செவ்வாய், 22 மார்ச், 2016

ஜாதகத்தில் விருச்சிகம் ராசியில் சூரியன் இருந்தால்...ஜாதகத்தில் விருச்சிகத்தில் சூரியன் அமர்ந்தால் -

இயற்கையாக இது சூரியனுக்கு நட்புத் தன்மையை ஏற்படுத்தும் இராசி அதனால் போர்க்குணமுள்ளவர், தைரியமானவர், எதிலும் தான் நாயகனாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர் அதனால் தற்பெருமை அதிகமாக இருக்கும், எந்திரவியல் நிர்வாகவியல் சார்ந்த கல்வியில் நாட்டம் இருக்கும், பங்காளி சொந்தங்கள் அதிகமாக இருக்கும் சூரியன் பாதிக்கபட்டிருந்தால் பங்காளிகளுக்குள் முரண்பாடுகள் இருக்கும், அரைகுறையாக ஒரு விஷயத்தில் ஈடுபடுவர், அவசர படுவார், சினமும் தாக்குதல் மனப்பான்மையும் உள்ளவர், நிலையில்லாத பக்குவம், சம்பாதித்த பணத்தை நிலப்புலன்கள் வாங்கி வைக்க முனைவார், சீக்கிரமாக கிடைக்கும் சந்தோஷங்களில் நாட்டம், உடல் மெலிவு அதே சமயம் சூரியன் நன்றாக இருந்தால் உடல் மெலிவாக இருந்தாலும் உடல் உறுதியாக இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் இருந்தால் -  கல்விமானாக இருக்க முனைதல், அனுபவ அறிவு நிறைந்திருக்கும், அதீத கவுரவம், மற்றவர்களின் நன்மைகளை பறித்தல், அழகான மனைவி, தலைமுறையின் மீது அக்கறை.

அனுஷம் நட்சத்திரத்தில் இருந்தால் -  பங்காளிகளுக்குள் முரண்பாடுகள், கீழ்த்தரமான வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் சேர்க்கை, கீழ்படியாத குணம், குணப்படுத்த கடிமான நோயகள், நிலத்தில் சிக்கல், பலவீனமான கைகால்கள்.

கேட்டை நட்சத்திரத்தில் இருந்தால் - புலன்சார்ந்த பற்று அதிகம் ஏற்படும், பணத்தில் கருமி அல்லது தன் பண விஷயத்தில் மட்டும் சுயநலமானவர் செலவாளி, போர்கலைகளில் பற்று, வியாபாரத்தை தீவிரமாக செய்வார் போட்டியாளர்களை நசுக்க தெரிந்தவர்.

குறிப்பு - சூரிய பகவான் இந்த மாத காலங்களில் பிறக்கும் அத்தனை குழந்தைக்கும் இந்த இராசியில் தான் இருப்பார் அதனால் சொல்லபட்ட பலன்கள் முழுமை போய் சேராது சூரிய பகவான் இராசிகளில் பல சூட்சம பலங்கள் வலிமையடையும் முறைகள் உள்ளன அந்த காலங்களில் பிறக்கும் ஒருவருக்கே பலன்கள் முழுமை போய் சேரும் அதே போலத்தான் தீமைகளும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக