சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதை எவ்வாறு அணுக வேண்டும்?...


சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதை எவ்வாறு அணுக வேண்டும்?...

தினசரி (காலண்டர்), மாதநாட்காட்டி (monthly calendar)  ஆகியவற்றில் சந்திராஷ்டமம் இன்று எந்த எந்த நட்சத்திரங்களுக்கு உள்ளது என்று சுட்டி காட்டியிருப்பார்கள் மேலும் உங்களிடமும் பலர் இந்த வார்த்தையை சொல்லி இருக்கலாம் எனவே சந்திராஷ்டமம் என்றால் என்ன ஒருவர் பிறந்த ஜென்ம ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் கோச்சாரத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்று ஜோதிட முன்னோர்கள் சொல்கிறார்கள். சந்திரன் + அஷ்டமம் (எட்டு) = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் கோச்சாரத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம காலம்' என்பர்.

சந்திராஷ்டம காலம் என்று சொல்லப்படும் இரண்டேகால் நாட்களிலும் முழுமையான தாக்கம் இருக்காது அதில் உங்கள் நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே உங்களுக்கு சந்திராஷ்டமத்தின் தாக்கம் இருக்கும் அதிலும் குறிப்பாக சொல்வதானால் உங்களின் நட்சத்திர பாதத்திற்கு 65 ஆம் பாதம் தொடங்கி 66,67,68 ஆம் பாதம் வரை சந்திரன் கோச்சாரத்தில் வரும் காலமே சந்திராஷ்டமத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

உங்களின் பிறந்த நட்சத்திரம்
உங்களின் சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி
அனுஷம்
பரணி
கேட்டை
கார்த்திகை
மூலம்
ரோஹிணி
பூராடம்
மிருகசீரிஷம்
உத்திராடம்
திருவாதிரை
திருவோணம்
புனர்பூசம்
அவிட்டம்
பூசம்
சதயம்
ஆயில்யம்
பூரட்டாதி
மகம்
உத்திரட்டாதி
பூரம்
ரேவதி
உத்திரம்
அஸ்வினி
அஸ்தம்
பரணி
சித்திரை
கார்த்திகை
சுவாதி
ரோஹிணி
விசாகம்
மிருகசீரிஷம்
அனுஷம்
திருவாதிரை
கேட்டை
புனர்பூசம்
மூலம்
பூசம்
பூராடம்
ஆயில்யம்
உத்திராடம்
மகம்
திருவோணம்
பூரம்
அவிட்டம்
உத்திரம்
சதயம்
அஸ்தம்
பூரட்டாதி
சித்திரை
உத்திரட்டாதி
சுவாதி
ரேவதி
விசாகம் 

சரி சந்திராஷ்டமத்தின் தாக்கங்கள் என்ன?

ஒன் கோள் சுற்றில் உருவந்த நாள்மீனுக்கு இரு
      நான்கில் வெண்கதிரோன் வந்த நாள்முதலாய்
தன் மதி மயக்கும் பொங்கும் எழாத எண்ணமெல்லாம்
      எழும் சோர்வு தாக்கும் எதிர்பாரா தொடர்கள்
வன்மை கொள்ளும் ஆகையால் நற்காரியம் தவிர்
      நிதானங்கொள் ஆல்விழுது நிலம் தீண்டும் வரை
முன்பின் அசையும் தீண்டினால் அடங்கும் கலக்கம் தீர
      சென்று இறைதாள் பற்று இது கோள்முனி வாக்காம்
                                                                              - கோள்முனி ஞானமாயிரம்
இதன் பொருள் -
ஒருவரது ஜென்மராசிக்கு கோட்சார ரீதியாக 8 ஆம் வீட்டில் சந்திரன் (வெண்கதிரோன்) வரும் காலம் தொட்டு மனதில் சோர்வு மயக்கம ஏற்படும் சில சமயங்களில் அதீதமாக மனத்தில் எண்ணங்களும் ஏற்படும் எதிர்பாராதவாறு தீடீர் என சில பிரச்சினைகள் எழுந்து அதை தீர்பதற்க்கே அந்த நாள் முழுவதும் கழியும் (அந்த நாட்கள் வீணான வேலையையோ அல்லது செய்த வேலை முழுமை பெறாமல் நீண்டு கொண்டு போகுதல் போன்றவை) எனவே புதிதாக தொடங்க இருக்கும் சுபகாரியங்களையோ அல்லது தொழிலில் புதிய தொடக்கங்களையோ செய்வதை தவிர்க்க வேண்டும், மனதை நிதானப்படுத்தி பொறுமையாக காரியங்களை ஆற்ற வேண்டும், எப்படி ஆலமரத்தின் விழுதுகள் நிலத்தை தொடும் வரை ஆடிக்கொண்டே இருக்கும் அதுவே நிலத்தை தொட்ட பின் அடங்கி மண்ணுக்குள் சென்று பலப்படும் அதுபோல சந்திராஷ்டம காலங்களில் இறைவனை வழிபடுவதன் மூலம் மனம் நிதானப்பட உதவும் இதுவே கோள்முனி யாம் கூறும் கருத்தாம்.

இதன் மூலம் தெரிவது சந்திராஷ்டம காலங்களில் புதிதாக தொடங்க இருக்கும் பெரிய காரியங்களை அதாவது திருமணம், வீடு கட்டுதல், தொழிற்சாலையோ கடைகளையோ அமைத்தல் இது போன்ற காரியங்களை அந்த நாட்களில் தவிர்க்க வேண்டும், மனதை நிதானமாக வைத்துக்கொள்ள அருகில் உள்ள ஆலயங்களில் வழிபட்டு அன்றை பணிகளை மேற்கொள்ள வேண்டும், சந்திராஷ்டம காலங்களில் பெரிதாக பாதிப்புகளை எதுவும் தராது ஆனால் அன்றாடம் நடக்கும் தினசரி பணிகளுக்கு சில இடையூறுகளை தரும் இதுவே அந்த அந்த ஜாதகரின் திசை புத்திகள் அவருக்கு சாதகமாக இல்லையென்றால் பெரிய இடையூறுகள் நிகழலாம்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதை எவ்வாறு அணுக வேண்டும்?..."

கருத்துரையிடுக

Powered by Blogger