புதன், 3 ஜூன், 2015

ஜாதகத்தில் பதினொன்றாம் வீடு சொல்லும் உண்மை என்ன?


ஜாதகத்தில் பதினொன்றாம் வீடு சொல்லும் உண்மை என்ன? 

லாப ஸ்தானம், சமூக ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும் இதுவே ஜாதகரின் சமூக வாழ்க்கையை காட்டும் வீடு ஆகும் அதாவது நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள் தீமைகள், கூட்டமைப்பு, சங்கங்ளுடன் உள்ள தொடர்பு ஆகியவற்றை காட்டும் மேலும் வருமானம், வாங்கும் சக்தி, திடீர் லாபம் அதிர்ஷ்டம், தொழில் வெற்றி, லாபம், முன்னேற்றம், சொத்து சேர்தல் போன்ற செய்த தொழிலின் பயன் பலனை காட்டும் ஸ்தானமாகும்.

மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள் காட்டும் ஸ்தானமாகும். புண்ணியத்தால் கிடைக்கும் லாபம் மற்றும் செல்வ சேர்க்கை, பிள்ளைகளால் பெறும் லாபம், ஆன்மீக நாட்டம், பதினோறாம் வீடு கொண்டு நீண்ட கால லட்சியங்கள், கனவுகள் மற்றும் இலக்குகளையும் காட்டும் மேலும் அதனால் அவர் அடைய விரும்பும் இன்பங்களையும் காட்டும் வீடாகும். ஜாதகருக்கு அனைத்து மக்களுடனும் ஒன்றாக வேலை செய்கிற பக்குவம் மற்றும் அவரின் தனிபட்ட சமூக கருத்தியல் மற்றும் சமூக பார்வை காட்டும் ஸ்தானமாகும்.


காலபுருஷ தத்துவபடி பதினொன்றாம் வீட்டின் காரகத்துவ பெற்ற கிரகங்கள் சனி, செவ்வாய், இராகு, குரு ஆகும் இவர்களும்  பதினொன்றாம் வீட்டின் அதிபதியும் லக்னத்திற்கு சுப காரகத்துவம் பெற்று ராசி, நவாம்ச, தசாம்சங்களில் பலமான நிலையில் நின்றால் அவர்கள் செல்வ செழிப்புடனும், வருமான பலத்துடன் இருப்பார்.

பதினொன்றாம் வீட்டின் காரகத்துவங்கள் பார்போம் : -
லாப ஸ்தானம்
மூத்த சகோதரம்
இரண்டாம் மனைவி
பங்குதாரர்கள்
நண்பர்கள்
மருமகன், மருமகள்
பண இருப்புக்கள்
பங்கு பிடிப்புகள்
பங்கு பத்திரங்கள்
வருமானம்
வாங்கும் சக்தி
லாபப்பங்கு
இசை, பாட்டு,
வாத்திய கருவிகள்
ஆசைகள் மற்றும் அவற்றின் பூர்த்தி
வேலை & சமூக ஈடுபாடு
கலந்து பழகுதல்
நோயிலிருந்து விடுபடல்
கால்நடைகள்
துணை நிறுவனங்கள்
சங்கம்
கூட்டமைப்பு தொடர்பு
மிகவும் புகழ் & அதிகாரம் வாய்ந்த நபர்களுடன் தொடர்பு
தந்தையின் உடன்பிறப்புகள்
நீண்ட கால லட்சியங்கள், கனவுகள், இலக்குகளையும் காட்டும்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

3 கருத்துகள்:

 1. 11 -ல் சுக்கிரன் இருந்து அதனுடன் எத்தனை கிரகங்கள் சேர்ந்துள்ளதோ அத்தனை தாரம் அமையும் என்பது உண்மையா? விளக்கம் தாருங்கள் சிவா ஜி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேஷ,கடக, விருச்சிக, கன்னி, தனுசு போன்ற லக்னங்களுக்கு இது சற்று பொருந்தும் இருந்தாலும் மற்ற அம்சங்களும் பார்க்க வேண்டும்.

   நீக்கு
 2. Sir vanakkam ennoda jathagam parthu sollungal eppiluthu thirumanam nadakkum endru 04041988 6.15pm peravurani

  பதிலளிநீக்கு