ரூப்பர்ட் மர்டாக் (Rupert Murdoch) ஜாதகம் கணிப்பு - உலகில் பெரிய ஊடக நிறுவனங்களின் தலைவர்…

ரூப்பர்ட் மர்டாக் (Rupert Murdoch) ஜாதகம் கணிப்பு

கீத் ரூப்பர்ட் மர்டாக் இவரது வணிக நிறுவனம் நியூஸ் கார்ப்பரேஷன் உலகில் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளார். இவரது நியூசு கார்ப்பரேசன் எனும் நிறுவனம், ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், ஒரு ஹாலிவுட் திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் உரிமையாளரான உலக ஊடகத்துறை சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் இவரது ஜாதகத்தின் தன்மைகளை தற்போது பார்ப்போம் மேல் சொன்ன நிறுவனங்களை உங்களுக்கு தெரியாவிட்டாலும் ஸ்டார் குழுமம் ஆன ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் உரிமையாளரும் இவரே தான் இப்போது விஷயத்திற்கு வருவோம்.
ரூப்பர்ட் மர்டாக் (Rupert Murdoch) ஜாதகம் - பிரபலங்கள் ஜாதகம்

ஊடகத்துறைத்துறையில் ஒருவரை சிறந்த அளவில் கால்பதிக்க காரகத்துவம் பெற்ற கிரகங்கள் புதன், குரு, சுக்கிரன் அரசியல் பத்தரிக்கை ஊடகத்துறையானால் சூரியன், செவ்வாயும் காரகத்துவம் பெற்ற கிரகங்கள் இவரின் ஜாதகத்தில் புதன் குருவின் சாரம் பெற்று சூரியனுடன் அஸ்தங்கபட்டு தன் வலிமை சூரியனிடம் தந்து நிற்கிறார் அந்த சூரியனே தனுசு லக்னத்தின் பாக்கியாதிபதியும் யோகாதிபதியும் ஆவார் தொழில்ரீதியான பாக்கியங்கள் தரக்கூடிய நிலை ஏற்பட்ட சூரியனும் தர்மாதிபதியான புதனும் கூடி பலம் பெற்றதால் 9,10 க்குடையவர்கள் இவர்கள் சேர்ந்து ஒரு வீட்டில் அமர்ந்தது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும் இந்த யோகம் அமைந்தவர்கள் செய்யும் செயல்கள் சிறந்த மதிப்பு, மரியாதையை தேடித் தரும், அது மிகச்சிறப்பாக அமைந்திருந்தால் மதிப்பு, மரியாதை, உலகப் புகழ் பெறும் யோகம் எல்லாம் சிறப்பாக அமையும் அத்தகைய யோகம் புதன் சூரியனுக்கு இடையே ஏற்பட்டதால் ஊடகத்துறைத்துறையில் கொடிகட்டி பறக்கும் சக்ரவர்த்தியாக திகழ்கிறார்.



சக்ரவர்த்தி ராஜா எல்லாம் சரி பணம் வரணுமே வரும் பணபர ஸ்தானங்களான 2,5,8,11 ஆகிய ஸ்தானங்கள் இராசி கட்டத்தில் வலுவடைந்து இருந்தால் அது ஒரு கோடீஸ்வர யோகம் பணம் வரும் இதற்கு பணபர ஸ்தானங்களுக்கு இடையே பலமான தொடர்புகள் பெற்று திடமான தொடர்பாக இருக்கவும் வேண்டும். இவரின் ஜாதகத்தில் -



> 2 ஆம் அதிபதி சனியும் 8 ஆம் அதிபதி சந்திரனும் சேர்ந்து லக்னத்தில் அமைந்து லக்னாதிபதி குருவால் பார்க்கபடுவது.

> 5 ஆம் அதிபதி செவ்வாய் 11 ஆம் அதிபதி சுக்கிர பகவான் பணபர ஸ்தானங்களான 2, 8 ஆம் ஸ்தானங்களில் அமர்ந்து ஒருவரை ஒருவர் சப்தம பார்வையாக பார்த்துக்கொள்வது.

> சுக்கிரன் 8 ஆம் அதிபதி சந்திரனின் நட்சத்திர சாரத்தில் வலுவடைந்து அமர்ந்துள்ளது.

> 11 ஆம் அதிபதி செவ்வாய் 2 ஆம் அதிபதி சனியின் நட்சத்திர சாரத்தில் வலுவடைந்து அமர்ந்துள்ளது.



இப்படியாக பணபர ஸ்தானங்களான 2,5,8,11 ஆகிய ஸ்தானங்கள் இராசி கட்டத்தில் வலுவடைந்து கோடீஸ்வர யோகம் அமைந்துள்ளது.



அரசியல் சார்ந்த பத்தரிக்கை ஊடகத்துறையினால் தான் பெரிய வெற்றிகளை வாழவில் ஆரம்ப காலகங்களில் ஈட்டினார் இதற்கு பலமான சூரியன் உபஜெய ஸ்தானமான 3ல் அமைந்து குருவின் நட்சத்திர சாரத்தில் வலுவடைந்து மேலும் அந்த லக்னாதிபதி குருவால் பார்க்கபடுவதும் மேலும் அதை மற்றொரு அரசியல் கிரகமான செவ்வாய் 8 ஆம்  பார்வையாக பார்ப்பதும் சேர்ந்து வலுவடைந்து அரசியல் சார்ந்த பத்தரிக்கையினால் முன்னேற தொடங்கினார்



இப்படிபட்ட பலமான சூரியனால் இவரது தந்தையும் நன்கு மதிக்கப்படும் பத்திரிகையாளர் திகழ்ந்தவர் அவருக்கு மகனாக பிறந்ததால் மர்டோக் மிக இளம் வயதில் இருந்து ஊடகத்துறையில் (பப்ளிஷிங்) நுழையும் சிறந்த வாய்ப்பை பெற்றார், 3க்குடைய சனி 4க்குடைய குரு இந்த இரு கிரகங்களின் ஒருவரை ஒருவர் சப்தம பார்வையாக பார்த்துக்கொள்வதால் இங்கிலாந்தில் வர்செஸ்டர் கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்து தேர்ந்தார்.



சர்ச்சைகளின் நாயகன்

ஆரம்பம் முதலே சர்ச்சைகளின் நாயகானாகவே வலுவருகிறவர் ஆம் இவர் அதர்மம் மற்றும் தர்மம் என்று எதுவும் பார்க்காமல் சம்பாதித்தவர் விரிவகா பாருங்கள் இவரின் பாதகாதிபதியும் மாராகாதிபதியும் ஆன புதனுடன் சூரியன் சேர்ந்து சனிவீட்டில் அமர்ந்ததால் இவரின் தந்தை இவரின் இளம் வயதில் இறந்தார் அதனால் 22 வயது மர்டோக் தன்னுடைய தந்தையின் நிறுவனத்தை பொறுப்பேற்க தொடங்கினார், மர்டோக் நாளிதழ்களின் தினசரி நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் தன்னை முழுக்க ஆட்படுத்திக் கொண்டார் அவர் பக்கம் அமைப்பு, மறுவடிவமைப்பு மற்றும் அச்சு மற்றும் அச்சிடும் நேரங்கள் இவற்றில் எல்லாம் தன்னை ஈடுபட்டுக்கொண்டிருந்தார் மற்றும் தலைப்பு செய்திகள் எழுதினார் இவரின் கையில் நிறுவனம் வந்த உடன் வெறும் செய்தி வடிவமாக மட்டும் இல்லாமல் குற்றம், பாலியல் மற்றும் ஊழல் பதிவு ஆவணமாக சர்ச்சைக்குரிய இருந்த செய்திகளால் மாற்றப்பட்டு இந்த மாற்றங்களினால் நாளிதழ் விற்கனை விண்ணை நோக்கி பறந்தது,



அதாவது எழுத்துதுறைக்கு காரகத்துவம் பெற்ற 5 ஆம் ஸ்தானாதிபதி செவ்வாய் நீசம் அடைவில்லை நீசபங்கம் ஆகிறார் அதை பின் கூறுகிறேன் செவ்வாய் நீசபங்க ராஐயோகத்தை 8 ஆம் வீட்டில் பெற்றது அதை சுக்கிரன் பார்ப்பது, பாதக ஸ்தானத்தில் லக்னாதிபதி இருப்பது, 10க்கும் ஆதிபத்தியம் பெற்ற பாதக ஸ்தானாதிபதி 9க்குடைய சூரியனுடன் சேர்ந்தது, நவாம்ச லக்னத்திற்கு பாதக ஸ்தானாதிபதி 10 ஆம் வீட்டில் ஆட்சி பெற்றது, 11ல் புதன், சந்திரன் சேர்க்கை, சூரியன் சனி சப்தம பார்வை என இவை அனைத்தும் சேர்ந்து சர்ச்சைகளின் நாயகானாக்கி சர்ச்சைக்குரிய செய்திகளால் பணத்தை ஈட்டினார்,



ஈட்டிய பணத்தை ஆரம்பகாலங்களில் நலிந்திருந்த சிறுஊடகங்கள் மற்றும் சிறு பெரிய பத்திரிக்கைகளை வாங்கி அதை தனது நிறுவனத்துடன் சேர்த்துக்கொண்டார் 7க்குடை புதனின் பலத்தாலும் மற்றும் நவாம்ச லக்னத்தில் 7க்குடைய குரு 10 ஆம் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றதாலும் அப்படி வாங்கினார் மேலும் ஒரு தொழில்அதிபரின் முக்கியமான பலம் எது தெரியுமா அதுவும் ஊடகத்துறையில் உள்ள தொழில்அதிபரின் பலம் என்ன தெரியமா துணிவு துணிவு துணிவு ஆம் செய்திகளை முந்திகொண்டு தர வேண்டும் அதுவும் தைரியமாக தரவேண்டும் மறுபடியும் சொல்லகிறேன் தைரியம் தைரியம் தைரியம் அது மூலமான பலம் அதற்கு காரகத்துவம் பெற்றவர் செவ்வாய் மேலும் இவரின் ஜாதகத்தில் எழுத்துதுறைக்கு காரகத்துவம் பெற்ற 5 ஆம் ஸ்தானாதிபதியும் அவரே அப்பேற்பட்ட செவ்வாய் நீசமா என்றோ எப்படி நீசபங்கம் என்றோ தங்களுக்கு தோன்றலாம்,



பாருங்கள் இவரின் தொழில் ஸ்தான பலத்தை காட்டும் தசாம்சம் கட்டத்தில் பாருங்கள் லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் ஆட்சி அடைகிறார்



மேலும் பாருங்கள் தொழில் ஸ்தான பலத்தை காட்டும் இவரின் 10 ஆம் பாத துவைதாம்சம் கட்டத்தில் லக்னத்திற்கு நான்கில் செவ்வாய் ஆட்சி அடைகிறார்


மேலும் பாருங்கள் தொழில் ஸ்தான பலத்தை காட்டும் இவரின் 10 ஆம் இராசிமானக் கட்டத்தை பாருங்கள் இதிலும் லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் உச்சம் அடைகிறார்        



ஆக தொழில் ஸ்தான பலத்தை காட்டும் ஸ்தானங்களில் எல்லாம் பெரும்பாலும் செவ்வாய் பலம் அடைகிறார் இதுவே இவருக்கு அமைந்த துணிவுடன் கூடி தொழில் அதிர்ஷட பலம் இதனால் தான் ஆப்பிரிக்கா மற்றும் அன்டார்டிகா ஆகிய இரு கண்டங்களைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் அவர் தனது ஊடகங்களை நிறுவி உள்ளார். இவருக்கு 146 செய்தித்தாள் நிறுவனங்களும், 28 வார, மாத இதழ்களும், ஃபாக்ஸ் டிவி, ஸ்டார் குழும சேனல்கள் போன்ற பல சேனல்களும் உள்ளன.



சரி தனிபட்ட வாழ்க்கையில் மட்டும் சர்ச்சைகள் இல்லை அதிலும் உண்டு ரூபர்ட் முர்டோக் அவர்கள் அவர் 1967 ஆம் ஆண்டு முதல் திருமணம் 1956 ஆம் ஆண்டில் நடந்தது 1965 ல் விவாகரத்தில் முடிந்தது, பின் இரண்டாம் திருமணம் 1956 ஆம் ஆண்டில் நடந்தது அது பிறகு 1999-ல் விவாகரத்து செய்தார், பின்பு முன்றாம் திருமணம் செய்தார் 17 நாட்களுக்கு மட்டுமே அந்த திருமண வாழ்க்கையிருந்தது, பின்னர் மர்டோக் தனது 68 வயதில் மீண்டும் திருமணம் செய்தார் அதுவும் 2013ல் வரை திருமண வாழ்க்கையிருந்தது பின் விவாகரத்து செய்தார், தனது 82 வயதில் மீண்டும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவிவருகிறது  இதிலும்  சர்ச்சைகளின் நாயகன் தான் இதற்கு விளக்கங்களை விரிவாக எழுத வேண்டும் எனவே சுருக்கமாக சொல்வதானால் லக்னத்தில் அமைந்த புனர்பூ தோஷம், சனி குரு லக்னம் அதாவது 1, 7ஆக இரு கிரகங்களின் ஒருவரை ஒருவர் சப்தம பார்வையாக பார்த்துக்கொள்வது, 11க்குடைய சுக்கிரன் 2ல் மேலும் அவர் நவாம்சத்தில் 12ல் ஆட்சி, நவாம்சத்தில் லக்னம் அதாவது 1, 7ஆக சூரியன் சனி சப்தம பார்வை பார்த்துக்கொள்வது என பலகூறுகள் உண்டு.



நான் ஏற்கெனவே சொன்ன படி பலமான சூரியனின் திசையில் முன்னேற ஆரம்பித்தார் பின் 10ல் இருக்கும் கேதுவின் சாரம் பெற்ற சந்திரனின் திசையில் அதை தக்கவைத்துக்கொண்டார், பலமான செவ்வாயின் திசையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கிளைகளையும் மற்றும் மற்ற நிறுவனங்களை கையகபடுவத்தினாலும் மேலும் முன்னேறினார், புதனின் சாரம் பெற்ற இராகுவின் திசையில் கண்டங்கள் தாண்டி வளர்ந்து உலகு எங்கிலும் கிளை பரப்பி உலக ஊடகத்துறை சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தியாக திகழ்கிறார்.





2 Response to "ரூப்பர்ட் மர்டாக் (Rupert Murdoch) ஜாதகம் கணிப்பு - உலகில் பெரிய ஊடக நிறுவனங்களின் தலைவர்…"

  1. Thirumal says:

    ஐயா

    பதிவுகள் அனைத்தும் மிக அருமை. நேர்த்தியான முறையில் சீராக வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியாக வருவது சிறப்பு.
    எந்த மென்பொருளை பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

கருத்துரையிடுக

Powered by Blogger