ஜாதகத்தில் கேது இரண்டில் (2ல்) இருந்தால்

ஜாதகத்தில் கேது லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் இராகு இரண்டில் (2ல்) இருந்தால்

ஜாதகத்தில் இராகு லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -








ஜாதகத்தில் செவ்வாய், புதன் சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்...

 ஜாதகத்தில் செவ்வாய், புதன் சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்...


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் சனி இரண்டில் (2ல்) இருந்தால்...

ஜாதகத்தில் சனி லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : - 



ஜாதகத்தில் சுக்கிரன் இரண்டில் (2ல்) இருந்தால்

ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : - 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

திருமுருக கிருபானந்த வாரியார் ஜாதகம் - இலக்கிய ஞானம், சொற்பொழிவு, ஆன்மிக உயர்நிலை...

திருமுருக கிருபானந்த வாரியார் ஜாதகம் கணிப்பு

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் ஐயாவின் ஜாதகம் மூலம் இலக்கிய ஞானம், சொற்பொழிவுத்திறன், ஆன்மிக உயர்நிலை போன்றவற்றிற்கான சோதிட பலன்களை பார்போம்.
பிரபல ஜாதகங்கள்
திருமுருக கிருபானந்த வாரியார் ஜாதகம்


ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 2 - தேவ்திரிகோண யோகம், தர்மகர்மாதிபதி யோகம்...


ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


இந்த தொகுப்பில் தேவ்திரிகோண யோகம், தர்மகர்மாதிபதி யோகம் ஆகிவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவ்திரிகோண யோகம்

ஜோதிடத்தில் திரிகோண ஸ்தானங்கள் என்று கூறப்படுகின்ற லக்னம் என்ற 1 ஆம் வீடு, 5 ஆம், 9 ஆம் ஆகிய ஒரு திரிகோண ஸ்தானங்களை ஒன்று கூட விட்டு போகாமல் இராகு, கேதுவை தவிர குரு, சுக்கிரன், சந்திரன், புதன், சூரியன், சனி, செவ்வாய் ஆகிய 7  கிரகங்களில் ஏதேனும் 5 கிரகங்கள் திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் அது தேவ்திரிகோண யோகம் ஆகும்.

இதன் பலன்கள் பிறக்கும் போதிருந்தே செல்வ, வசதி வாய்ப்புகள், பூர்வீக சொத்துக்கள் பெற்றவராக அல்லது அவர் வளர வளர உலக ஞானம், செல்வ, வசதி வாய்ப்புகள், செல்வாக்கு யாவும் அவரை வந்து சேரும், அவர் வாழ்வில் எங்கு சென்றாலும் அதிர்ஷ்டம் அவரை வரவேற்று காத்திருக்கும், செய்யும் செயல்கள் நிறைவாக கைகூடும்.

இந்த யோகத்தின் பலனை முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் 5 கிரகங்களில் குறைந்தது இரண்டு கிரகங்கள் ஆவது 1 ஆம் வீடு, 5 ஆம், 9 ஆம் ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களாக இருக்க வேண்டும் அப்போதே பலன் முழுதாக கிடைக்கும்.
தேவ்திரிகோண யோகம் ஒரு வகை உதாரண படம்

 தர்மகர்மாதிபதி யோகம்

ஜோதிடத்தில் திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் ஆன 9, 10 ஆம் வீட்டின் அதிபதிகள் தர்ம - கர்ம அதிபதிகள் ஆகும், ந்த இரு ஸ்தானங்களுக்கும் உரிய அதிபதி கிரகங்கள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் அதாவது 9 வீட்டின் அதிபதி 10 ஆம் வீட்டில் அமர்ந்து 10 வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டில் மாறி அமர்வது அல்லது 9 வீட்டின் அதிபதி 10 ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று 10 வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் அமர்வதாலும்,  இரு ஸ்தானங்களுக்கும் உரிய அதிபதி கிரகங்கள் சேர்ந்து திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் அமர்வதாலும் இந்த தர்மகர்மாதிபதி யோகத்தை அடையும்.

முதல் தரமான தர்மகர்மாதிபதி யோகம் - 9 வீட்டின் அதிபதி 10 ஆம் வீட்டில் அமர்ந்து 10 வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டில் மாறி அமர்வது

இரண்டாம் தரமான தர்மகர்மாதிபதி யோகம் -  இரு ஸ்தானங்களுக்கும் உரிய அதிபதி கிரகங்கள் சேர்ந்து திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் அமர்வது

மூன்றாம் தரமான தர்மகர்மாதிபதி யோகம் -  9 வீட்டின் அதிபதி 10 ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று 10 வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் அமர்வது

இந்த யோக பலன்கள் செய்யும் செயல்கள் சிறந்த மதிப்பு, மரியாதையை தேடித் தரும், அதீதமான பொன் பொருள் ஈட்டுவான், தொழில் பெயர் புகழ் பெறுவார், தாராளமாக தர்ம காரியங்களைச் செய்வான், உயர் பொறுப்புகள் பதவிகளை பெறுவார்.

இந்த யோகம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தால் அரசாங்க மற்றும் வர்த்தக தொழிற்சபைகளால் மதிப்பு, மரியாதை, அங்கீகாரம், உலகப் புகழ் பெறும் யோகம் எல்லாம் சிறப்பாக அமையும்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


ஜாதகத்தில் குரு இரண்டில் (2ல்) இருந்தால்

ஜாதகத்தில் குரு லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : - 


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


குமார் மங்கலம் பிர்லா ஜாதகம் - உயர் குடும்பத்தில் பிறப்பதற்கும், செயல் திறனுக்கும்...

பிரபல ஜாதகங்கள்
இந்தியாவில் டாடா, பிர்லா தொழில், வர்த்தக துறைகளில் கொடிகட்டி பறக்கும் பணக்கார குடும்பங்கள் இதை தெரியாதவரே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு புகழும் பெற்றவர்கள் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவரும், ஆதித்ய பிர்லா குழுமத்தின் (Aditya Birla Group Chairman) தலைவராகவும் உள்ள குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla) அவர்களின் ஜாதகத்தை பற்றியே இப்போது பார்க்க போகிறோம், உயர்ந்த செல்வந்த குடும்பத்தில் பிறப்பதற்கும், அதே நேரத்தில் செயல் திறமையானவராகவும் இருப்பதற்க்கான சில ஜோதிட விதிகளையும் பார்போம்.
 குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla) ஜாதகம்
இவரின் ஜாதக கணிப்பு தொடர்ந்து விடியோவில் உள்ளது.... 

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....


ரிஷப லக்னம் பற்றிய அடிப்படை :-
ரிஷபம் ஸ்திர லக்னம்
ரிஷபம் இரட்டை பட ராசி லக்னம்
ரிஷபம் நிலம் லக்னம்
ரிஷபம் பெண் லக்னம்
ரிஷபம்ர்ம  லக்னம்
ரிஷபம் தெற்கு திசை லக்னம்
ரிஷபம் வைஷ் லக்னம்
 ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேந்திர ஸ்தானம் என அழைக்கபடும் நான்காம் வீடு   -  சுக, வண்டி, வீடு  ஸ்தானம், தாய் ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன் ஆவார் இவர் ராஜகிரகம் அதனால் சுக போக, வண்டி, வீடு ஆகிய வசதி வாய்ப்புகள் அமைந்தால் சிறப்பாகவே அமையும், அகங்காரத்தன்மை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சூரியன் என்பதால் அதிகாரம் தலைக்கு ஏறலாம், இருந்தாலும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 80% நன்மையான பலன்களும் 20% தீமையான பலன்களையும் தரவல்லார்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  கேந்திர ஸ்தானம் என அழைக்கபடும் ஏழாம் வீடு - களத்திர  ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும், மறைவு ஸ்தானம் என அழைக்கபடும் பன்னிரண்டாம் வீடு  -  நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதி செவ்வாய் ஆவார், ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இல்லற சுகத்திற்கு முக்கிய காரகத்துவம் பெற்றவர் செவ்வாய் எனவே வலுப்பெறாவிட்டாலும் கெட்டுவிடக்கூடாது இவர் 60% சுப தன்மையுடைய சுபர் அதாவது ஜாதகரின் வாழவில் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார், அதுவே திருமண மணமகன், மணப்பெண் தேடும் காலங்களில் செவ்வாய் திசை புத்தி வந்தால் திருமணம் கைகூடும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மறைவு ஸ்தானமாம் என அழைக்கபடும் ஆயுள்  ஸ்தானம், மர்ம ஸ்தானம், துரதிர்ஷ்ட ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும்,  பதினோராம் வீடு  -  லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கும் அதிபதி குரு பகவான் ஆவார், ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய ரிஷப லக்னத்திற்கு 3,8 ஆம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும் அதனால் குரு மாராகாதிபதி தன்மையையும் அடைகிறார் அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு 85% பாவரே,  அதாவது 85% தீமையான பலன்களையும் தரவல்லார், ரிஷப லக்ன ஜாதகருக்கு இவர் பாவர்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவான் ஆவார் மேலும் ரிஷப லக்னத்திற்கு 9 ஆம் வீடு பாதகஸ்தானம் ஆகும் எனவே சனி பாதகாதிபதி தன்மையையும் அடைகிறார் இருந்தாலும் பெரிய பாதகங்களை செய்ய மாட்டார் ஏன்னென்றால் ரிஷப லக்னாதிபதி சுக்கிரனுக்கு இவர் தீவிர நண்பர்,  அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு இவரே தொழில் வெற்றி, புகழ், திர்ஷ்டங்கள், முன்னேற்றத்தையும் தரவல்லார் எனவே சுப தன்மையுடைய சுபரே.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் சந்திரனுடன் இராகு, கேது சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்...


ஜாதகத்தில் சந்திரனுடன் இராகு, கேது சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்...
சந்திரன் இராகு இணைந்தால், சந்திரன் கேது இணைந்தால் ஏற்படுத்தும் பொதுப்பலன்கள் - Moon Rahu or Moon Ketu Conjunction in Tamil...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 1 - அரச கேந்திர யோகம், ராஜபோக யோகம்...

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

இந்த தொகுப்பில் அரச கேந்திர யோகம், ராஜபோக யோகம் ஆகிவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
அரச கேந்திர யோகம் - 
ஜோதிடத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்று கூறப்படுகின்ற லக்னம் என்ற 1 ஆம் வீடு, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் ஒன்று கூட விட்டு போகாமல் 7 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அது அரச கேந்திர யோகம் ஆகும்.

அரச கேந்திர யோகம் ஒரு வகை உதாரண படம்
இதன் பலன் வாழ்வில் சக சௌகரியங்களையும் பெற்றவராகவும், தங்களுக்கென்று ராஜ்யம் உள்ளவர், நிலபுலன்கள், நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் அமைப்புக்கள் அவைகளுக்கு கிளைகள், திறமையான வேலையாட்கள், நிர்வாகத்திறன், தலைமை பொறுப்புகள் வந்து சேரும்.

ராஜபோக யோகம் - 
அதாவது ராஜகிரகமான சூரியன் ஆட்சி பெற்று சூரியனுக்கு 10ல் சந்திரன் உச்சம் பெறுவதும், சந்திரன் ஆட்சி பெற்று சந்திரனுக்கு 10ல்  சூரியன் உச்சம் பெறுவதும் ராஜபோக யோகம் ஏற்படும் அமைப்பு ஆகும்.

இதன் பலன் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான செல்வ வளம், செல்வாக்கு வளம், நினைத்தை முடிப்பதற்க்கான ஆட்கள் பலம், வெற்றியை அனைவருடனும் சந்தோஷமாக பகிர்ந்து அனைவராலும் விரும்ப படுபவராகவும் ஆவார், அரசு அரசியல் பலம், பெரிய ராஜ்யங்களை மற்றும் தொழில் நிறுவனங்களை நிறுவுவார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் புதன் இரண்டில் (2ல்) இருந்தால்

ஜாதகத்தில் புதன் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -

 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


ஜாதகத்தில் சந்திரன் + சனி சேர்ந்தால் பொதுப்பலன்கள்...

ஜாதகத்தில் சந்திரன் + சனி சேர்ந்தால் பொதுப்பலன்கள்...

 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger