செவ்வாய், 13 அக்டோபர், 2015

வேலையில் திருப்பம் மற்றும் மாற்றம், பணி மாற்றம் (Work Change)…

வேலையில் திருப்பம் மற்றும் மாற்றம், பணி மாற்றம் (Work Change)…

இன்றைய வேகமான பணிச்சூழல், அடிக்கடி மாறும் வியாபார சூழல் மற்றும் புதிய புதிய தொழில்நுட்ப மாற்றங்கள், உலகமயமாக்கல் என பல்வேறு புறக்காரணங்களால் எவர் ஒருவரும் செய்து கொண்டிருக்கும் தற்போதைய வேலை என்பது எப்போது வேண்டுமானாலும் மாற்றம் காணும் என்பது எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது இதில் சிலருக்கு வேலையில் ஏற்படும் மாற்றம் என்பது பணியில் ஏற்றமாக அதாவது பதவி உயர்வாகவும் ஏற்படும் வேறு சிலருக்கு வேலையில் ஏற்படும் மாற்றம் என்பது பணியில் இறக்கமாக அதாவது வேலை இழப்பாக அல்லது பதவி பறிப்பாகவாகவும் நிகழ்ந்து விடுகிறது இன்னும் சிலருக்கு விரும்பாத ஊர்களிலோ அல்லது விரும்பாத துறைக்கு மாற்றம் (Department Change),  அல்லது விரும்பாத குழுவில் (Team Change) சேர்ப்பது என நிகழும்.

இதை மூன்று பிரிவாக பிரித்தால் -

1. பணியில் இறக்கம் அதாவது வேலை இழப்பு அல்லது பதவி பறிப்பு.
2. பணியில் ஏற்றம் அதாவது பதவி உயர்வு.
3. பணியில் விரும்பாத ஊர்களிலோ அல்லது விரும்பாத துறைக்கு (Department Change) அல்லது விரும்பாத பிரிவுக் மாற்றம், அல்லது விரும்பாத குழுவில் (Team Change) சேர்ப்பது.

1. பணியில் இறக்கம் அதாவது வேலை இழப்பு அல்லது பதவி பறிப்பு.

இதில் இப்போது நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லது பார்த்து கொண்டிருந்த வேலையை இழந்தவர்களுக்கான அல்லது பதவி பறிப்புக்கான ஜோதிட அமைப்பை முதலில் பார்ப்போம் பின் ஒரு நாளில் மற்ற இரண்டை பார்ப்போம்.

வேலை என்று சொன்னாலே லக்னத்திற்கு 10 ஆம் ஸ்தானம் முதல் முக்கியத்துவம் பெறும் அடுத்தததாக லக்னத்திற்கு 11 ஆம் ஸ்தானம், அடுத்து சேவை ஸ்தானமான லக்னத்திற்கு 6ஆம் ஸ்தானம், 'பதவி பூர்வபுண்ணியனாம்' என்பது ஸ்லோகம் எனவே அடுத்து பூர்வபுண்ணிய ஸ்தானமான லக்னத்திற்கு 5ஆம் ஸ்தானம், பாக்கிய ஸ்தானமான லக்னத்திற்கு 9ஆம் ஸ்தானம் மற்றும் காரிய ஸ்தானமான லக்னத்திற்கு 3ஆம் ஸ்தானம் ஆகும் அதுபோக அந்த அந்த ஸ்தானாபதிகளும், கோட்சாரமும், நடப்பு திசாபுத்திகளும் முக்கியமாக பார்க்க வேண்டும். இதுவே வியாபாரிகள் ஆனால் அவர்களுக்கு லக்னத்திற்கு 7ஆம் ஸ்தானம் மற்றும் கடன் ஸ்தானமான லக்னத்திற்கு 8ஆம் ஸ்தானம் சேர்த்துப்பார்க்க வேண்டும் அதனால் அதை பின்னொரு முறை பார்ப்போம்.

மேலே சொன்ன ஸ்தானங்களும் பாதிக்கப்பட்டாலும் அல்லது அந்த ஸ்தானாபதிகள் பாதிக்கப்பட்டாலும், கோட்சாரம் ரீதியாக பாதிக்கப்பட்டாலும், இவர்களில் பாதிக்கப்பட்ட ஸ்தானாபதிகளின் திசாபுத்தி வந்தாலும் பணியில் இறக்கம் அதாவது வேலை இழப்பு அல்லது பதவி பறிப்பு போன்ற நிகழ்வுகள் நிகழலாம்.
 
 
 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக