவானே, லக்னாதிபதி சனிக்கு செவ்வாய் பகை கிரக தன்மை வரும் எனவே கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பகவான் 55% நன்மையான பலன்களையும் 45%  தீமையான பலன்களும் தரவல்லார்.  இப்படி இருந்தாலும் தொழில் வெற்றி இவரின் கையிலேயே உள்ளது.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் நான்காம் வீடு   -  சுக, வண்டி, வீடு  ஸ்தானம், தாய் ஸ்தானத்திற்கு அதிபதியும், ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கு அதிபதியும் சுக்கிரன் ஆகும், ஸ்திர லக்னமான கும்பத்திற்கு 9 ம் வீடு பாதக ஸ்தானமாக அமைகிறது அதாவது பாதகங்களை ஏற்படுத்த கூடியவரும் சுக்கிரனே இருந்தாலும் லக்னாதிபதி சனிக்கு தீவிர நட்பு கிரகம் எனவே பெரிய பாதகங்களை ஏற்படுத்த மாட்டார், கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் யோகங்களை தரும் யோகர் ஆகும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண ஸ்தானமான ஐந்தாம் வீடு  -  பூர்வ புண்ணிய  ஸ்தானம், புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியும், மறைவு ஸ்தானம் என அழைக்கபடும் ஆயுள்  ஸ்தானம், மர்ம ஸ்தானம், துரதிர்ஷ்ட ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாக வருபவர் புதன் பகவான் ஆவார் 8 மாரக ஸ்தானம் ஆகும், எனவே திரிகோண ஸ்தான 5ஆம் வீட்டிற்கும், மறைவு ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாவதால் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே புதன் திசையில் முதலில் 60% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 40% தீமையான பலன்களும் தரவல்லார்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மறைவு ஸ்தானமாம் என அழைக்கபடும் ஆறாம் வீடு  -  ரண ருண ரோக ஸ்தானம், சேவா ஸ்தானத்திற்கு அதிபதி சந்திரன் ஒற்றை ஆதிபத்திய தன்மை பெற்ற நிலையில் சந்திரனே தடை தாமதம் நோய்கள் தீர்மானிக்கும் முக்கிய காரகத்துவம் பெற்றவர் லக்னாதிபதி சனிக்கு மரியாதை தராத கிரகம் எனவே 25% நன்மையான பலன்களையும் 75%  தீமையான பலன்களும் தரவல்லார். வளர்பிறை சந்திரனானால் சுப தன்மை அதிகமாகவும், தேய்பிறை சந்திரனானால் அசுப தன்மை அதிகமாகவும் இருக்கும் அதை பொருத்தும் நிர்ணயத்து கொள்ள வேண்டும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாம் வீடு - களத்திர  ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும் இல்லற ஸ்தானத்திற்கும் அதிபதி சூரியன் ஆவார் ஒற்றை ஆதிபத்திய தன்மை பெற்ற நிலையில் சூரியனே இல்லற வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கிய காரகத்துவம் பெற்றவர் லக்னாதிபதி சனிக்கு பகை கிரகம் எனவே லக்னந்திற்கு சூரியன் சம அளவில் பலம் பெருவதே நல்லது அதனால் 60% நன்மையான பலன்களையும் 40%  தீமையான பலன்களும் தரவல்லார். சூரியன் சனி இடையே தொடர்பு குறைவாக இருப்பதே நல்லது.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

2 Response to "கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்...."

  1. Unknown says:

    விளக்கம் அருமையாகவும் , நன்றாகவும் உள்ளது........... நன்றிகள்.............

    Unknown says:

    15.07.1979 ஞாயிறு இரவு 8மணி

கருத்துரையிடுக

Powered by Blogger