துலா லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்…

துலா லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்


முதல் பாடலின் விளக்கம் -
துலா (தராசு) லக்னத்தில் பிறந்தவர்களுக்கு களத்திர (இல்லற வாழ்க்கை) ஸ்தானம் மேஷம் ஆகும் அதற்கு நாயகன் செவ்வாய் (மங்களன்) பகவான் ஆகும் இந்த லக்கினத்தில் தோன்றியவருக்கு இல்வாழ்க்கையை பற்றி கூறுகிறேன் கேட்பாய் ஆக செவ்வாய் (வீரன்) பலம் பெற்று சுக்கிரன் (சுங்கன்) சம பலம் பெற்றிருந்தால் நல்லதாம் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் வாழ்க்கை துணையானவர் (கணவன்\மனைவி) உள்ளத்தால் பலமானவர், செயலில் ஆற்றல் மிக்கவர், மனக்கிளர்ச்சி உள்ளவர், பேச்சில் துணிவானவர், வெப்பமான உயரமான உடலமைப்பை பெற்றிருப்பார், குடும்பத்தை வலிமையாக நடத்தி செல்வார், வாழ்க்கை துணையிடம் தனது விருப்பத்திற்கு உரிய இடமும் மரியாதையும் எதிர்பார்க்க கூடியவர், வாழ்க்கை துணையிடம் கோபப்படுதல் அதே சமயம் அந்த அளவுக்கு நெருக்கத்தையும் காட்டுதல் இரண்டிலும் தீவிரமானவர், தனது குலத்தை பராமரிப்பார்.

இரண்டாம் பாடலின் விளக்கம் -
செவ்வாய் (அங்காரகன்) பலத்தை கூறுகிறேன் கண்டு கொள்வாயாக துலா லக்கின 3ஆம், 4ஆம், 5ஆம், 7 ஆகியவை  செவ்வாய் பகவான் அமர பலமான ஸ்தானங்கள் மற்றபடி 2ஆம், 6ஆம் ஸ்தானங்கள் சரிபாதி பலமான ஸ்தானங்கள் அதில் சுபகிரகங்களுடன் அந்த செவ்வாயிக்கு தொடர்பு ஏற்பட்டால் மேலே சொன்ன மேன்மையான பலன்கள் நடக்கும், அதில் மாறி அமைந்திருந்தால் பாபர் சூழ்ந்திருந்தால் வாழ்க்கை துணையானவர் (கணவன்\மனைவி) சொன்ன சொல் கேட்க மாட்டார், குறுகிய மனப்பான்மை அல்லது நியாயத்திற்கு முரண்பட்டவராகலாம், குடும்பத்தில் கலகம் செய்வார், அங்கீணங்கள் ஏற்படலாம் , விளக்கில் திரிக்கு பொருந்தாத எண்ணெய்யும் எண்ணெய்யைவிட பெரிய திரியும் ஆக அமைந்த விளக்கை போல் இல்லற வாழ்க்கையும் ஆகும் இதை நவகோள்களின் நிலைகளையும் ஆராய்ந்து பின் உரைப்பாய் இந்த கோள்முனி சொன்னதை.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "துலா லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்…"

கருத்துரையிடுக

Powered by Blogger