வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 10 - சரஸ்வதி யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 10 - சரஸ்வதி யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


சரஸ்வதி யோகம்
ஜென்ம லக்னத்திற்கு புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் சேர்ந்திருந்தாலும் அல்லது பிரிந்திருந்து ஒன்றுக்கொன்று நல்ல தொடர்பு பெற்றிருந்தாலும் இந்த சரஸ்வதி யோகம் ஏற்படும், ஆனால் இதில் முக்கியமாக குரு உச்ச வீட்டிலோ, ஆட்சி வீட்டிலோ அல்லது நட்பு வீட்டில் ஆவது கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இதன் பலன்கள் -
மந்திரி, கவிஞர், காவியம் படைப்பவர், பிரபலமானர், சாஸ்திரங்கள் படைப்பவர், அறிவியல் மற்றும் விஞ்ஞானத்துறைகளில் ஆளுமை திறன்கள் பெற்றவர், பாராட்டுகள் விருதுகள் பெறுபவர், பண வசதி பெற்றவர், மற்றும் நல்ல மனைவி மற்றும் குழந்தைகள் பெற்றவர்.

சரஸ்வதி யோகம் ஒரு வகை உதாரண படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக