உங்களின் அஷ்டவர்க்க பரலின் பலத்தை அறிய எளிய கணக்கு…

உங்களின் அஷ்டவர்க்க பரலின் பலத்தை அறிய எளிய கணக்கு

ஒருவரின் ஜாதகத்தை விரிவாக எழுதி இருந்தால் அதில் அஷ்டவர்க்க பரல் என்ற ஜோதிட கணிதத்தையும் அவரது ஜாதகத்தில் ஜோதிடர்கள் எழுதி இருப்பார்கள் இந்த
அஷ்டவர்க்க பரல் முறை கணிதம் பற்றி பின்னர் விரிவாக சந்தர்ப்பம் அமைந்தால் எழுதுகிறேன் இப்போது  ஏழு கிரகம் உடன் லக்னம் ஆக அஷ்ட (எட்டு) கிரக ஆதிபத்யங்களின் பொது வலிமையை காட்டும் இந்த அஷ்டவர்க்க பரல்களின் மூலம் ஒருவரது ஜாதகத்தில் எளிமையாக அவரின் பொது ஜாதக இராசிகட்டத்தின் மேலோட்டமான பலத்தை எப்படி காண்பது என்பதை சிறிதாக அறிவோம்,

அஷ்டவர்க்க பரல் என்பது 337 எண் பரல்கள் அமைந்தது லக்னம் முதல் 12 ஸ்தானங்களுக்கும் இதன் கணித முறைப்படி ஒவ்வொரு ஸ்தானங்களுக்கும் பகிர்ந்து அளிக்கபட்டு இறுதியில் வரும் எண் தான் இந்த 337 இதன் சிறப்பை சொல்லும் சிலர் ஏழைக்கும் இதே 337 தான் பணக்காரருக்கும் இதே 337 தான் என்பர் ஏழை பணக்காரன் என்பதெல்லாம் மனிதர்கள் போடும் வித்தியாசம் தானே இறைவனை பொருத்தவரை அனைவரும் சமமே அந்த வழியில் வந்த ரிஷிகளுக்கும் மனிதர்கள் சமமே, ஏழை பணக்காரன் இன்ன பிற வித்தியாசங்கள் எல்லாம் வந்து பின் மாறும் நிலையில்லா தன்மைகள் ஆக எந்த மனிதர் ஆனாலும் 337 எண் தான்.

இந்த 337 எண் பரலை 12  ஸ்தானங்களுக்கும் பகிர்ந்து வகுத்தால் 28.08 என்று வரும் ஆக ஒவ்வொரு ஸ்தானங்களுக்கும் சராசரி எண் 28

12  ஸ்தானங்களை பல்வேறு பிரிவுகளாக வகுத்துள்ளனர் நம் ஜோதிட முன்னோர்கள் அதாவது கேந்திரம், பணபரம், உபஜெயம், திரிகோணம், அபோகிலிபம், மறைவு ஸ்தானங்கள் என பிரித்துள்ளனர்

திரிகோணம், கேந்திரம் - சுப பலத்தை காட்டும் ஸ்தானங்கள்

பணபரம் செல்வ வளத்தை காட்டும் ஸ்தானங்கள்

உபஜெயம் - வெற்றியின் நிலையை காட்டும் ஸ்தானங்கள்

அபோகிலிபம் - அபாயங்கள் காட்டும் ஸ்தானங்கள்

மறைவு - அசுப துர் பலத்தை காட்டும் ஸ்தானங்கள்

இதில் ஐந்து தர நிலை வைத்துக்கொள்ளுங்கள் மிக பலவீனம் - பலவீனம் - சமம் -  பலம் - மிக பலம்

கேந்திர ஸ்தானங்கள் - 1,4,7,10 - இந்த ஸ்தானங்களின் கூட்டுத்தொகை

மிக பலவீனம்
80 க்குள் இருந்தால்
பலவீனம்
80 - 96 க்குள் இருந்தால்
சமம்
96 - 112க்குள் இருந்தால்
பலம்
112 - 128 க்குள் இருந்தால்
மிக பலம்
128 - 144 க்குள் இருந்தால்

பணபரம் ஸ்தானங்கள் - 2,5,8,11 - இந்த ஸ்தானங்களின் கூட்டுத்தொகை

மிக பலவீனம்
80 க்குள் இருந்தால்
பலவீனம்
80 - 96 க்குள் இருந்தால்
சமம்
96 - 112க்குள் இருந்தால்
பலம்
112 - 128 க்குள் இருந்தால்
மிக பலம்
128 - 144 க்குள் இருந்தால்

உபஜெய ஸ்தானங்கள் - 3,6,10,11 - இந்த ஸ்தானங்களின் கூட்டுத்தொகை

மிக பலவீனம்
80 க்குள் இருந்தால்
பலவீனம்
80 - 96 க்குள் இருந்தால்
சமம்
96 - 112க்குள் இருந்தால்
பலம்
112 - 128 க்குள் இருந்தால்
மிக பலம்
128 - 144 க்குள் இருந்தால்

அபோகிலிப ஸ்தானங்கள் - 3,6,9,12 - இந்த ஸ்தானங்களின் கூட்டுத்தொகை

சமம் என இருப்பது நல்லது மிக அதிகமாக பரல் வாங்கினாலும் மிக குறைவாக பரல் வாங்கினால் முரண்பாடுகள் ஏற்படும்
96 - 112க்குள் இருந்தால் 

மறைவு ஸ்தானங்கள் - 3,6,8,12 - இந்த ஸ்தானங்களின் கூட்டுத்தொகை

சமம்
96 - 112க்குள் இருந்தால்
பலவீனம்
112 - 128 க்குள் இருந்தால்
மிக பலவீனம்
128 - 144 க்குள் இருந்தால்

ஆயுள் ஸ்தானம் 8ஆம் ஸ்தானம் இதில் இருப்பதால் அது மிக அதிகமாக பரல் வாங்குவதும் மிக குறைவாக பரல் வாங்குவதும் சரியல்ல.

அஷ்டவர்க்க பரல் முறை கணிதம் என்பது ஒரு மேலோட்டமான கணித விகிதம் என்பதால் இதை வைத்து ஒருவரின் தனிபட்ட பலன்களை நுணுக்கமாக கணிப்பது அவ்வளவு பொருந்தாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும் எனவே மேலோட்டமான அஷ்ட (எட்டு) கிரக ஆதிபத்ய பலத்தை பார்த்துக்கொள்ளலாம் அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 



0 Response to "உங்களின் அஷ்டவர்க்க பரலின் பலத்தை அறிய எளிய கணக்கு…"

கருத்துரையிடுக

Powered by Blogger