கடனும் ஜோதிடமும் அறிமுகம் - கடன் அன்பை முறிக்குமா?…


கடனும் ஜோதிடமும் அறிமுகம் - கடன் அன்பை முறிக்குமா?…

இந்திய பாரம்பரியத்தில் இந்திய தமிழ் மக்களால் கடன் வாங்குதல் அவமானம் ஆகவும் மதிப்பிழக்கும் செயலாகவும் கருதபட்டது கொடை (தானம்) உயர்வாகவும் கருதபட்டது "இட்டார் பெரியோர்" என்றார் ஔவை பாட்டி, இருப்பதை கொண்டு வாழப் பழகு என்பது தான் நம் முன்னோர்களில் பழமொழி சரி இன்றை யுகத்திற்கு அந்த பாரம்பரியம் மாறிவிட்டது எப்போது 1990களில் உலகமயமாக்கல் வந்ததோ அப்போது முதல் இந்திய சமூகம் மாற ஆரம்பித்தது,

இன்றை யுகத்து ஆளான நான் நம் முன்னோர்களில் கடன் சார்ந்த பாரம்பரிய மாண்புகளையும் உணர்ந்து அதே சமயம் தற்கால கடனால் முன்னேற ஆரம்பிக்கும் புதிய தலைமுறை வளர்ச்சியையும் சேர்த்து அதில் இருக்கும் நன்மைகளையும் சேர்த்து எனது ஜோதிட அறிவை சரிசமபடுத்தி கடனும் அதை சார்ந்த ஜோதிடமும் காண தற்கால பொருளாதாரமுறை மேலும் உதவிகரமாக உள்ளது.

தற்கால உலகமயமாக்கல் பொருளாதாரமுறையில் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அதை கொடுக்கும் வங்கிகளும் அதனால் உண்டாகும் வட்டியை வைத்து லட்ச லட்சம் பணியாளர்களின் மாதவருமானமும் அடங்கியிருப்பதாக மாறிவிட்டது அதனால் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் மூலம் வீட்டுக்கடன்,  தனிநபர் கடன், கல்விக்கடன்,  திருமணம், சுற்றுலா, மருத்துவச் செலவு என அனைத்து வகைகளிலும் கடனை கொடுப்பது அதிகரித்துள்ளது,

மேலும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடன், வாகனக் கடனும் சேர்ந்து கொள்கிறது பின் அதற்கு மாதமாத வட்டிகட்டும் முறைகளும் வந்துவிட்டது மேலும் புதிய வட்டிகட்டும் முறைகளும் வந்துவிட்டது ஆக கடனில்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியாது அல்லது கடன் வாங்காமல் புதிய முயற்சி மற்றும் முன்னேற்றங்கள் சாத்தியமில்லை என்ற அளவில் வந்து நின்றுள்ளது தற்கால பொருளாதாரமுறை,

கடனுக்கு என்று எப்போதுமே பொதுவான குணா குணாங்கள் உள்ளன உதாரணமாக நாம் சினிமாவில் மாயமந்திரீக கோட்டை ஒன்று இருக்கும் அதில் வெளியில் இருந்து ஒருவன் கதாநாயகனை அந்த மாயமந்திரீக கோட்டைக்குள் அனுப்புவான் அந்த கதாநாயகன் ஒரு வாயில் நுழைந்து பலசிரமங்கள் இடையூறுகளை தாண்டி ஒரு புதையலையோ அல்லது மந்திர வாள், மந்திரவிளக்கு போன்றவற்றை எடுத்து கொண்டு மீண்டும் பலசிரமங்கள் இடையூறுகளை தாண்டி வெளியில் தப்பிசெல்லும் வாயிலுக்கு வந்து தப்பி வருவார் இந்த சம்பங்களில் அந்த கதாநாயகனுக்கு இருக்கும் மனநிலையில் தான் ஒவ்வொரு கடன் கொடுத்த மற்றும் கடன் வாங்கியவர்களின் மனநிலையும் இருக்கும்,

ஆம் கடன் வாங்கியவருக்கு அந்த கதாநாயகனின் மனநிலை அதாவது பலசிரமங்கள் இடையூறுகளை தாண்டி தனது இலக்கை அடைந்து அதை வெற்றியாக்கி பின் அதன் சரியான பலனை அனுபவிக்க வேண்டுமே என்ற மனநிலை இருக்கும், கடன் கொடுத்தவருக்கோ அந்த தான் கொடுத்த கடனை அவன் சரியாக பயன்படுத்தி தனக்கு அசலும் வட்டியும் முழுமையாக தரவேண்டுமே என்ற மனநிலை இருக்கும் இது தான் கடனின் பொதுவான ஒரு குணா குணம், அதன் பெயர் "பதட்டம்" ,

கடனுக்குகென்று பல ஜோதிட பதிவுகளை எழுத வேண்டிவந்துள்ளது ஏனென்றால் கடனுக்கு இன்றையுகத்தில் பலவண்ணங்கள் வந்துவிட்டது அத்தியாவசிய கடன், ஆடம்பரக்கடன், அனாவசிய கடன், கணக்குகாட்ட கடன் என பலவடிவங்கள் கொண்டதாக கடன் மாறிவிட்டது.

உதாரணமாக
அத்தியாவசிய கடன் = வாகன கடன், வீட்டுக்கடன்
ஆடம்பரக்கடன் = உயர்ரக வாகனக்கடன், உயர்ரக வீட்டு உபயோகப்பொருட்கள் கடன்
அனாவசிய கடன் = உண்மையான தேவையில்லாமல் பிறர் நிர்பந்தத்தால் வாங்கும் கடன்
கணக்குகாட்ட கடன் = வருமான தணிக்கைக்கு பயனபடுத்தபடும் கடன்

கடன் பற்றி கொள்கைகளையும் அதன் வட்டிகட்டும் முறைகளையும் கடனுக்கும் நாட்டின் வீட்டின் பொருளாதார மாற்றங்களை படிப்பதற்க்காக உயர்கல்வி கல்லூரிகளிலும் பல்கலைகழக ஆராய்ச்சிகளும் தற்போது உலகப் பெருநகரங்களில் வந்துவிட்டது அந்த அளவுக்கு கடன் ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றும் (ஏற்றும் அல்லது இறக்கும்) பொருளாதார சக்தியாக மாறிவருகிறது.


தொடரும்...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 



0 Response to "கடனும் ஜோதிடமும் அறிமுகம் - கடன் அன்பை முறிக்குமா?…"

கருத்துரையிடுக

Powered by Blogger