கடனும் ஜோதிடமும் பகுதி 2 - கடனின் காரகத்துவங்களும், திவால் நிலைக்கு சென்ற...

கடனும் ஜோதிடமும் பகுதி 2 - கடனின் காரகத்துவங்களும், திவால் நிலைக்கு சென்ற...


ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 6, 8, 12 ஒருவரின் கடனின் நிலையை காட்டும் முக்கிய ஸ்தானங்கள் ஆகும் மேலும் ஒருவரது ஜாதகத்தில் இராசிசக்கரத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 2,4,5,11 ஆகிய ஸ்தானங்கள் ஒருவரது செல்வ வளத்தை காட்டும் முக்கிய ஸ்தானங்கள் ஆகும், மேலும் ஒருவரது ஜாதகத்தில் அவருக்கு இருக்கும் தெய்வ பலத்தை காட்டும் முக்கிய ஸ்தானங்கள் லக்னம், 5, 9 ஆகிய ஸ்தானங்கள் ஆகும், தொழிலிலுக்காக வாங்கப்பட்ட கடன் என்றால் 10 ஆம் ஸ்தானத்தின் பங்கும் முக்கியத்துவம் பெறும்,

முதலில் ஒருவர் கடன் படவேண்டுமென்றால் -

ஒருவரது ஜாதகத்தில் இராசிசக்கரத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 2,4,5,11 ஆகிய ஸ்தானங்கள் - பலமிழந்து அதாவது தன் ஸ்திர வலிமை குறைவு படவேண்டும் மேலும்

அதே நேரத்தில் அவரது ஜாதகத்தில் இராசிசக்கரத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 6, 8, 12 வலிமை பெற்றுவது மட்டும் அல்லாமல் 6, 8, 12 ஸ்தானாதிபதிகள் ஜென்ம லக்கினத்திற்கு 2,4,5,11 ஆகிய ஸ்தானங்களையோ அல்லது அதன் ஸ்தானாதிபதிகளையோ வலிமையாக அசுப நிலையில் தாக்க வேண்டும் அதற்க்கான திசாபுத்திகளும் வரவேண்டும்.

அதே சமயம் அவரது ஜாதகத்தில் இராசிசக்கரத்தில் ஜென்ம லக்கினத்திற்கு லக்னம், 5, 9 ஆகிய ஸ்தானங்கள் அந்த சமயம் உதவாமல் போகும் நிலையும் ஏற்பட வேண்டும் அதாவது தெய்வபலம் குன்றும் நிலை ஏற்பட வேண்டும்.

இதை சுருக்கமாக சொல்லியிருக்கிறேன் இப்படிபட்ட நிலை ஒருவருக்கு வரும் காலத்தில் கடன் படும் நிலைக்கு முதலில் ஆளாவார் அந்த கடனில் இருந்து பலவழிகளில் மீண்டு வருவார் அதாவது கடனில் இருந்த பலரும் பலவழிகளில் மீண்டுவருகிறார்கள் உதாரணமாக தொழில் சம்பாதித்தும் மீள்கிறார்கள் மற்றும் தன் சொத்துகளை விற்றும் மீள்கிறார்கள் இப்படி பலவழிகள் உண்டு, கடனில் மீளாத நிலைக்கு போகிறவர்களும் உண்டு இப்படி பலவிதமான வாழ்க்கை பாதைகளை காட்டக்கூடியதாக இந்த கடன் உள்ளது தொடர்ந்து மெல்ல மெல்ல விளக்கமாக பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

கடனால் திவால் நிலைக்கு சென்று கொண்டிருக்கும் ஜாதகம் - 

இது ஒரு பெரிய பணக்காராக இருந்து தற்போது கடன் மேல் கடன் பட்டு திவால் நிலைக்கு போகி கொண்டிருக்கிறார் இந்த ஜாதகர், இந்த ஜாதகரின் தந்தையும் பணக்காரர் தான் தொழிலதிபர் தான் ஆம் ஜாதகத்தில் தந்தை ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன் 7க்குடைய சூரியனுடன் 5 க்குடைய புதனுடனும் சேர்ந்து 11 ஆம் ஸ்தானத்தில் அமர்ந்து 2, 11க்குடைய குருவால் பாரக்கபட்டதால் பிறப்பிலேயே இவரும் பணக்காரனாக பிறந்தார் அதாவது பணக்கார பிள்ளையாக ஜனித்தார், பலவகையான தொழில்கள் செய்தார் முக்கியமாக மதுபான வியாபாரம் மற்றும் ஏற்றுமதி என்று அந்த தொழிலை விருத்தி செய்தார் ஆனால் தற்போது அவருக்கு செய்த வினைக்கு பதில் வினை வரும் காலம் ஆம் அவர் செய்தது தீய வினை என்பதால் இப்போது வருவதும் தீய வினையாக உள்ளது, வினை என்றால் கர்மா என்று பொருள் சரி இப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.


இவருக்கு தற்போது நடப்பது 1,12 ஆம் ஸ்தானாதிபதியின் திசையான சனி திசையில் 6ஆம்  ஸ்தானாதிபதியான சந்திரன் புத்தி நடப்பில் உள்ளதால் சனியும் சுய சாரம் அனுஷம் சந்திரனும் சுய சாரம் திருவோணம் ஆனதாலும் சனியுடன் சேர்ந்த இராகு 8  ஆம் ஸ்தானாதிபதியான புதனின் சாரம் பெற்றதாலும் மேலும் 10 ஆம்  ஸ்தானாதிபதியான செவ்வாயும் இராகுவின் சாரம் இதனால் பெரிய கடனில் ஆளாகி அதை முறையாக பயன்படுத்த செலவிட தவறி இப்போது திவால் நிலைக்கு தள்ளபட்டுள்ளார்.

தொடரும்...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "கடனும் ஜோதிடமும் பகுதி 2 - கடனின் காரகத்துவங்களும், திவால் நிலைக்கு சென்ற..."

கருத்துரையிடுக

Powered by Blogger