ஜாதகத்தில் லக்னம் எதற்காக பார்க்கவேண்டும்...


லக்னமே ஒரு ஜாதகரின் உயிர் ஸ்தானம் அதுவே இந்த பிறவியில் அவரின் தலைவிதியை காட்டும் ஸ்தானம், இது முற்பிறவி வினைகள், வினைகளுக்கு ஏற்ற உடல் பெறல், இந்த பிறப்பின் நோக்கம், ஜீவாத்மா உடல் பெற்று அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும்.

முக்கியமாக லக்கினாதிபதி, லக்னம் பெறும் சாரம் அந்த சாராதிபதி தன்மை அவர் லக்னத்திலிருந்து பெறும் காரகதுவம் போன்றவை தான் அந்த ஜாதகரின் குணம், உடல் அமைப்பு, அவரின் நடத்தை, இந்த வாழ்க்கையில் அவருக்கான  வசதிநிலை, உடல்வாகு, நிறம், அழகு, பால்ய பருவம், கனவு, அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகள், மகிழ்ச்சிகள், ஜெனித்த போது உள்ள குடும்ப நிலை ஆகியவற்றை காட்டும் ஸ்தானம், சுருக்கமாக சொல்வதானால் இந்த பிறவியில் முக்கியமாக எதை செய்வதற்க்காக இந்த உலகில் வந்திருக்கிறார் என்பதை காட்டுவது லக்கினமே அதிலும் லக்கினம் பெற்ற சாரமே மிகவும் முக்கியம் ஏன்னென்றால் எல்லாரும் பிறக்கிறார்கள் இறக்கிறார் இருந்தாலும் வாழ்க்கையில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரியங்களை தனித்துவமாக அனுபவித்துவிட்டும் மற்றும் செய்துவிட்டும் போகிறார்கள்.

எனவே லக்கினாதிபதி நிலை, லக்னம் பெறும் சாரம் அந்த சாராதிபதி தன்மை மற்றும் லக்னத்தை கொண்டு ஒரு ஜாதகரின் என்ன அம்சங்களையேல்லாம் பார்க்கலாம் என்பதை பார்ப்போம்.

ஆத்ம ஸ்தானம்
உடல் அமைப்பு
நிறம்
உடல் வடிவம்
உயிர்சக்தி
மனநிலை & போக்குகள்
ஆளுமை
வாழ்க்கை போராட்டம்
மரியாதை
கௌரவம்
செழிப்பு
பொதுவான வாழ்க்கை
தலை
முகம்
நற்பண்புகள்
ஆயுள்
வாழ்க்கை கட்டமைப்பு
தொடக்க கால சூழ்நிலை
குழந்தைப்பருவம்
தோற்றம்
ஜெனித்த போது உள்ள குடும்ப நிலை
நடத்தை
ஆன்மீக மனப்பான்மை
வாழ்க்கை தரம் & தலம்
சுப நிகழ்ச்சி
பொது ஆரோக்கியம்
உங்களுடைய நடை  
உங்கள் பாணி
உங்கள் விருப்பு வெறுப்பு

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "ஜாதகத்தில் லக்னம் எதற்காக பார்க்கவேண்டும்..."

கருத்துரையிடுக

Powered by Blogger