ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 22 - அஸ்திர யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 22 - அஸ்திர யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


அஸ்திரயோகம்
ஜென்ம லக்னத்திற்கு 6 ஆம் ஸ்தானாதிபதி ஆட்சி, உச்சம் அடைந்தால் நட்பு கிரகங்கள் உடன் சேர்ந்தால் பார்த்தால் இந்த யோகம் ஏற்படும், ஜென்ம லக்னத்திற்கு 6 ஆம் ஸ்தானாதிபதி இராசிகட்டத்தில் நட்பு,சம வீடுகளில் இருந்து நாவம்சத்தில் ஆட்சி உச்சம் அடைந்தாலும் இந்த அஸ்திரயோகம் ஏற்படும். ஆனால் இந்த வகை யோகத்தை நன்கு ஆராய்ந்து தான் முடிவுக்கு வரவேண்டும்.
இதன் பலன்கள் -
தனக்கு கடினமான எதிரிகளையும் தோல்வியுறச் செய்வார், நெஞ்சு உறுதிமிக்கவர், சுய மரியாதை, வலுவான உடல், கருத்துகளிலும் மற்றும் விவாதங்களிலும் ஆணி அடித்தார் போல் பேசக்கூடியவர், துணிந்து மோதுவார், தோல்வியை ஏற்க மாட்டார் வெற்றியை விடுக்கொடுக்க மாட்டார், புத்தியை எந்த விதத்திலும் திருப்ப கூடியவர்.

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 22 - அஸ்திர யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger