தொழில்யோகம் காட்டும் பூதக்கண்ணாடி 10 ஆம் இராசிவிருத்தம், 10ஆம் பாத துவைதாம்சம் பகுதி 3…

இந்த போன பதிவை பகுதி படித்துவிட்டு பின் இதை தொடரவும்

விட்ட இடத்தில் இருந்து தொடங்குகிறேன் தற்காலத்தில் மேலும் ஒருவர் செய்யும் தொழிலின் ஆழமான பலத்தை அறிய 10 ஆம் இராசிவிருத்தமும் இன்னும் ஆழமான விவரங்களை அறிய 10ஆம் பாத துவைதாம்ச சக்கரத்தின் பலமும் முக்கியம், ஏனென்றால் இராசிக்கட்டத்தில் வலுவான பலம் அடையும் ஒரு கிரகம் உதாரணமாக தொழில் ஸ்தானமான 10 ஆம் ஸ்தானாதிபதி நவாம்ச, 10 ஆம் இராசிவிருத்த கட்டத்திலும் மற்றும் 10ஆம் பாத துவைதாம்ச கட்டத்திலும் வலுவடைய வேண்டும் அப்படி வலுவடைந்தால் தான் தொழில் யோகம் முழுமையாக பலனடையும்.

சரி 10 ஸ்தானம் அதாவது தொழில், கர்ம ஸ்தானம் முதலில் நாம் தொழில், கர்மம் என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டும் இந்த பிறவி அந்த ஜாதகர் என்ன என்ன செயல்களை செய்ய போகிறார் அதன் மூலம் அவருக்கு கிடைக்கும் மதிப்பு, செல்வாக்கு காட்டும் ஸ்தானம் 10 ஸ்தானம், தொழிலால் பெறும் அதிகாரம், செல்வாக்கு, வெற்றியின் நிலை தரம், இலட்சியம் மற்றும் பொறுப்புகள், பதவி உயர்வு, அரசு மரியாதை இவைகளை காட்டும் ஸ்தானம் 10 ஸ்தானம் ஆகும், 

சரி இன்று வாழ்வின் மிக சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் மிகப் பெரிய பம்புகள் மற்றும் வால்வுகள் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியவரும், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் என தனது நிறுவனங்களை வளர்த்து, 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது நிறுவனத்தின் மூலம் ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய தொழில் சாதனையாளராக அடையாளம் காணப்படும் ஒருவரின் ஜாதகம் இராசிகட்டம் இது
இராசிகட்டத்தில் பாருங்கள் 10 ஆம் ஸ்தானாதிபதி குரு 10 ல் கேதுவுடன் சேர்ந்து ஆட்சி அடைந்துள்ளார் மேலும் பூரட்டாதி 4 ஆம் பாதம் ஆனதால் நவாம்சத்தில் உச்சம் அடைகிறார் மேலும் லாப ஸ்தானமான 11க்குடைய செவ்வாயால் 7 ஆம் பார்வையாக குரு பார்க்கபடுகிறார், மேலும் ஆட்சி அடைந்துள்ள சனியாலும் 3 ஆம் பார்வையாக குரு பார்க்கபடுகிறார் மேலும் 10 ஆம் ஸ்தானத்தில் கேதுவுக்கு திக்பலம் அதிகம் இப்படி சிறப்பான அமைப்பின் காரணமாக மிகச் சாதாரணமாக சைக்கிள் உதிரி பொருட்கள் பின் பம்புகள் மற்றும் வால்வுகள் ஆகியவற்றை விற்கும் சிறிய நிறுவனமாக ஆரம்பித்து பின் பம்புகள் மற்றும் வால்வுகளை தயாரிக்கும் நிறுவனமாக அதை உயர்த்தி கொண்டு போனார்.

10ஆம் பாத துவைதாம்சம் கட்டம்
 

 10ஆம் பாத துவைதாம்சம் கட்டத்தில் பாருங்கள் லக்னத்திற்கு 5, 10 ஆம் ஸ்தானாதிபதி செவ்வாய் 7 உச்சம் அடைகிறார் 2க்கும் 11க்கும் பரிவர்த்தனை யோகம், இராசிகட்டத்தில் 10 ஆம் ஸ்தானாதிபதி குரு இதில் 5ல் அமர்ந்து 9, 11, 1 ஆகிய வீடுகளை பார்வை செய்கிறார் இவர் தமது சகோதரகள் உடன் சேர்ந்து முன்னேறியவர் சகோதரர்களின் கடும் உழைப்பு மற்றும் ஒற்றுமையால் பலமடங்கு தொழிலில் உயர்ந்தார்கள்.

10ஆம் இராசிவிருத்த கட்டம்
 10ஆம் இராசிவிருத்த கட்டத்தில் பாருங்கள் இராசிகட்டத்தில் 10 ஆம் ஸ்தானாதிபதி குரு இதில் 8 ல் உச்சம் அடைகிறார் மேலும் இராசிகட்டத்தில் ஆட்சி அடையும் சனி பகவான் இதிலும் ஆட்சி பெற்று சிறந்த வர்க்கோத்தம பலன் பெறுகிறார் எனது பதிவுகளில் நான் பலமுறை எழுதியது போல் பல ஊழியர்களுடன் பலமாக தொழிற்சாலை ஒருவர் அமைக்க வேண்டுமானால் சனி பகவான் பலமாக அவரது ஜாதகத்தில் இருக்க வேண்டும் மேலும் 10ஆம் இராசிவிருத்த கட்டம், 10ஆம் பாத துவைதாம்சம் கட்டம் என உள்ளார்ந்த அம்சங்களிலும் ஆழமான பலம் பெற வேண்டும் இவரின் ஜாதகத்தில் அவ்வாறு சனி பகவான் பலமானதுடன் குருவையும் பார்க்கிறார் மேலும் தனவியாபார கிரகமான குருவும் ஆழமான பலம் அடைந்ததால் பம்புகள் மற்றும் வால்வுகள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோ உதிரிபாகங்கள் ஆகியவற்றை தயாரித்து அதை விற்பனை செய்யும் பெருநிறுவனங்களின் குழுமம் (Corporate group) ஆக அதை வளர்த்து பரந்து விரிந்த முன்னேற்றத்தை கண்டார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "தொழில்யோகம் காட்டும் பூதக்கண்ணாடி 10 ஆம் இராசிவிருத்தம், 10ஆம் பாத துவைதாம்சம் பகுதி 3…"

கருத்துரையிடுக

Powered by Blogger