புதன், 25 நவம்பர், 2015

ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 7 - அபவாக்ய தோஷம்…

ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 7 - அபவாக்ய தோஷம்

ஜோதிடத்தில் உள்ள அசுப தோஷங்கள் பற்றி சில சில தோஷங்களாக இந்த பகுதிகளில் பார்த்து வருகிறோம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ஒரு தோஷமானாலும் அது அந்த ஜாதகரீதியாக தீவிரமானால் தான் அந்த தோஷங்களால் தீய பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

போன தொகுப்பில் -

அபவாக்ய தோஷம்
ஜென்ம லக்னத்திற்கு குரு, சந்திரன் இவர்களில் யரேனும் ஒருவர் 6,8,12 ஆம் ஸ்தானத்தில் இருந்து அங்கு 2ஆம் ஸ்தானத்திற்குடைய 2ஆம் ஸ்தானாபதி அந்த குரு,சந்திரனுடன் சேர்ந்து அமர்ந்து, நவாம்சத்தில் ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் ஸ்தானாபதி, குரு, சந்திரன் இவர்களில் யரேனும் இருவர் நவாம்ச லக்னத்திற்கு 6,8,12 ஆம் ஸ்தானங்களில் அமர்ந்தால் இந்த தோஷம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
தாழ்வு மனபான்மை அதிகம் இருக்கும், ஒரு விஷயத்தை பேச ஆரம்பித்தால் தன்னம்பிக்கையை குலைக்கும் விதமாகவோ அல்லது தனக்கு தானே தாழ்வு படுத்திக்கொள்ளும் விதமாகவோ பேசக்கூடியவர், நேர்எதிர் மாறான பேச்சுகள் பேசக்கூடியவர், எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக எழும், வாழ்க்கை பயம் அதிகம் உள்ளவர்.

அபவாக்ய தோஷம் ஒரு வகை உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக