தமிழ்நாட்டில் பெரும் மழை எப்போது நிற்கும்?…. விரிவான விளக்கம்


தமிழ்நாட்டில் பெரும் மழை எப்போது நிற்கும்?. விரிவான விளக்கம்

எமது தமிழ்நாட்டில் பெரும் மழை எப்போது நிற்கும்?.  என்ற இந்த பதிவை விரிவாக விளக்க சொல்லியும் மேலும் பெரும் வெள்ளத்திற்கு முன்பே அடியேன் பதிவு செய்திருந்த செவ்வாய், 17 நவம்பர், 2015 அன்று பதிவு செய்த அடைமழையும் பெரும் வெப்பமும் அதை காட்டும் கிரகங்களு... என்று பதிவில் உள்ள கோள்முனியாரின் பாடலின் பொருள் விளக்கத்தை தரச்சொல்லியும் பல அன்பர்கள் விடுத்த கோரிக்கையின் படியும் இந்த பதிவை எழுத தொடங்குகிறேன்.

முதலில் அடைமழையும் பெரும் வெப்பமும் அதை காட்டும் கிரகங்களு... என்ற பதிவில் உள்ள கோள்முனியாரின் பாடலின் பொருள் விளக்கத்தை காண்போம்,
முதல் பாடலின் விளக்கம் -
சூரியன் (கதிரொளியோன்) தன் கதிரின் விரியத்தை இழக்கும் ஹஸ்தம் (அத்தம்) எண்ண அனுஷம் (அனுதம்) வரை சூரியனோடு நீரோன் (சந்திரன்) கூடி நிற்க அதே சமயம் விதி காட்டும் வினையோன் சனி (காரி) தன் ஆதிபத்தியம் பெற்ற நட்சத்திரத்தில், தனுயர் (தன் உச்ச வீட்டில்), தன் இராசிகளில் (மகரம், கும்பம்) இருந்து, திதி இழக்கும் அதாவது திதியினால் ஏற்படும் தீட்டு இல்லாத அமாவாசை காலத்தில்,

சந்திரனோ அல்லது சூரியனோ இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் நீள்கரும் பாம்பின் காலில் அதாவது இராகுவின் நட்சத்திரத்தில் அது சமயம் வந்து சேர்ந்தால் பெரும் மழைக்காலம் தான், ஆற்றில் நீர் பெருகும் (ஆற்றில் வெள்ளம் ஏற்படும்), கருமேகங்கள் கூடி நிற்கும் நிலம் எல்லாம் நீரினால் சூழும் அடுத்த யுக கூறு திரும்பும் வரை இந்த விதி இருக்கும்.

இரண்டாவது பாடலின் விளக்கம் -
நான் மேலே சொன்ன விதி உலகில் எந்த நிலத்தில் சனியின் மூலக்கதிரும், சூரியனின் மூலக்கதிரும், சந்திரனின் மூலக்கதிரும் ஒரு சேர மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய இராசிகளில் விழுகிறதோ அந்த நிலத்தில் நீர் வான்கூடும் பெரும் மழை பெய்ய காற்று கூடி குளிரும் பின் பெரும் மழை பெய்து வெள்ளத்தால் நிலம் மூழ்கும், அதன் எதிர் துருவத்தில் வெப்பம் மிக அதிகமாகி வறட்சி தாங்க கூடி தாவரங்கள் தான் பிழைக்கும், காடுகளில் தீ பிடித்து எரியும் அடுத்த யுக கூறு திரும்பும் வரை இந்த விதி இருக்கும்.

இப்போதும் முழுதாக புரியாததது போல் தங்களுக்கு தோன்றலாம் சரி நடந்ததை சொன்னால் உங்களுக்கு புரியும்

11 நவம்பர் 2015 அன்று அம்மாவாசை சூரியன் ஹஸ்தம் நட்சத்திரத்தை தாண்டி உள்ளார் (சந்திரனோ அல்லது சூரியனோ இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் நீள்கரும் பாம்பின் காலில் அதாவது இராகுவின் நட்சத்திரத்தில் அது சமயம் வந்து சேர்ந்தால் பெரும் மழைக்காலம் தொடங்கும்) 10 நவம்பர் 2015 முதல் சந்திரன் இராகுவின் நட்சத்திரமான ஸ்வாதி நட்சத்திரத்திற்கு வந்து சேர்ந்தார் பெரும் மழைக்காலம் ஆரம்பித்து பின் நடந்து தமிழ் நாடே அறியும்.

