சனி, 24 அக்டோபர், 2015

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 16 - கஜகேசரி யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 16 - கஜகேசரி யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


கஜகேசரி யோகம்
இராசி சக்கரத்தில் குருவும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திர ஸ்தானங்களில் (1,4,7,10 ஆக) இருந்தால் இந்த கஜகேசரி யோகம் ஏற்படும், இந்த யோகம் ஏற்பட்டால் ஜாதகத்தில் பலதோஷங்களுக்கு நிவர்த்தி ஏற்படும் என்று பல நூல்கள் சொன்னாலும் இதை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது சில லக்னங்களுக்கும், சில மற்ற அமைப்புகளாலும் கஜகேசரி யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதற்க்கான உச்சமான பலன் தராமல் போகிறது இது அனுபவ உண்மை அதனால் இந்த யோகம் சரியாக அமைந்தவருக்கு நன்மை உண்டு.

இதன் பலன்கள் -
கண்ணியமான மற்றும் நல்ல பண்பான நடத்தை உள்ளவர், நிறைய உறவினர்கள் வாய்க்கும் அவர்களை நன்றாக பேணுவார், கண்ணியமான பதவிகள் பொறுப்புகள் வந்து சேரும், நீடித்த புகழ் வாழ்க்கை, கல்வி கேள்விகள் வல்லமை, தீர்க்கமான பேச்சு உள்ளவர், நெறியாளர்.

கஜகேசரி யோகம் ஒரு வகை உதாரண படம்
 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக