கடகம் லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்…

கடகம் லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்
  


முதல் பாடலின் விளக்கம் -
கடக (சந்திரன் வீடு) லக்கினத்தில் தோன்றியவருக்கு களத்திர (வாழ்க்கை துணை) ஸ்தானம் மகரம் ஆகும் அதற்கு நாயகன் சனி (நியாயன்) பகவான் ஆகும் இந்த லக்கினத்தில் தோன்றியவருக்கு இல்வாழ்க்கையை பற்றி கூறுகிறேன் கேட்பாய் ஆக சந்திரன் வளர்பிறை தேய்பிறைக்கு தக்கவாறு மறக்கூடியவர் அதே போல கடக லக்கினத்தில் தோன்றியவரின் மனமும் சூழலுக்கு தக்கவாறு மாறக்கூடியது மந்தன் என்று பெயர் பெற்ற சனி நிலையான மெல்ல மாறும் மனதிற்கு சொந்த காரன் எனவே இந்த இருவர்கூடி வாழ்க்கை துணையை அமைத்து தரும் கடக லக்கினத்திற்கு ஜாதகத்தில் சந்திரனின் நிலையானது சனியின் நிலைக்கு ஒத்துப்போயிருந்தால் கணவன் மனைவியின் மனநிலை புரிந்து நடந்து கொள்வார், மனைவி கணவனின் சூழ்நிலையை புரிந்து விட்டுக்கொடுத்து செல்வார், சுற்றத்தாரால் மதிப்பு ஏற்படும், வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் யோகமாக அமையும், நல்ல உழைப்பு உள்ள ஆண்/ பெண் ஆக அமைவார் அதனால் வாழ்வில் உயர்வு ஏற்படும், நிம்மதியான குடும்பம் ஏற்படும் இதை சனி (நீலன்) பகவான் சுப பலத்தை கண்டு உரைப்பாய்.

இரண்டாம் பாடலின் விளக்கம் -
சனி (நீலன்) பகவான் சுப பலத்தை கூறுகிறேன் கேட்பாய் ஆக  கடக லக்கினத்தில் 3ஆம், 4ஆம், 7ஆம், 8ஆம், 9 ஆகியவை சுப பல ஸ்தானங்கள் இங்கு பகை கிரகங்களுடன் சேராமல் (சூரியன், செவ்வாய்) அதனுடன் இராகு, கேதுவும் சேர்த்துக்கொள்ளலாம் இப்படி பகை கிரகங்களுடன் சேராமல் இருந்தால் மென்மையாக இல்லம் பேணுவார், பொறுப்பாய்

நடந்து கொள்வார்,வீட்டில் செல்வங்கள் விருத்தியாகும். பலமிழந்து அசுப பலம் பெற்று மற்ற வீட்டில் அமர்ந்தால் விரும்பதாத விஷயங்களில் கட்டாயபடுத்துவது, பிரிவு, தேவையில்லாத சந்தேகம் இருவருக்கு இடையே ஏற்படும், ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்வதில்லாத பிரச்சினைகள் வரும், பந்தங்களின் முரண்பாடால் துக்கம், ஆமை புகும் வீடாகும் இங்கு ஆமை என்பது சோம்பல் என்று பொருள் கொள்ள வேண்டும் அதாவது குடும்பத்தில் சோம்பல் மந்தம் போன்ற மங்களமற்ற நிலை ஏற்படும் இதை சனி (நீலன்) பகவான் சேர்ந்த  நவகோள்களின் நிலைகளையும் ஆராய்ந்து பின் உரைப்பாய் இந்த கோள்முனி சொன்னதை.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "கடகம் லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்…"

கருத்துரையிடுக

Powered by Blogger