பணபர ஸ்தானங்கள் முக்கியத்துவம் மற்றும் விளக்கம்…

பணபர ஸ்தானங்கள் முக்கியத்துவம் மற்றும் விளக்கம்

ஜென்ம லக்னத்திற்கு 2,5,8,11 ஆம் ஸ்தானங்கள் பணபர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றன அதாவது கேந்திர ஸ்தானங்களுக்கு அடுத்து அடுத்து வரும் ஸ்தானங்களெல்லாம் பணபர ஸ்தானங்கள் ஆகும், பணபர ஸ்தானங்கள் ஒருவரது ஜாதகத்தில் அவரின் செல்வ வளத்தை காட்டும் ஸ்தானங்களாக உள்ளன, செல்வத்தை நான்கு வகைகளாக பிரித்து அதை ஒவ்வொரு ஒவ்வொரு ஸ்தானங்களாக பிரித்து தந்துள்ளனர் ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் மனித இனம் நாகரீக சமூக வாழ்க்கையை தொடங்கி பின் தொட்டு உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்கும் மற்றும் மண், பொன், பெண் (இனவிருத்தி இச்சை) என்ற மூவாசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மற்றும் தன் சார்ந்த உறவுகளுக்கு இது போன்ற தேவையை நிறைவேற்றி கொடுக்கவும் எப்போது மனித இனத்திற்குள் பயன்படுத்தபட்ட முக்கிய ஆயுதமாக உள்ளது அவரவரது செல்வ வளமை, வரவு, தொழில் லாபம் உள்ளது அதனால் தான் இதுவே கேந்திர ஸ்தானங்களுக்கு அடுத்த முக்கியத்துவம் பெற்ற ஸ்தானங்களாக உள்ளது,

அதுவும் நவீன உலகமயமாக்கல் பொருளாதார சூழலில் பணம், வரவு, லாபம், சேமிப்பு போன்ற வார்த்தைகளுக்கு மிகமிக அதிக முக்கியத்துவம் வந்துவிட்டது ஒருவருக்கு பணம், வருமானம், லாபம் பெற ஆதாரமாக இருக்கும் கல்வியும் இன்று வியாபாரம் ஆகிவிட்டது ஏன் உதாரணமாக ஒரு மனிதனின் இறுதி சடங்கிற்கு கூட பணம் அத்தியாவசியம் ஆகிவிட்டது மற்றும் சில மனிதர்கள் சுடுகாட்டில் கூட தனது பணபலத்தையும், அதிகார பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் அளவுக்கு சில மனிதர்களுக்கு பணபித்து பிடித்துள்ளது இதை தவறாகவோ குற்றம் சொல்லவோ சொல்லவில்லை எதார்த்தமாக உலகில் நடந்து கொண்டிருப்பதை பதிவு செய்கிறேன் அவ்வளவே அந்த அளவுக்கு பணத்தின் தேவைகளின் முக்கியத்துவம் நவீன காலத்தில் வளர்ந்துள்ளது ஏன் எமது வலைபதிவில் எத்தனையோ பிரபல மனிதர்களின் ஜாதக பலன்களை எழுதி உள்ளேன் அதில் Google Analytics மூலமாக பார்த்ததில் வாசகர்களால் அதிகமாக படிக்கபட்ட பிரபலம் செல்வ வளத்தால் உயர்ந்தவர்களே அதிகமாக படிக்கபட்டு உள்ளனர்,
மிகவும் குறைவாக படிக்கபட்டவர்கள்
 
இதுதான் எதார்த்த நிலை இவ்வளவு மனிதர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்படும் செல்வ வளத்தை பலத்தை ஜோதிடத்தில் காட்டும் பணபர ஸ்தானங்கள் 12 ஸ்தானங்களில் நான்கு  பிரிவாக நான்கு ஸ்தானங்களுக்காக பிரித்து தந்துள்ளனர்

ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் ஸ்தானம் - முதல் பணபர ஸ்தானம் ஆகும் இது ஒருவரது குடும்ப சொத்து, சேர்க்கும் பணம், சேர்ந்த உடைமை, சேர்த்த வங்கி இருப்பு, பங்கு பத்திரங்கள், நகைகள், விலையுயர்ந்த கற்கள், முதலீட்டுக்கான பணபலம் ஆகியவற்றை காட்டும் ஸ்தானமாக உள்ளது.

