Spiritual Strength - தெய்வீக புண்ணியங்கள் (ஆன்மீக செயல் பலங்கள்)…

Spiritual Strength - தெய்வீக புண்ணியங்கள் (ஆன்மீக செயல் பலங்கள்)

ஒரு தனி நபரின் ஜாதகத்தில் ஆன்மீக பலத்தையும் தெய்வீக புண்ணியத்தையும் காட்டும் கிரகங்களாக இருப்பது சூரியன், சந்திரன், குரு பகவான் ஆகும் அது போக ஜனன லக்னம், 5 ஆம் ஸ்தானம், 8ஆம் ஸ்தானம், 9 ஆம் ஸ்தானம், 12 ஆம் ஸ்தானமும் அதன் ஸ்தானாதிபதிகளின் பலமுமே ஜாதகருக்கு இருக்கும் ஆன்மீக பலத்தையும் தெய்வீக புண்ணியத்தையும் காட்டும்,

சரி தெய்வீக புண்ணியங்கள் என்றால் என்ன பொது மக்கள் பலரும் வழிபடக்கூடிய கோயில்கள் அமைத்தல், கோயில்களுக்கு தினந்தோறும் தேவையான பொருட்களை வழங்குதல், இறைவனை புகழும் மற்றும் இறைவனை அடைய உதவும் இலக்கியங்களுக்கு உதவுதல் மற்றும் ஆதரவு தருதல், அனாதை விடுதிகள் இறைவனின் அடியார்களுக்கு அன்ன தானங்களை வழங்குதல் தேவையான பொருட்களை வழங்குதல், இறைவனின் அடியார்கள், துறவிகளுக்கு உதவுதல், பொது மக்கள் இறைவுணர்வு பெறுவதற்க்கான காரியங்களில் ஈடுபடுதல், கல்விக்கு உதவுதல், குளங்களை வெட்டுதல், நோய்க்கு மருந்தளித்தல் போன்ற புண்ணியங்களை ஒருவர் போன பிறவியில் செய்திருந்தால் அவரின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், குரு பகவான் வலிமையான சுப பலத்தை பெறும் அது போக ஜனன லக்னம், 5 ஆம் ஸ்தானம், 8ஆம் ஸ்தானம், 9 ஆம் ஸ்தானம், 12 ஆம் ஸ்தானமும் அதன் ஸ்தானாதிபதிகளும் வலிமை அடைந்திருப்பார்கள்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger