புதன், 10 ஜூன், 2015

பங்குசந்தை கோடீஸ்வரர் வாரன் பஃபெட் ஜாதகம் - கோடீஸ்வரர் யோகம் சில விதிகள்

பிரபல ஜாதகங்கள் 
பங்குசந்தை கோடீஸ்வரர் வாரன் இ பஃபெட்டின் (Warren E. Buffett) ஜாதகம் - கோடீஸ்வரர் யோகம் சில விதிகள்

வாரன் பபெட் (Warren Buffett) ஒரு முதலீட்டு குரு மற்றும் உலகின் பணக்கார வியாபாரிகளில் ஒருவராக மிகவும் மதிக்கப்படும் நபர், உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். சிறந்த கொடையாளரும் ஆவார், வியாபாரத்தில் நடக்க உள்ளதை முன்பே கணிப்பதில் வல்லவர், பெரும் பணக்காரர் என்றாலும் எளிமையான மனிதர். அவர் ஜாதகத்தின் மூலமாக கோடீஸ்வரர் யோகம் பற்றி சில விதிகள் மற்றும் பங்கு முதலீட்டில் வெற்றியாளர் ஆக்கும் சில அடிப்படை விதிகளையும் பார்ப்போம்.

முதலில் இவர் தலைசிறந்த தொழில் நிர்வாகியாகும் ஏன்னென்றால் இராசி, நவாம்சம், சதுர்பாத துவைதாம்சம், சஷ்டாம்சம் ஆகிய நான்கு சக்கரங்களிலும் சூரியன் ஆட்சி வீட்டை அடைகிறார் இது மிகச்சிறந்த வர்கோத்தமபலன் ஆகும் மேலும் அதில் மூன்று சக்கரங்களில் தொழில் ஸ்தானமான 10 ஆம் வீட்டிலேயே அமர்கிறார் இது மிகச்சிறந்த ஸ்தான பலன் ஆகும் நிர்வாக கிரகமான சூரியன் இப்படி ஒரு சிறப்பான நிலையை அடைந்ததால் தான் இவர் மிகச்சிறந்த நிர்வாகியாகியும், தொழிலில் சிறந்த திட்டமிடும் அறிவு, எந்த விளக்கம் கேட்டாலும் தொழிலிலை பற்றி அசத்தலாக விளக்கம் கொடுக்கும் ஆற்றலும் கிடைக்கும், சூரியனை ஜோதிடத்தில் அரசன் என்று அழைப்பர் துணிவு, தைரியம் எல்லாம் இவருக்கு இயல்பாக வரும் அதுவும் தொழிலில் வெற்றிகரமான ரிஸ்க் எடுப்பதில் வல்லவராக்கும் அதனால் இவர் எடுக்கும் ரிஸ்க் பெரும்பாலும் வெற்றியை தந்து தொழிலில் பெரும் கோடீஸ்வரர் என்ற இடத்தை அடைய வைத்துள்ளது.

பங்குசந்தை முதலீடுகளில் நஷ்ட தடுப்பு மிகவும் முக்கியம் ஏன் ஒவ்வொரு தொழிலுக்கும் போட்ட முதலீடு பாதிப்படையாமல் இருக்க வேண்டியது மிகமிக முக்கியம் அதற்கு இவர் ஜாதகத்தில் பல சிறப்பான யோகங்கள் அமைந்துள்ளது

1) ஆறுக்குடைய செவ்வாய் 8 ல் அமர்ந்து அந்த செவ்வாய் 6ல் உள்ள இராகுவின் சாரம் பெற்று தன ஸ்தானம் என்ற 2 ஆம் வீட்டை பார்ப்பது சிறப்பான விபரீத ராஜயோகம் ஆகும் இது இவருக்கு முதலீடு நஷ்டம் அடைவதில் இருந்து காப்பாற்றும்.

2) லாப ஸ்தானம் 11 க்குடைய புதன் 11 ல் உச்சம் அடைந்து 9 க்குடைய சந்திரன் உடைய சாரம் பெற்றுள்ளது அதுபோக நவாம்சத்தில் புதன் speculation (ஊக வர்த்தகம்) ஸ்தானமான 5 ல் அமர்ந்து speculation (ஊக வர்த்தகம்) காரகத்துவம் பெற்ற இராகு கிரகத்துடன் சேர்ந்துள்ளது இது வர்த்தக ஏற்ற இறக்கத்திலிருந்து இவரை காப்பாற்றும்.

3) நட்ட ஸ்தானம் 12 க்குடைய சுக்கிரன் 11ல்
உச்சம் அடையும் புதனால் நீசபங்க யோகம் ஆவது சிறப்பான நஷ்ட தடுப்பு யோகம் ஆகும் அதுபோக சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் அதனால் தான் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் எளிமையான வாழ்க்கை வாழ வைத்துள்ளது.

கோடீஸ்வரர் யோகம்
2,11,10 ஆம் வீட்டுக்குரியவர் ஒன்றுக்கொன்று சேர்ந்தோ அல்லது தனித்தனியாக பலம் பெற்று அமர்வது முன்னோர்களின் சொத்துக்களின்றி சொந்தமாக உழைத்து  பலமடங்கான செல்வ சேர்க்கை தரும் கோடீஸ்வர யோகம் ஆகும்.
இவர் ஜாதகத்தில் 10 க்குடைய சூரியனும் 10 லும் 11 க்குடைய புதனும் 11 லும் ஆட்சி பெற்று 2 க்குடை குரு இரண்டாம் வீட்டையே பார்ப்பது அந்த மிகச் சிறப்பான கோடீஸ்வர யோகத்தை பெற்றுத்தந்துள்ளது.

மற்றவர்களின் பணத்தை ஒன்று திரட்டி அதை அவர்களின் முன்னேற்றத்திற்கும் தனது  முன்னேற்றத்திற்கும் சேர்த்து பயன்படுத்திக் கொள்வதற்கு மற்றவர்களின் பணத்தை ஒன்று திரட்டும் யோகத்தை தரக்கூடி 8 ஆம் வீட்டின் அதிபதி 11 ல் உச்சம் அடைவது மேலும் 8 ல் செவ்வாய் அமர்வதும் இந்த பணத்தை ஒன்று திரட்டும் யோகத்திற்கு உறுதுணை அமைந்துள்ளது, பல்வேறுபட்ட மக்களின் நம்பிக்கையை பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை அதற்கு மக்கள் தொடர்பு ஸ்தானங்களான 2,9,11 சிறப்பாக இருக்க வேண்டும் இவருக்கு 11 ல் உச்சம் அடையும் புதன் 9 க்குடைய சந்திரனின் சாரம் பெற்றுள்ளது மேலும் 2 க்குடை குரு இரண்டாம் வீட்டையே பார்ப்பதும் அந்த மிகச் சிறப்பான யோகத்தை தந்துள்ளது.

லக்னத்திற்கு 2,5 க்குடைய குரு நவ வர்க்க சக்கரங்களில் 3 இடங்களில் ஆட்சி அடைகிறார், லக்னத்திற்கு 11 க்குடைய புதன் நவ வர்க்க சக்கரங்களில் 5 இடங்களில் ஆட்சி, உச்சம் அடைகிறார் இதுவும் கோடீஸ்வர யோகம் ஆகும்.

தன ஸ்தானம் என்ற 2 ஆம் வீட்டின் அதிபதி குரு தனது சுய சாரம் பெறுவது குரு ஆட்சி பெறுவதற்க்கு சமமான பலம் ஆகும் இது ஒரு சிறப்பான தன யோகம் ஆகும்.

வாரன் பஃபெட் தனது 30 வயதிலிருந்து பெரிய அளவில் பண திரட்ட ஆரம்பித்தார் மேலும் அதை நல்ல லாபம் தரும் மூதலீடாகவும் மாற்றிக்காட்டினார் இதேல்லாம் இவருடை 30 வயதிலிருந்து தொடங்கி 20 வருட சுக்கிர திசையில் நடந்தது  நாம் ஏற்கெனவே மேலே சொன்னது போல் நட்ட ஸ்தானம் 12 க்குடைய சுக்கிரன் ஆனவர் 11ல் உச்சம் அடைந்து மேலும் பலவிதமான சிறப்புக்களை அடையும் புதனால் நீசபங்க யோகம் பெற்று அந்த பலத்தோடு சுக்கிரன் தனது திசை 30 முதல் 50 வயது வரை நடந்தால் இத்தகைய பலமடங்கான செல்வ சேர்க்கை தந்தது இதில் இவர் ஒரு மில்லியனராக உருவானார்.

அடுத்து வந்த மேலே சொன்னது போல் பலமான சூரியனின் திசா இதில் மேலும் பல நிறுவனங்களை தனது நிறுவனத்திற்கு கீழ் இணைத்து கொண்டு ஒரு பில்லியனர் என ஆனார்.

அடுத்த வந்த சந்திரன் திசா காலத்தில் 1990 களின் முற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவால் இவர் சற்று பாதிக்க பட்டாலும் பின்வந்த அடுத்த அடுத்த யோகமான திசைகளால் தன் செல்வந்தர் நிலை தக்கவைத்துக் கொண்டார்.

12 ல் கேது இருந்தால் அடுத்த பிறவியில்லை என்று பொதுவாக சொல்வார் ஆனால் நாம் ஏற்கெனவே எழுதியது போல் 12 ல் இருக்கும் கேது நல்ல நிலையில் நின்று அந்த கேது - சனி, குரு, சூரியன் போன்ற கிரங்களின் சாரம் அல்லது சுய சாரம் பெற்றால் தான் அடுத்த பிறவியில்லா அமைப்பு ஏற்படும் இவருக்கு சித்திரை 3 செவ்வாய் சாரம் மேலும் கேது லக்ன பாவக கட்டத்தில் 11 ஆம் வீட்டை அடைகிறார் அதனால் இவர் செய்யும் தான தர்மங்களால் அடுத்த பிறவிகளில் ஆன்மீகத்தில் புனித பிறவியாக பிறக்கலாம்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக