திங்கள், 18 ஏப்ரல், 2016

ஜோதிடமும் அரசியலும் - அடிப்படை ஆக்கம் பகுதி 1…

ஜோதிடமும் அரசியலும் - அடிப்படை ஆக்கம் பகுதி 1…

முதலில் இந்த அரசு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் அதன் பின்பு தான் மீதி விஷயங்கள் சொன்னால் புரியும்

அர = அரன் (சிவன்), சீவன் (உயிர்), இறைவன் - என்ற வேர்ச்சொல்லில் இருந்து சேர்ந்து வந்தது தான் அரசு
அரசு = உயிர்கள், உயிர்களின் ஆக்கம், உயிர்களின் இணைவு, உயிர்களின் தலைமை என்றெல்லாம் பொருள் உள்ளது.
அரசன் = உயிர்களின் தலைவன்
அரசி = உயிர்களின் தலைவி

இங்கு நமக்கு தேவையான பொருள் உயிர்கள்

உயிர்கள் + இயல் = அரசு + இயல் = அரசியல்
உயிர்கள் + அங்கம் = அரசு + அங்கம் = அரசாங்கம்
உயிர்கள் + ஆளுதல் = அரசு + ஆளுதல் = அரசாளுதல்

ஒரு உயிராக இருக்கும் வரை அது இறைவனின் கட்டுபாட்டில் இருக்கிறது எப்போது அது பல உயிர்களின் சங்கமமாகுகிறதோ அப்போது தங்களுக்கான உணவு, உடை, உறைவிடம் ஆகிய தேவைகளின் ஒட்டியும், பிறப்பு, வளர்ப்பு, இறப்பு  ஆகிய நிகழ்வுகளின் ஒட்டியும் தங்களுக்குள் ஒப்புக்கொண்ட தலைமை நிர்வாகம் அல்லது ஆக்கிரமிப்பு நிர்வாகம் போன்று ஏற்படுத்தி கொள்ளும் தேவை ஏற்பட்டுவிடுகிறது, மற்ற உயிரினங்களில் உதாரணமாக ராணி தேனீ, ராணி எறும்பு என்றும் அல்லது ஒரு சிங்கம் தனது வேட்டை எல்லைகளை ஆக்கிரமிப்பின் மூலம் ஏற்படுத்தி கொள்வதன் போலும் நிகழ்வதும் உண்டு.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக