நவகிரகங்களில் பொதுவான சுபர், பாபர் தன்மை கொண்ட கிரகங்கள்

நவகிரகங்களில் பொதுவான சுபர், பாபர் தன்மை கொண்ட கிரகங்கள்
(1) வியாழன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இயற்கை அனுகூல அல்லது சுப கிரகங்களாக உள்ளன.

(2) சூரியன், செவ்வாய், ராகு, கேது இயற்கை பாப அல்லது அசுப கிரகங்களாக உள்ளன.

(3) வளர்பிறை சந்திரன் என்றால் சுப கிரகம் அதாவது சூரியனிலிருந்து 174 பாகைக்குள் சந்திரன் இருந்தால் சுபசந்திரன் ஆகும், தேய்பிறை சந்திரன் என்றால் அசுப கிரகம் அதாவது சூரியனிலிருந்து 174 பாகைக்கு மேல் 354 பாகைக்குள் சந்திரன் இருந்தால் அசுபசந்திரன் ஆகும்.

(4) புதன் தனியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இயற்கை சுப கிரகங்களுடன் சேர்ந்து இருக்கும் போது புதன் சுப கிரகம் ஆகும், புதன் அஸ்தங்கம் ஒன்றுக்கு மேற்பட்ட பாப கிரகங்களுடன் சேர்ந்து இருக்கும் போது புதன் அசுப கிரகம் ஆகும்.


வியாழன், வளர்பிறை சந்திரன் மற்றும் சுக்கிரன் - சத்வகுண கிரகங்கள் இலக்கணம்:- நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.

சூரியன் மற்றும் செவ்வாய் - இராட்சத குண கிரகங்கள் இலக்கணம், ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் இராட்சத குணமாகும்.

இராகு, சனி, தேய்பிறை சந்திரன் - தாமச குண கிரகங்கள் இலக்கணம்:- காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.

புதன் மற்றும் கேது - இருக்கும் இராசி, சாரம், சேரும் கிரகம் போன்ற காரணங்களின் அடிப்படையில் மேலே சொன்ன மூன்று குணங்களில் எதாவது ஒன்றில் சேரும்.


முக்குணங்களின் கலவை குணங்கள் ஒரு கிரகம் இருக்கும் இராசி, சாரம், சேரும் கிரகம் போன்ற காரணங்களின் அடிப்படையில் ஏற்படும்.

சந்திரன், செவ்வாய் மற்றும் சனி இரவு நேரத்தில் வலுவான கிரகமாக உள்ளன.
சூரியன், வியாழன் மற்றும் சுக்கிரன் பகல் நேரத்தில் வலுவான 
கிரகமாக உள்ளன.
புதன் எப்போதும் வலுவான  கிரகமாக இருக்கிறது.

இயற்கை அசுப கிரகங்கள் கிருஷ்ணா பக்ஷத்தில் வலுவான கிரகங்களாக உள்ளன. 
இயற்கை சுப கிரகங்கள் சுக்ல பக்ஷத்தில் வலுவான கிரகங்களாக உள்ளன. 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "நவகிரகங்களில் பொதுவான சுபர், பாபர் தன்மை கொண்ட கிரகங்கள்"

கருத்துரையிடுக

Powered by Blogger