30 நவம்பர் முதல் 1,2,3 டிசம்பர் 2015 தமிழ் நாட்டில் பெரும் மழை பெய்து அடையாறு, கூவம் ஆறு, பாலாறு என அனைத்து ஆறுகளிலும் அதீத வெள்ளத்தால் பாதிப்படைந்த தினங்கள்

பெரும் மழை உச்சமாக இருந்த சமயம் சூரியன் அன்று அனுஷம் நட்சத்திரத்தில் இருந்தார் அவருடன் சனியும் அவரின் ஆதிபத்தியம் பெற்ற நட்சத்திரத்திமான அனுஷம் நட்சத்திரத்தில் இருந்தார் (விதி காட்டும் வினையோன் சனி (காரி) தன் ஆதிபத்தியம் பெற்ற நட்சத்திரத்தில்) அதே சமயம் நீரோன் ஆன சந்திரன் 2 1/2 நாட்கள் ஆட்சி பெற்றும் இருந்தார் பெரும் வெள்ளத்தால் நாடே துவண்டு விழுந்துள்ளது.

ஏன் இன்னமும் மழையால் தமிழகம் பாதித்து கொண்டுதான் இருக்கிறது இயற்கை என்பது செயற்கை போல் அல்ல நீங்கள் ஸ்விட்ச் போட்ட உடன் ஆன் ஆவதற்கும் ஆவ் செய்த உடனே நிற்பதற்கும், இயற்கை மெல்ல மெல்ல தான் சூரியன் சொல்லபட்ட நட்சத்திரங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர நகர நிலைமை சீர் அடையும்.

வருகிற டிசம்பர் 17 ஆம் தேதிக்கு பிறகு இயற்கை சூழலின் நிலைமை பெருமளவு சீர் அடையும் நாளை (11 டிசம்பர் 2015) வரும் அமாவாசை முதல் இயற்கை சூழலின் நிலைமை சீர் அடைய ஆரம்பிக்கும்.

 இதை எல்லாம் முன்னே உங்களுக்கு தெரியுமா என்று என்னிடம் கேட்டால் தெரியாது என்று தான் சொல்வேன் செவ்வாய், 17 நவம்பர், 2015 அன்று அடைமழையும் பெரும் வெப்பமும் அதை காட்டும் கிரகங்களு... என்ற பதிவை போட்ட போது பெரிதாக ஏதோ நடக்க போகிறது என்று தான் தெரியும் மேலும் இறைவன் அழிக்க நினைத்தால் யாராலும் தடுக்க முடியாது ஏன்னென்றால் அழிவான அனைத்து பொருகளையும் படைத்தவனே அவன் தான் மேலும் ஜோதிடனின் வேலை தான் உணர்ந்ததை முன் கூறல் மட்டுமே படைப்பது காப்பாத்துவது அழிப்பது இறைவனின் வேலை,

மேலும் பஞ்சபூதங்களுக்கு உரிய மரியாதை, பூஜை போன்றவற்றை செய்திருந்தால் இது போன்று வாராது என்று சொல்லவதும் பாதி உண்மை தான் என்ன தான் நீங்கள் பூஜை செய்தாலும் பூம்புகார் கடலுக்குள் போக வேண்டும் என்று இறைவன் முடிவெடுத்துவிட்டால் பூம்புகார் கடலுக்குள் போகும் அதே போல் தான் அனைத்து நகரங்களுக்கும் இறைவன் முடிவை பொறுத்தே எல்லாம், இறைவன் நிகழ்த்தும் நியதி ஒன்றே மாறாது.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "தமிழ்நாட்டில் பெரும் மழை எப்போது நிற்கும்?…. விரிவான விளக்கம்"

கருத்துரையிடுக

Powered by Blogger