அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...


அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள்...
நட்சத்திரம் - அஸ்வினி
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் - கேது
நட்சத்திர அதிதேவதைகள்  - அஸ்வினி குமாரிகள், கணபதி,சரஸ்வதி
நட்சத்திர யோனி - ஆண் குதிரை
நட்சத்திர கணம் - தேவம்
நட்சத்திர பூதம் - ஆகாயம், நிழல்
இராசி இருப்பு - மேஷம்
இராசி நாதன் - செவ்வாய்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும் ஜென்ம இராசி மேஷ இராசியாகும்.
ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண இயக்கத்தை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
வைராக்கியம், தைரியம், கொள்கை பிடிப்பு, சுயமரியாதை ஆனவர்கள், வேகம், தீர்க்கமான முடிவு எடுப்பது, போதையில் விருப்பம், கடவுள் நம்பிக்கை, ஆன்மீக பணி, மனக்குழப்பம், கல்விமான், செயல்வீரன், புதுமை ஆக்கல், பிரகாசமான தோற்றம், கோபத்தை அடக்கி கொள்பவர் ஆனால் ஓரளவுக்குத் தான், சேட்டைகளில் பிரியம், புரட்சியான சிந்தனை, ஜெனித்த போது குடும்பத்தில் ஏழ்மையான சூழல், வீரியமான ஆளுமை உடையவர், தோல்விகளை தாங்கமுடியாது, போட்டியில் ஈடுபாடு, தத்துவார்த்தமான தர்க்கங்களில் நாட்டம், உடல்வலுவில் ஆர்வம், காதல் வந்தால் அதில் தீவிரம் காட்டக்கூடியவர்கள், மேம்பட்ட உணர்திறனைக் கொண்வர்கள், பண்பாட்டு வழக்கங்கள் விழாக்களில் நாட்டம், பய உள்ளுணர்வு அதிகம் உள்ளவர்கள், எளிதில் இவர்களுடன் பழகிவிட முடியாது ஆனால் பழகிவிட்டால் ஆழமாக பழக கூடியவர்கள்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்கள் -
காரம், சுவை கூட்டபட்ட உணவுகள், உப்பு நிறைந்த, சூடான உணவுகள், அமிலத்தன்மை உணவுகள், முட்டை, இறைச்சி, மீன், அதிகமாக வேக வைத்த உணவுகள், ஊறவைத்த உணவுகள், சூரிய வெப்பத்தாலோ அல்லது குளிர் ஊட்டியே பாதுகாத்த உணவுகள், ரஜோ குண உணவுகள், அதிகமான மசாலாக்கள் பயன்படுத்தபட்ட உணவுகள், உடல் வெப்பத்தை தூண்டக்கூடிய பழங்கள் காய்கறிகள் ஆகியவை பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்களாக இருக்கும்.
 
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த அடியார்கள் & மகான்கள் -
உருத்திர பசுபதி நாயனார், திருமூலர்

0 Response to "அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger