மஹாமகத்தின் புராண புண்ணியமும் சிறப்பும் நீராடுதலும்...



மகாமகத்தின் புராண வரலாறு சிறுபார்வை -

இந்துமதத்தின் மூலதத்துவத்தின் படி பாவமன்னிப்பு என்பது கிடையாது அவர் அவர் செய்த கர்மங்களை அவர் அவர் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது நியதி அதனால் இறைவனின் அருள் அல்லது கருணை என்பது பக்தர்களுக்கு பாவமன்னிப்பு என்றில்லாமல் தங்களது பாவத்தை போக்கும் வழிகளை சொல்லி அந்த முறையில் நடக்க செய்வதே இறைவனின் மகத்துவமாக இந்து மதம் பேசும்,

ஒவ்வொரு பிரளய காலத்தில் அதாவது பூமிக்கு பிரளய (அழிவு) ஏற்படும் காலம் அதாவது பூமிக்கு அழிவில்லை, பூமி வாழ் உயிரினங் தோற்றம் மறைவு விதியின் படி ருத்திரன் பூமி வாழ் உயிரினங்களின் உடல்களை அழிக்கிறான் அப்படிபட்ட சமயத்தில் பூமி வாழ் உயிரினங்களுக்கு அழிவு ஏற்படும் காலத்தில் உடல்கள் அழிந்தாலும் பூமி வாழ் உயிர்களின் உயிர் மூலத்தை பிரம்மா குடத்தில் (கும்பம்) அடைத்து விடுகிறார் அதை பாற்கடலில் துயிலும் நாராயணன் காக்கிறார்,

பின் அவ்வுயிரிகள் மீண்டும் உடல் சார்ந்த வாழ்க்கையை வாழ்வதற்க்காக சிவபெருமான் கருணையின் காராணமாக கும்பத்தில் இருந்து உயிர்களை விடுவித்து மறுவாழ்வுக்கு வித்திடுகிறார் அப்படி அவர் கருணை கொண்டு உயிர்களை தர்மத்தின் படி வாழ அறிவுறுத்தி உடல் சார்ந்த உயிர் வாழ்க்கை வாழ பஞ்சபூதங்களை அதற்க்கு ஏற்றாற் போல் ஆக்கி பூமியில் உயிர்களின் தோற்றத்தை ஏற்படுத்துகிறார் அப்படி அவர் ஏற்படுத்திய காலங்கள் தான் இந்த மாசி மகாமக தினம் ஆகும் என்பது புராண ஐதீகம்.

மகாமகத்தின் வான்கணிதம்-

மகாமகத்தின் வான்கணக்கை தெரிவதற்கு முன் அதில் தொடர்பு பெறும் அமைப்புகளின் சிறப்பை தெரிவது நல்லது

கும்பம் இராசி மண்டலம் சிறப்பு -

அவிட்டம் 2,3 பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய மண்டலமே இந்த கும்பம் இராசியின் மண்டலம் ஆகும் அதாவது கும்பம் என்றால் பொதுவாக குடம் மற்றும் கலசம் ஆகும் ஆனால் நுணுக்கமாக உள்ள பொருள் மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரம் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்பட்டு வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக கோண வடிவங்களில் நுணுக்கமாகக் சுற்றபட்டு நீரினால் நிரப்பபட்ட அப்பாத்திரத்திற்கு மந்திரங்கள் சொல்லி சப்த அலைகள் ஏற்றபட்டு தெய்வீக அனுகிரகம் கொள்ளும் போது அது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது இப்படி நிறைவு பெற்ற பூர்ண கும்பம் இறைவன் குடிகொண்டுள்ளதாக உள்ளதாக ஐதீகம்.

மேலே சொல்லபட்ட அனைத்தும் ஒவ்வொரு உயிர்களின் உருவாக்கம் மற்றும் இறை பக்குவ நிலைகளை சொல்லுகின்றன, உதாரணமாக மந்திரங்கள் சொல்லி சப்த அலைகள் ஏற்றபடும் இராசி மண்டலம் தனுசு  இப்படி ஒவ்வொரு இராசி மண்டலமாக கடந்து வரும் உயிர்கள் கும்பத்தை அடையும் போது மனநிறைவு, இறைபக்குவம், தெளிவு, பகுத்துணர்ந்த ஞானம், வாழ்க்கை மீது கொண்ட ஆன்மீக எண்ணங்கள், சரிசம மானுட கருத்தியல், தர்ம சிந்தனை போன்ற விஷயங்களில் நிறைவு மற்றும் பக்குவம் பெற்றவராக ஆக்கும் இராசி மண்டலமே இந்த கும்ப இராசி மண்டலம் ஆகும்,

ஒருவர் கும்ப இராசியில், கும்ப இலக்னத்தில் அல்லது கும்பத்தில் பலம் பெறும் சுபகிரகங்களை வைத்திருந்தால் அல்லது வேறுவகையில் அந்த கும்ப இராசி மண்டலம் வலுவடையும் காலங்களில் பிறந்தால் மேலே சொன்ன அமைப்புகள் சிறப்பு பெற்று அவர்களின் வாழ்க்கை இறைவனின் அருள் கடாச்சம் நிறைந்தாக அமையும்.

சிம்மம் இராசி மண்டலம் சிறப்பு -

நவகிரகங்களில் முதன்மையானவர் ஆன சூரியனின் சுயஷேத்திரமாக திகழ்வது இந்த சிம்மம் இராசி மண்டலம் ராஜபரிபாலணம் செய்யும் இராசியாக உள்ளது தோற்றம், ஆளுமை, கம்பீரம், அதிகாரம், பொறுப்பு, ஆதீக்கம் போன்ற காரகங்கள் கொண்ட இராசியாகும், அடையாள குறியாக சிங்கத்தை வைத்திருக்கும் இராசி அதாவது சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற வேட்டையாடி விலங்குகள் எஞ்சியவற்றை உண்டு வாழவிடும் ஆனால் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும் அதை மீறி வரும் விலங்குகளை தாக்கி அழிக்கும், நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை அவ்வாறு இருக்கையில் அருகில் இரைவரினும் பொதுவாக அவற்றைத் தாக்காது இது சிங்கத்துக்கு மட்டுமல்ல சிம்ம இராசிக்கும் உரித்தான சிறப்புகள் ஆகும்.

மகம் நட்சத்திர மண்டலத்தின் சிறப்பு -

மகத்தின் அதிதேவதை பித்ருக்கள் (நம் முன்னோர்கள்) அதாவது நமக்கு முன் வழிவழி வந்த உயிர்கள் காரக கிரகம் ஞான மோட்ச காரகன் ஆன கேது பகவான் ஆகும், மரம் ஆல் இந்த மரம் நன்கு அகன்று பரந்து விழுதுகள் விட்டு ஒரு மரம் ஏக்கர் ஏக்கர்களை தன் வசப்படுத்தும் சிறப்பு பெற்றது அதனால் தான் ஆல் போல் தழைத்து என்று வாழ்த்துகிறோம் மேலும் மக நட்சத்திரத்தின் அடையாள குறி சிம்மாசனம் ஆகும் அதாவது அரச நிலை, சக்தி, கண்ணியம், மரியாதை, அதிகாரம் பெற்று அரசாட்சி செய்யும் நிலையை காட்டும் நட்சத்திரம் ஆகும்.


மஹாமக காலம் -
 

மஹாமகம் அதாவது குரு கிரகம் சிம்ம இராசியில் இருக்கும் காலத்தில் சூரியன் கிரகம் கும்ப இராசியில் இருக்கும் காலத்தில் கோச்சாரப்படி சந்திரன் கிரகம் மகம் நட்சத்திர மண்டலத்தில் பயணிக்க ஆரம்பிக்கும் காலம் அந்நிலையில் சூரியன், பூமி, சந்திரன், குரு, மகம் நட்சத்திரம் ஆகிய ஐந்தும் வான் மண்டலத்தில் நேர்கோட்டில் வரும் இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நிகழும் நிகழ்வாகும்.


இது பௌர்ணமி 21/02/2016 10:39 PM முதல் 22/02/2016, 10:20 PM வரையும், மகம் நட்சத்திரம் 22/02/2016, 05:56 AM முதல் 23/02/2016, 05:36 AM வரையும் இருக்கும் இன்னாளில் 22/02/2016, 05:56 AM  முதல் 22/02/2016, 10:20 PM வரை இந்த கால அளவுகளுக்குள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடுவது புண்ணிய விசேஷம் ஆகும். *



இப்படி நீராடமுடியாத பக்தர்கள் தங்களின் ஊர் உள்ள கோயில் தீர்த்தங்களில் நீராடிக் கொள்ளலாம் அப்படியும் முடியாதவர்கள் கோயிலை ஒட்டி நதியில் நீராடலாம் அப்படியும் முடியாதவர்கள் சூரிய ஒளியில் ஒரு பாத்திரத்தில் நீரால் நிரப்பி 108 முறை தங்களின் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை ஜெபித்து அந்த ஜெபித்த நீரை தனது தீர்த்த வாளியில் உள்ள நீருடன் விட்டு பின் அந்த மகாமக காலத்தில் நீராடலாம்.



நட்சத்திர கால அளவுகளில் பஞ்சாங்கங்கள் வித்தியாசத்தால் சில மணித்துளிகள் வித்தியாசம் வரலாம்*
 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "மஹாமகத்தின் புராண புண்ணியமும் சிறப்பும் நீராடுதலும்..."

கருத்துரையிடுக

Powered by Blogger