ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 4 - உபஜெய யோகம் (வசுமதி யோகம்), ராஜலட்க்ஷண யோகம் ...

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 4 - உபஜெய யோகம் (வசுமதி யோகம்),
ராஜலட்க்ஷண யோகம் ...

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

உபஜெய யோகம்
ஜோதிடத்தில் லக்னத்திலிருத்து உபஜெய ஸ்தானங்கள் என்று கூறப்படுகின்ற 3 ஆம் வீடு, 6, 10,11 ஆகிய ஸ்தானங்களில் ஒன்று கூட விட்டு போகாமல் கிரகங்கள் இருந்தால் அது உபஜெய யோகம் அல்லது வசுமதி யோகம் ஆகும். சில நூல்கள் சந்திரனிலிருத்து 3 ஆம் வீடு, 6, 10,11 ஆகிய ஸ்தானங்களில் ஒன்று கூட விட்டு போகாமல் கிரகங்கள் இருந்தாலும் இந்த யோகம் என்று கூறுகின்றன.

இந்த யோகம் அமைய பெற்ற நபர் யாரையும் சார்ந்து இருக்க மாட்டார்கள், எப்போதும் செல்வ வசதி இருக்கும், செய்யும் செயல்களில் வெற்றி மற்றும் அதன் மூலம் நல்ல லாபம், எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல், வேலைவாங்கும் ஆற்றல் உள்ளவர், நல்ல வேலையாட்களும் அமைவார்கள், திறமையானவர் என்று பாராட்டு கிடைக்கும்.

இந்த யோகம் அமைய பெற்ற ஜாதகத்தில் லக்ன சுப கிரகங்கள் ஏதேனும் உச்சம், ஆட்சி ஆனால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் தொழில் அதிபராகவும், அரசியல் வெற்றியாளராகவும், நினைத்ததை சாதிக்க கூடிய ஆற்றல் கிடைக்க பெற்றவராக இருப்பார்.

 
ராஜலட்க்ஷண யோகம்
குரு, சுக்கிரன், புதன் மற்றும் சந்திரன் லக்னத்தில் இருக்க வேண்டும் அல்லது அவர்கள் கேந்திர ஸ்தானங்களில் இருக்க வேண்டும். இதில் புதன் அசுப தன்மையை அடைய கூடாது மேலும் சனி, இராகு, கேது, மாந்தி சேர்க்கை இருக்க கூடாது இருந்தால் இந்த யோகம் பலனில்லை.

இதன் பலன்கள் கவர்ச்சியான தோற்றம், ஈர்ப்பு சக்தி உள்ளவர், உயர்ந்த குணங்களும், சிறந்த நபர்களுடன் பழக்கமும் கிடைக்கும், தன் சுற்றத்தாரால் புகழ் மதிப்பு மரியாதை பெறுவார், ஆடை ஆபரண வசதிகள் வந்து சேரும்.



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 4 - உபஜெய யோகம் (வசுமதி யோகம்), ராஜலட்க்ஷண யோகம் ..."

கருத்துரையிடுக

Powered by Blogger