ஜென்ம லக்னத்திற்கு 5ஆம் ஸ்தானம் - இரண்டாம் பணபர ஸ்தானம் ஆகும் இது ஒருவரது வணிக பலம், ஊக வணிகம், வணிக பேரம், உயர்ந்த பதவிகள், மகத்தான செல்வம், பூர்வீக புண்ணிய பலம், உயர் கல்வி திறன், லாட்டரி, சூதாட்டம், பந்தயம், பரிசு ஆகியவற்றை காட்டும் ஸ்தானமாக உள்ளது.

ஜென்ம லக்னத்திற்கு 8ஆம் ஸ்தானம் - மூன்றாம் பணபர ஸ்தானம் ஆகும் இது ஒருவரது மற்றவர்களின் பணம் உங்களிடம் சேருதல், கடனால் லாபம் பெறுதல், திருட்டு பணம், ஊழல் பணம், கருப்பு பணம், பரம்பரை உடைமை, வட்டியால் ஈட்டும் அதிகபட்ச பணம், புதையல், துரோகத்தால் ஏமாற்றி ஈட்டும் பணம், அடமானப் பணம், நீசத்தொழிலால் ஈட்டும் பணம் ஆகியவற்றை காட்டும் ஸ்தானமாக உள்ளது.

ஜென்ம லக்னத்திற்கு 11ஆம் ஸ்தானம் - நான்காம் பணபர ஸ்தானம் ஆகும் இது ஒருவரது லாப ஸ்தானம் அதாவது வருமானம், தொழில் லாபம், வாங்கும் சக்தி, லாபப்பங்கு, ஓய்வூதியம், சராசரி வட்டி அல்லது வருமானம் பெற்றும் தரும் முதலீடுகள், பங்கு பத்திரங்கள், துணை  அல்லது கூடுதல் வருமானங்கள் ஆகியவற்றை காட்டும் ஸ்தானமாக உள்ளது.

பணபர ஸ்தானங்களின் வலிமையை காண -

ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் ஸ்தானத்தின் பலத்தை அறிய - 2ஆம் ஸ்தானம், 2ஆம் ஸ்தானத்தை சேரும் பார்க்கும், கிரகங்கள், 2ஆம் ஸ்தானாதிபதி ஸ்தான பலம், சாரம் மற்றும் குரு, சந்திரன், செவ்வாய் கிரகங்களின் வலிமை ஆகியவற்றின் சுப பலத்தை பொருத்தே 2ஆம் ஸ்தானத்தின் பலம் அமையும்.

ஜென்ம லக்னத்திற்கு 5ஆம் ஸ்தானத்தின் பலத்தை அறிய - 5ஆம் ஸ்தானம், 5ஆம் ஸ்தானத்தை சேரும் பார்க்கும், கிரகங்கள், 5ஆம் ஸ்தானாதிபதி ஸ்தான பலம், சாரம் மற்றும் குரு, புதன், சூரியன் கிரகங்களின் வலிமை ஆகியவற்றின் சுப பலத்தை பொருத்தே 5ஆம் ஸ்தானத்தின் பலம் அமையும்.

ஜென்ம லக்னத்திற்கு 8ஆம் ஸ்தானத்தின் பலத்தை அறிய - 8ஆம் ஸ்தானம், 8ஆம் ஸ்தானத்தை சேரும் பார்க்கும், கிரகங்கள், 8ஆம் ஸ்தானாதிபதி ஸ்தான பலம், சாரம் மற்றும் சனி, செவ்வாய், இராகு, கேது கிரகங்களின் வலிமை ஆகியவற்றின் அசுப பலம், அசுப பலவீனங்கள் பொருத்தே 8ஆம் ஸ்தானத்தின் பலம் அமையும்.

ஜென்ம லக்னத்திற்கு 11ஆம் ஸ்தானத்தின் பலத்தை அறிய - 11ஆம் ஸ்தானம், 11ஆம் ஸ்தானத்தை சேரும் பார்க்கும், கிரகங்கள், 11ஆம் ஸ்தானாதிபதி ஸ்தான பலம், சாரம் மற்றும் சனி, சுக்கிரன், குரு, இராகு கிரகங்களின் வலிமை ஆகியவற்றின் சுப பலத்தை பொருத்தே 11ஆம் ஸ்தானத்தின் பலம் அமையும்.

வெள்ளை பணத்திற்கு அதிபதியாக குருவும் - கருப்பு பணத்திற்கு அதிபதியாக சுக்கரனும் இருக்கிறார்கள்

பணபர ஸ்தானங்கள் இது ஒருவரது பண வரவு சேமிப்பு வட்டம் போல் செயல் படுகிறது


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "பணபர ஸ்தானங்கள் முக்கியத்துவம் மற்றும் விளக்கம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger