தன்னம்பிக்கையும் முன்றாம் இடமும்…

தன்னம்பிக்கையும் முன்றாம் இடமும்

எவ்வளவு பலம் பெற்ற ஒருவருக்கும் தன் மீது நம்பிக்கையில்லை என்றால் அவரால் வாழ்வில் சாதிக்க முடியாது எனவே தன்னம்பிக்கை மிகவும் முக்கியம், சரி தன்னம்பிக்கைகும் ஜாதகத்திற்கு என்ன சம்பந்தம் என்று கூட சிலர் நினைக்கலாம், எமது கருத்தை சொல்கிறேன் தன்னம்பிக்கை மூன்று விதமாக ஒருவருக்கு ஏற்படலாம்.



  1. தன்னம்பிக்கை அவரின் பிறப்பிலிருந்து அதாவது அவர் வாழ்ந்த குழந்தைபருவ சூழலில் இருந்தே அவருக்கு தன்னம்பிக்கை பலமாக இருக்கலாம் அதனால் வெற்றி தோல்விகள் மாறிமாறி வரும் போதும் அவர் தன்னம்பிக்கை குலையாமல் இருப்பார்.
  2. தொடர்ந்து வெற்றியாளனாக எடுத்த காரியங்களையெல்லாம் வெற்றிகரமாக மாற்றிக் கொண்டு வந்தவருக்கு தன்னம்பிக்கை பலமாக இருக்கலாம்.
  3. தொடர்ந்து தோல்விகளை சந்தித்தவர் சிறிய வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்தவுடன் அவருக்கு தன்னம்பிக்கை பிறக்கலாம்.



என்ன இப்படி சொல்லகிறீர்கள் நான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த போதும் என் தன்னம்பிக்கை குலையாமல் வைத்திருக்கிறேனே என்று சிலர் சொல்லாம்!



சரி தான் ஆனால் வெற்றியை ருசிக்காமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தவரின் தன்னம்பிக்கையை நாம் வாழும் சமூகத்தின் கண்களுக்கு தெரியாது எப்போது ஒருவன் வெற்றியை ருசிக்கிறானோ அப்போதே குடும்பமும் வாழும் சமூகமும் அவரை கவனிக்கும் அவரின் தன்னம்பிக்கையையும் பாராட்டும் முயற்சியை மேச்சும்.



இதில் இருந்து தன்னம்பிக்கையும் அதனால் உண்டான முயற்சியும் அதற்க்கான விளைவான வெற்றியும் இம்மூன்றின் முக்கியத்துவமும் அது வாழ்க்கையில் எவ்வளவு தேவையானது என்பதை உணர முடிகிறது.



இப்போது எந்த ஒருவரின் ஜாதகத்திலும் தன்னம்பிக்கை, முயற்சி, வெற்றி ஆகிய மூன்றின் பலத்தை காட்டும் ஸ்தானம் லக்னத்திலிருந்து மூன்றாம் ஸ்தானம் மற்றும் ஒன்பதாம் ஸ்தானம், இந்த இரண்டு ஸ்தானங்களும் நன்றாக அமைய வேண்டும் மற்றும் அந்த ஸ்தானாதிபதிகளும் பலமாக அமைய வேண்டும் அது போக செவ்வாய், சூரியன், குரு ஆகிய கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும். அதே போல் 11 ஆம் ஸ்தானம் அதன் அதிபதியும் எந்த விதத்திலும் கெட்டு விடக்கூடாது.



உதாரணமாக ஜாதகத்தில் தன்னம்பிக்கை, முயற்சி, வெற்றி ஆகிய மூன்றின் சிறப்பான பலத்தை காட்டும் சில அமைப்புகள் கூறுகிறேன் : -



மூன்றாம் ஸ்தானாதிபதி ஆட்சி, உச்சம் பெற்று அவரை செவ்வாய், சூரியன், குரு ஆகிய கிரகங்களின் பார்வை பலம் பெறுவதும்.



மூன்றாம் ஸ்தானத்தில் லக்ன சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அமைவதும், சுய நட்சத்திர சாரங்கள் பெறுவதும்.



ஒன்பதாம் ஸ்தானத்தில் லக்ன சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அவர்களின் பலமான பார்வை மூன்றாம் ஸ்தானம் பெறுவதும்.



மூன்றாம் ஸ்தானாதிபதியும் ஒன்பதாம் ஸ்தானாதிபதி மற்ற அம்ச சக்கரங்களில் ஆட்சி, உச்சம் பெற்று சிறப்பாக அமைய பெறுவதும்.



மூன்றாம் ஸ்தானாதிபதியும் ஒன்பதாம் ஸ்தானாதிபதியும் லக்னத்திலிருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைய பெறுவதும்.



சூரியன், குரு, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களுக்கும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் செவ்வாய் பலம் பெறுவதும்.



ஜாதகத்தில் தன்னம்பிக்கை, முயற்சி, வெற்றி ஆகிய மூன்றின் சிறப்பான பலத்தை காட்டும் சில அமைப்புகள் ஆகும் இன்னும் நிறைய உள்ளது அதே போல் இப்படி அமைய பெற்ற ஜாதகத்தில் மற்ற அம்ச சக்கரங்களில் கெட்டுவிட்டால் பலன்கள் முழுமையாக கிடைக்காது.
  • தன்னம்பிக்கை ஒருவரின் பிறப்பிலிருந்து பலமாக இருப்பதற்கு ஒரு உதாரணமாக ஜாதகத்தில் மூன்றாம் ஸ்தானாதிபதி லக்னத்தில் ஆட்சி, உச்சம் பெற்று அமைவது இத்தகைய நிலையை ஏற்படுத்தும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "தன்னம்பிக்கையும் முன்றாம் இடமும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger