ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....


ரிஷப லக்னம் பற்றிய அடிப்படை :-
ரிஷபம் ஸ்திர லக்னம்
ரிஷபம் இரட்டை பட ராசி லக்னம்
ரிஷபம் நிலம் லக்னம்
ரிஷபம் பெண் லக்னம்
ரிஷபம்ர்ம  லக்னம்
ரிஷபம் தெற்கு திசை லக்னம்
ரிஷபம் வைஷ் லக்னம்
 ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேந்திர ஸ்தானம் என அழைக்கபடும் நான்காம் வீடு   -  சுக, வண்டி, வீடு  ஸ்தானம், தாய் ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன் ஆவார் இவர் ராஜகிரகம் அதனால் சுக போக, வண்டி, வீடு ஆகிய வசதி வாய்ப்புகள் அமைந்தால் சிறப்பாகவே அமையும், அகங்காரத்தன்மை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சூரியன் என்பதால் அதிகாரம் தலைக்கு ஏறலாம், இருந்தாலும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 80% நன்மையான பலன்களும் 20% தீமையான பலன்களையும் தரவல்லார்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  கேந்திர ஸ்தானம் என அழைக்கபடும் ஏழாம் வீடு - களத்திர  ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும், மறைவு ஸ்தானம் என அழைக்கபடும் பன்னிரண்டாம் வீடு  -  நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதி செவ்வாய் ஆவார், ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இல்லற சுகத்திற்கு முக்கிய காரகத்துவம் பெற்றவர் செவ்வாய் எனவே வலுப்பெறாவிட்டாலும் கெட்டுவிடக்கூடாது இவர் 60% சுப தன்மையுடைய சுபர் அதாவது ஜாதகரின் வாழவில் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார், அதுவே திருமண மணமகன், மணப்பெண் தேடும் காலங்களில் செவ்வாய் திசை புத்தி வந்தால் திருமணம் கைகூடும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மறைவு ஸ்தானமாம் என அழைக்கபடும் ஆயுள்  ஸ்தானம், மர்ம ஸ்தானம், துரதிர்ஷ்ட ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும்,  பதினோராம் வீடு  -  லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கும் அதிபதி குரு பகவான் ஆவார், ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய ரிஷப லக்னத்திற்கு 3,8 ஆம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும் அதனால் குரு மாராகாதிபதி தன்மையையும் அடைகிறார் அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு 85% பாவரே,  அதாவது 85% தீமையான பலன்களையும் தரவல்லார், ரிஷப லக்ன ஜாதகருக்கு இவர் பாவர்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவான் ஆவார் மேலும் ரிஷப லக்னத்திற்கு 9 ஆம் வீடு பாதகஸ்தானம் ஆகும் எனவே சனி பாதகாதிபதி தன்மையையும் அடைகிறார் இருந்தாலும் பெரிய பாதகங்களை செய்ய மாட்டார் ஏன்னென்றால் ரிஷப லக்னாதிபதி சுக்கிரனுக்கு இவர் தீவிர நண்பர்,  அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு இவரே தொழில் வெற்றி, புகழ், திர்ஷ்டங்கள், முன்னேற்றத்தையும் தரவல்லார் எனவே சுப தன்மையுடைய சுபரே.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்...."

கருத்துரையிடுக

Powered by Blogger