ஜாதகத்தில் மூன்றாம் வீடு சொல்லும் உண்மை என்ன?



மூன்றாம் வீடே தைரிய வீரிய ஸ்தானம், சகோதர ஸ்தானம், என்று பொதுவாக கூறினாலும் இது ஒரு ஜாதகரின் வாழ்க்கையின் அடிப்படை வெற்றி, காரியத்தை நடத்திச் செல்லும் திறமை, போர்குணம், போட்டியை எதிர்கொள்ளும் திறன்கள் ஆகிய பல விஷயங்களின் காரகத்துவமும் கொண்டது எனவே ராசி சக்கரத்தில் மூன்றாம் வீட்டின் பலத்தை அறிய அதன் அதிபதியின் பலத்தையும், செவ்வாயின் பலத்தையும், மூன்றாம் அதிபதி நின்ற ராசி, சாரத்தையும் பார்க்க வேண்டும்.

மூன்றாம் வீடு காரகத்துவங்கள்: -

இளைய சகோதரம்
தைரியம்
துணிவு
மனோதிடம்
காரிய வெற்றி
செயல்திறம்
தகவல் தொடர்பு
சிறு பயணம்
அன்றாட பயணம்
கைத்திறன்
நினைவாற்றல்
மனப்பற்று
வீர தீர செயல்கள்
பயண வாகனங்கள்
தகவல் சாதனங்கள்
சுய வெளிப்பாடு
பங்காளி சொந்தங்கள்
ஆவணம் படுத்தல்
முடிவெடுக்கும் துணிசல்
பிரச்சினைகளை எதிர்கொள்ளல்
கற்கும் விதம்
பெற்றோர் மரணம்
எழுத்துகள்
குடியிருப்பு மாற்றம்
வணிக ஒப்பந்தங்கள்
வதந்திகள்
ஆயுதம்
நரம்பு மண்டலம்
தொண்டை
தோள்பட்டை
முயற்சி
இசை ஞானம்
வேலையாட்கள்
பெரிய விளையாட்டு, அடிப்படை நட்பு
மேல்நிலை கல்வி தொடக்கம்
வதந்திகள்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜாதகத்தில் மூன்றாம் வீடு சொல்லும் உண்மை என்ன?"

கருத்துரையிடுக

Powered by Blogger