ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 6 - சகட யோகம்…

ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 6 - சகட யோகம்

ஜோதிடத்தில் உள்ள அசுப தோஷங்கள் பற்றி சில சில தோஷங்களாக இந்த பகுதிகளில் பார்த்து வருகிறோம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ஒரு தோஷமானாலும் அது அந்த ஜாதகரீதியாக தீவிரமானால் தான் அந்த தோஷங்களால் தீய பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


சகட யோகம்
தோஷங்கள் எழுதும் பதிப்பில் சகட யோகம் என்று எழுதுகிறாரே என்று உங்களுக்கு தோன்றலாம் யோகம் என்றால் ஒன்றிணைவு என்று பொருள் இதை பொதுவாக யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று தவறாக பொருள் கொள்ளப்படுகிறது அப்படி அல்ல ஜோதிட முறையில் பொருள் கொள்வதானால் நவகிரகங்களின் இராசி, ஸ்தான மற்றும் தங்களுக்குள் ஏற்படும் ஒருங்கிணைப்பு அல்லது ஒழுங்கமைப்புக்கு "யோகம்" என்று பொருள் ஆகும் சரி விஷயத்திற்கு வருவோம்.

சலனமதியோன் என்ற கூறப்படும் சந்திரன் தெய்வமந்திரி என்று போற்றப்படும் குரு பகவானுக்கு 12 ஆம், 8ஆம், 6ஆம் இடத்தில் இருந்து ஜன்ம லக்னத்திற்கு சந்திரனோ குருவோ இதில் யாரோ ஒருவர் 12 ஆம், 8ஆம், 6ஆம் இடத்தில் அமர்ந்தால் அதற்கு சகட யோகம் ஏற்படும்.
இதன் பலன்கள் -
மனம் பலகீனமானவராக இருக்க வைக்கும், வாழ்வில் அதிர்ஷ்டங்கள் குறைவாக இருக்கும், பற்றாக்குறையான வசதி வாய்ப்புகள், முன்னேற்றம் மேலும் கீழும் ஆக இருக்கும், வறுமை, இடர்பாடுகள் மற்றும் உறவினர்கள் பகை போன்றவை ஏற்படும், மற்ற கிரகங்கள் சாதகமாக இருந்தால் மேலே சொன்ன பலன்கள் குறைவாக நடக்கும்.
சகட யோகம் ஒரு வகை உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 6 - சகட யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger