சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

சிம்மம் லக்னம் பற்றிய அடிப்படை :-
சிம்மம் ஸ்திர லக்னம்
சிம்மம் நெருப்பு லக்னம்
சிம்மம் ஆண் லக்னம்
சிம்மம் தர்ம லக்னம்
சிம்மம் கிழக்கு லக்னம்
சிம்மம் க்ஷத்ரிய லக்னம்
சிம்மம் பித்த லக்னம்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சூரியன் ஆவார் லக்னம் என்ற தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய ஸ்தானம், ஒற்றை ஆதிபத்திய தன்மை பெற்ற நிலையில் சூரியன் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு முழு யோகாதிபதி ஆகும் எனவே இவரின் வலு ஜாதகத்தில் மிகவும் முக்கியம்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதி புதன் ஆவார் இவரை பொருத்தே குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சி, பொருளாதார ஸ்தர தன்மை காண முடியும், மேலும் பதினோராம் வீடு  -  லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கு அதிபதியும் புதனே ஆகும் லக்னாதிபதி சூரியனுக்கு சனி, சுக்கிர சம்பந்தமில்லாத புதன் நண்பர், சம்பந்தபட்டால் பகை தன்மை வரும் எனவே பொதுவாக 50% நன்மையான பலன்களும் 50% தீமையான பலன்களையும் தரவல்லார் ஆனால் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கான செல்வ வளத்தை தீர்மானிப்பவராக உள்ளார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாம் வீடு  -  தைரிய ஸ்தானம், சகோதர ஸ்தானத்திற்கு அதிபதியும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதியும் சுக்கிரன் ஆகும். லக்னாதிபதி சூரியனுக்கு சுக்கிரன் பகை தன்மை வரும் ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய சிம்ம லக்னத்திற்கு 3,8ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும், எனவே மாரகாதிபதி தன்மையும் பெறுவதால் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் சுக்கிரனே எனவே 40% நன்மையான பலன்களும் 60% தீமையான பலன்களையும் தரவல்லார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் நான்காம் வீடு   -  சுக, வண்டி, வீடு  ஸ்தானம், ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார், சூரியனுக்கு செவ்வாய் நட்பு பெற்றதாலும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ஒரு யோகர் ஆகும். சிம்ம லக்னத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானமாக அமைகிறது அதாவது பாதகங்களை ஏற்படுத்த கூடியவரும் செவ்வாயே ஆகும் எனவே நல்ல நிலையில் அமர்ந்தால் பாதகங்களுக்கு பின் நன்மை ஏற்படும்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாம் வீடு  -  பூர்வ புண்ணிய  ஸ்தானம், புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியும், மறைவு ஸ்தானம் என அழைக்கபடும் ஆயுள்  ஸ்தானம், மர்ம ஸ்தானம், துரதிர்ஷ்ட ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாக வருபவர் குரு பகவான் ஆவார் எனவே திரிகோண ஸ்தான 5ஆம் வீட்டிற்கும், மறைவு ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாவதால் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே குரு திசையில் முதலில் 60% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 40% தீமையான பலன்களும் தரவல்லார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஆறாம் வீடு  -  ரண ருண ரோக ஸ்தானம், சேவா ஸ்தானத்திற்கு அதிபதியும், ஏழாம் வீடு - களத்திர  ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும் அதிபதியுமான சனி பகவான் சூரியனுக்கு விரோத தன்மை பெற்றவர் எனவே 30% நன்மையான பலன்களும் 70% தீமையான பலன்களையும் தரவல்லார் என்றாலும் திருமண வாழ்க்கை தீர்மானிப்பவர் அவரே.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பன்னிரண்டாம் வீடு  -  நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதி சந்திரனே ஒற்றை ஆதிபத்திய தன்மை பெற்ற நிலையில் மறைவு ஸ்தானமும் ஆனதால் தேய்பிறை சந்திரனாக அதாவது கிருஷ்ணபக்ஷ திதிகளில் பிறந்தால் ஜாதகருக்கு மேலும் பாவர் ஆகிவிடுவார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்



1 Response to "சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்...."

  1. simma lagna vilakkam sirappaaga irukkirathu. simma lagna jathakarukku kanya, makara, meena lagna pen jathagam porunthumaa?

கருத்துரையிடுக

Powered by Blogger