ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 19 - கிரகமாலிகா யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 19 - கிரகமாலிகா யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


கிரகமாலிகா யோகம்
ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் வரிசையாக ஒன்றுகூட விடாமல் அனைத்திலும் கிரகங்கள் அமர்ந்திருந்தால் அதனால் கிரகமாலிகா யோகம் ஏற்படுகிறது.

இதன் பலன்கள் -
லக்னத்திலிருந்து வரிசையாக ஏழு வீடு வரை கிரகங்கள் இருந்தால் அவர் அரசு பதவி, ஆட்சியாளர் அல்லது தளபதி, செல்வந்தர், உயர் கவுரவம்.
இரண்டாம் ஸ்தானதிலிருந்து ஏழு வீடு வரை கிரகங்கள் இருந்தால் அவர் மிகவும் செல்வந்தர்கள் பணிவானவர், உறுதியானவர், உயர்ந்த குடும்பம்.
முன்றாம் ஸ்தானதிலிருந்து ஏழு வீடு வரை கிரகங்கள் இருந்தால் பணக்காரர், உடல் நலமற்றவர், துணிச்சலானவர், சிறப்பான தொழில் முனைவர்.
நான்காம் ஸ்தானதிலிருந்து ஏழு வீடு வரை கிரகங்கள் இருந்தால் வாழ்வில் இளமையில் உயர்ந்த இடத்தை அடைவது, தொழில் லாபம், வாகன வீடு வசதிகள், தொண்டு செய்யும் குணம்.

இப்படி வரிசையாக 12 ஸ்தானங்களுக்கும் பலன்கள் உண்டு.


0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 19 - கிரகமாலிகா யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger