சனி, 16 மே, 2015

ஜாதகத்தில் ஏழாம் வீடு சொல்லும் உண்மை என்ன?


ஜாதகத்தில் ஏழாம் வீடு சொல்லும் உண்மை என்ன?
களத்திர ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும் இந்த ஸ்தானத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் அதிகம் குறிப்பாக இளவயதினர் தங்களின் திருமணத்திற்க்காகவும், பெரியவர்கள் தங்களின் பிள்ளைகளின் திருமணத்திற்க்காகவும் அந்தளவு முக்கியமான வாழ்க்கை துணையை பற்றி கூறும் ஸ்தானமாகும் மேலும் வாழ்க்கை துணையாக வருபவர்கள் எப்படிபட்டவர்கள், மேலும் ஒரு ஜாதகருக்கு திருமணம் நடக்கும் காலம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் போன்றவற்றையும் அறிந்து கொள்ள உதவும் ஸ்தானம்.

மேலும் கூட்டு வியாபாரம், வர்த்தகம், வணிக பங்காளி, வெளிநாட்டு நாடுகளில் பெறும் செல்வாக்கு மற்றும் புகழ், பாலியல் வாழ்க்கை, திருமண உறவுகள், மாரக ஸ்தானம் (maraka sthana) என்றும் கூறுவர் அதாவது மரணம் நிகழ்வதற்க்கான ஏற்பாடுகளை செய்யும் ஸ்தானம். 

என் ஒவ்வொரு முன்னேற்றதிற்கு பின்னாலும் என் மனைவியிருக்கிறாள் என்று கணவன்மார்களும், என் ஒவ்வொரு முன்னேற்றதிற்கு பின்னாலும் என் கணவன்யிருக்கிறார் என்று மனைவிமார்களும் சொல்லிக்கொள்கிறார்களே அதற்க்கான சிறப்பை எல்லாம் காட்டும் ஸ்தானம் இதுவே ஏன்னென்றால் ஏழாம் வீடு 10 ஆம் வீட்டிற்கு 10 ஆம் வீடு ஆகும் அதனால் வாழ்க்கை துணையால் வரும் வேலைவாய்ப்பு, தொழில் வசதி, தொழில் உதவிகளை காட்டும் ஸ்தானமும் இதுவே.

ஏழாம் வீடு கொண்டு அறியும் காரகத்துவங்கள் :-

திருமண வாழ்க்கை
மனைவி (துணைவி)
பங்குதாரர்கள்
மக்கள் தொடர்பு
மற்றவர்கள் உங்களிடம் நடந்து கொள்ளும் முறை
மாரக ஸ்தானம்
உடன்படிக்கை
வர்த்தக உறவுகள்
வர்த்தகம்
பார்வை இழப்பு
மனைவியின் நிலை
விவாகரத்து
பாலியல் வாழ்க்கை
நுண்கலைகள்
கவின்கலைகள்
பாலியல் பிரச்சினைகள்
கூட்டு வியாபாரம்
வாழ்க்கை துணையால் வரும் வேலைவாய்ப்பு
வாழ்க்கை துணையால் வரும் தொழில் வசதி
வாழ்க்கை துணையின் தொழில் உதவிகள்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக