காதல் ஜாதகம் - சாதகமும் பாதகமும் பகுதி 1…


காதல் ஜாதகம் - சாதகமும் பாதகமும் பகுதி 1…

குறள் : 1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து. - திருவள்ளுவர்

குறள் விளக்கம்:
ஆராய்ந்தெடுத்த அணிகளை அணிந்த இவள் சேரும்போது, உயிர் உடம்போடு சேர்ந்து வாழ்தல் போன்று இன்பமும் பிரியும் போது, அவ்வுயிருக்குச் சாதல் எப்படியோ அப்படித் துன்பமும் உண்டாகின்றன.

நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் -
உயிர்த் தீயினி லேவளர் சோதியே ! - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! -  மகாகவி பாரதியார்

I see the sea waves; it never stops to their nature duty
I see the flower buds; it never stops to their bloom
I see the river, it never stops their travel
Why I stop my love
                  - Sivathathuva Sivam

மானுடம் தழைக்க காதல் செய்மின் என்று இலக்கியங்கள் ஒருபக்கம் புகழும், பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால் விண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே! - என சித்தர் பாடல்கள் வேறுவிதமாக காதலை சாடும் நிலையையும் பார்க்கிறோம், மனிதர்கள் பொருளாதாரம், தந்தை, தாய் ஏன் மனைவி போனால் கூட நிரந்தரமாக கவலை படுவதில்லை காதலை இழந்தால் துயரமான முடிவுகளை எடுக்கிறார்கள், மிருகங்கள் கூட காதல் வழிவரும் காமத்திற்குகாக சண்டையிட்டு மண்டை கைகால்கள் உடைத்து கொள்வதை டிஸ்கவரி சேனல் முதல் பலவற்றில் பார்க்கிறோம்.

அப்பேர் பெற்ற காதலால் ஒருவர் அடையும் மகிழ்ச்சி துயரம், வளர்ச்சி வீழ்ச்சி, நெருக்கம் பிரிவு, காதல் மோதல் ஆகியவற்றை காட்டும் கண்ணாடியாக உள்ளது ஜோதிடம், மனிதர்கள் திருமணத்திற்க்காகவும் திருமணத்திற்கு முன்பு, பின்பான இன்பங்களுக்கும் சம்பவங்களுக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தங்கள் வாழ்நாளில் எடுத்துக்கொள்கிறார்கள் என்று ஒரு ஆங்கில ஆராய்ச்சி கட்டுரையில் படித்த ஞாபகம் எனக்கு உண்டு,

என்னை பொறுத்தவரை காதல் மனிதர்கள் வாழ்வில் முழுவதும் பிண்ணி பிணைந்த ஒன்று அதாவது மூன்று விதமான காதலை எந்த ஒரு மனிதரும் தம் வாழ்நாளில் கொண்ட ஆக வேண்டும் : -

1) முதல் காதல்  - மனைவி, கணவன், காதலி, காதலன், தந்தை, தாய், குழந்தைகள் போன்றவர்கள் மீது வைக்கும் காதல். (உதாரணம் - தேவையில்லை)

2) இரண்டாது காதல் - சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் மீதோ அல்லது அனைத்து மானுடர்களின் மீதோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனிதர் மீதோ வைக்கும் காதல். (உதாரணம் - காந்தி, அன்னை தெரசா, வள்ளலார்)

3) மூன்றாவது காதல் - விருப்பம் கொண்டோ அல்லது விருப்பு வெறுப்பற்றோ இறைவனின் மீது பக்தன் கொள்ளும் காதல். (உதாரணம் - ஆண்டாள், மீரா, திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்)

இதில் நாம் முதல் காதலை பற்றித்தான் அதிகமாக பார்க்க போகிறோம் இந்த பதிவுகளின் மூலமாக காதலை பற்றிய ஜோதிட கட்டுரைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் காதலுக்கான அதிகார கிரகங்கள் - சுக்கிரன் (காதல் காரகன்), சந்திரன் (மனோ காரகன்), செவ்வாய், இராகு (உணர்வை தூண்டிவிடக்கூடியவன்). சுக்கிரன் காமக்காரகன் (ஆண்களுக்கு), செவ்வாய் காமக்காரகன் (பெண்களுக்கு), காமத்தை (கலவியல் - Sex) இதை இங்கே பேசவேண்டுமா என்று உங்களுக்கு தோன்றாது என்று நினைக்கிறேன் ஏன் என்றால் காதலையும் காமத்தையும் பிரிக்க முடியாது என்பதை நான் விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் இங்கே மனிதர்களாக நாம் நாட்டில் வாழ்வதற்கு கலவு (sex) தான் காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.

"தந்தை தன்னையே தாய் தொடாவிடில் நீயும் இல்லையே நானும் இல்லையே" - கண்ணதாசன்

சரி காதலுக்கான ஜோதிட ஸ்தானங்கள் - லக்னம், 5 ஆம் ஸ்தானம், 7ஆம் ஸ்தானம், 11ஆம் ஸ்தானம். லக்னாதிபதி, 5 ஆம் ஸ்தானாதிபதி, 7ஆம் ஸ்தானாதிபதி, 11ஆம் ஸ்தானாதிபதி.

கலவியலுக்கான ஜோதிட ஸ்தானங்கள் - 4 ஆம் ஸ்தானம், 8ஆம் ஸ்தானம், 12ஆம் ஸ்தானம் இதை பற்றி நான் இந்த பதிவுகளில் அதிகமாக எழுத போவதில்லை அதனால் இந்த பதிவுகளுக்கு (A) grade கொடுக்க வேண்டியதில்லை, (U/A) grade வைத்துகொள்ளுங்கள்.

தொடரும்...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "காதல் ஜாதகம் - சாதகமும் பாதகமும் பகுதி 1…"

கருத்துரையிடுக

Powered by Blogger