ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 18 - மஹாஜீவன யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 18 - மஹாஜீவன யோகம்…

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


மஹாஜீவன யோகம்
ஜென்ம லக்னத்திற்கு 10க்குடையவர் நவாம்சத்தில் லக்னத்தில் ஆட்சி, உச்சம் பெற்று லக்னாதிபதியால் பார்க்கபட அதுபோல் ஜென்ம லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி, உச்சம் ஆகி 10க்குடையவரால் பார்க்கபட வேண்டும் இப்படி சிறப்பான அமைப்பை பெறும் போது மஹாஜீவன யோகம் ஏற்படுகிறது.

இதன் பலன்கள் -
மதிப்புமிக்க குடும்பம், பல நிலங்களை சொந்தமாக பெற்றிருத்தல், அறப்பணி, ஆன்மீகம் அல்லது சமூகம் சார்ந்த உயர் பதவிகள் மற்றும் செயல்பாடுகள், போக்குவரத்துகளில் வியாபார நடவடிக்கைகளில் இவருக்கு சாதகமான சம்பவங்கள் நிகழ்தல், அனைவரையும் மதித்து நடத்தும் பண்பு, பிணைப்புள்ள குடும்ப வாழ்க்கை, தொட்டது துலங்கும் கைராசி, தொழிலால் லாபம் மற்றும் புகழ், அரசாங்க கவுரவம்.
மஹாஜீவன யோகம் ஒரு வகை உதாரண படம்


மஹாபாக்ய யோகம் இன்னுமொரு வகை உதாரண படம்


0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 18 - மஹாஜீவன யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger