நவகிரகங்களின் காரகத்துவம் பெறும் 12 ஸ்தானங்கள்…


இதை காரக லக்னம் என்று நம் முன்னோர்கள் அழைப்பர் அதாவது ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் காரகத்துவங்கள் அடிப்படையில் 12 ஸ்தானங்களையும் பிரித்து தங்களின் ஆளுகையை காட்டுகின்றன என்பது ஜோதிட விதி ஆகும், முதலில் நான் அடிக்கடி சொல்லும் இந்த காரகத்துவம் என்று சொல்லுக்கு பலர்க்கு பொருள் தெரியாமல் இருக்கலாம் காரகத்துவம் என்றால் குணம், பண்பு, தன்மை, நடத்தை, உரிமை உதாரணமாக சூரியனின் காரகத்துவம் என்றால் சூரியனின் குணம், பண்பு, தன்மை, நடத்தை, உரிமையான விஷயங்கள் என்று அர்த்தம் சரி இப்போது நவகிரகங்களின் காரகத்துவம் பெறும் 12 ஸ்தானங்கள் பார்ப்போம் 


இது எப்படி பார்க்கபடும் என்றால் உதாரணமாக ஒருவரின் சகோதர வலிமையை காண 3 வது ஸ்தானம் மற்றும் 3 வது ஸ்தானாதிபதியுடன் செவ்வாயின் தொடர்பும் செவ்வாய்க்கு 3 வது ஸ்தானாதிபதியின் பலமும் ஜாதகத்தில் செவ்வாயின் இயற்கை பலமும் நன்றாக இருந்தால் அவரின் சகோதர ஸ்தானம் வலிமை பெறும்.

வேறு ஒரு உதாரணமாக ஒருவரின் சொந்தமாக வீடு வாங்கும் வலிமையை காண 4 வது ஸ்தானம் மற்றும் 4 வது ஸ்தானாதிபதியுடன் சுக்கிரனின் தொடர்பும் சுக்கிரனுக்கு 3 வது ஸ்தானாதிபதியின் பலமும் ஜாதகத்தில் சுக்கிரனின் இயற்கை பலமும் நன்றாக இருந்தால் அவரின் வீடு வாங்கும் ஸ்தானம் வலிமை பெறும்.

இதில் சில பலவீனங்களும் உள்ளன உதாரணமாக சூரியன் காரகத்துவ ஸ்தானம் ஆன 9 வது ஸ்தானத்தில் சூரியன் அமரும் போது அதிக ஒளியை காரணமாக எப்படி பார்வைத்திறன் குறைவுபடுமோ அது போல சூரியன் காரகத்துவ ஸ்தானம் ஆன 9 வது ஸ்தானத்தில் சூரியன் அமரும் போது அந்த 9 வது ஸ்தான காரகத்துவங்களில் சற்று குறைபாடும் கூடவே தோன்றும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 



1 Response to "நவகிரகங்களின் காரகத்துவம் பெறும் 12 ஸ்தானங்கள்…"

  1. humluck says:

    Vanakam sir,
    I am Ariram V, date of birth is 22-4-1991 at 5.56 am in Tirunelveli district. But, In my jathagam time was written as 5.24 Am. So i am Meena lagnam as per this time.As per original birth time(5.56 Am) my lagnam is Mesham.So which time is correct?
    Thanks sir...

கருத்துரையிடுக

Powered by Blogger