ஜோதிடமும் வாகனமும் பகுதி 1 - நவகிரகங்களின் வாகன காரகத்துவங்கள்…

ஜோதிடமும் வாகனமும் பகுதி 1 - நவகிரகங்களின் வாகன காரகத்துவங்கள்



ஒவ்வொரு மனிதர்களுக்கும் வாகனங்கள் என்பது அத்தியாவசியமாகவும், வாழ்வின் முக்கியத் தேவையாகவும் மாறிவிட்டது என்று சொல்வதுகூட பொருந்தாது ஏனென்றால் மனித இனம் நாகரீக சமுகமாக மாறி பண்டங்களை மாற்றிக்கொள்ளும் தேவை ஏற்பட்ட காலம் தொட்டே வாகனங்கள் என்பது வாழ்வின் முக்கியத் தேவையாக உள்ளது, தொழிலுக்காகவும் வாழ்வியல் பயணங்களுக்காகவும் மற்றும் சுற்றுலா என பல்வேறுபட்ட தேவைகளுக்காக நம்மில் ஒன்றாக மாறிவிட்டன வாகனங்கள்,  சில இளைஞர்களுக்கு அவர்களின் முதல் வாகனமே அவர்களின் முதல் காதலியாகவும், பல இளைஞர்களுக்கு அவர்களின் வாழ்வில் உள்ள முதல் லட்சிய கனவாகவும் உள்ளது,

அப்படிபட்ட முக்கிய கனவு, தேவை, அடிப்படை என மாறிவிட்டது இந்த வாகனத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் போது எமது தாதா அவர்கள் சொல்வார் " இந்த உடல் என்பதே ஒரு வாகனம் தான், உயிர் இந்த உடல் என்ற வாகனத்தை எடுத்துகொண்டு உலகில் அதன் கர்மவினைக்கு தக்கபடி யார்யாரை பார்க்க வேண்டுமோ, எதை எதை செய்ய வேண்டுமோ, எங்கு எங்கு செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு போகிறது இந்த உயிருக்கு உடல் இல்லையென்றால் எப்படி பயணிக்க முடியாதோ அது போல் ஒவ்வொரு மனிதர்களுக்கும் வாகனங்கள் அத்தியாவசியமாகி விட்டது " என்பார்.

ஒருவரின் வாகன யோகத்தையும், அதன் அமைப்புகளையும் காண முதன்மையாக 4 ஆம் ஸ்தானத்தின் பலம் மற்றும் பலவீனங்கள் பார்க்கபடும், அதற்கு பிறகு 1,7,10 ஆகிய அடுத்த கேந்திர ஸ்தானங்கள் பார்க்கபடும் மற்றும் 2,5 ல் சுபகிரகங்கள் இருப்பது மற்றும் 4 ஆம் ஸ்தானாதிபதியுடன் சேரும் பார்க்கும் கிரகங்களின் பலம் மற்றும் பலவீனங்கள், நட்சத்திர சாரத்தின் பலம் மற்றும் பலவீனங்கள் பார்க்கபடுவது வழக்கம், அப்படிபலம் பெற்ற திசாபுத்தி காலங்களும் பார்க்கபடும், அதற்கு பிறகு நவகிரகங்களில் சுக்கிரன் முதன்மையான வாகன காரகத்துவம் பெற்றவர் அதற்கு அடுத்தாக சனி, சந்திரன் பலம் மற்றும் பலவீனங்கள் பார்க்கபடும் இதை எல்லாத்தையும் தாண்டி சிறப்பு விதிகள் சிலவும் உள்ளது,

உதாரணமாக ஒருவருக்கு ஆடிகார் வாங்கும் வசதியிருக்காது ஆனால் அதில் ஓட்டுநர் ஆகவோ அல்லது அந்த காரை வைத்திருக்கும் நபருக்கு நெருங்கிய நண்பராகவோ இருந்து அந்த காரின் சொகுசுகளை தானும் பலசமயங்களில் அனுபவிக்கும் பாக்கியம் பெறலாம். 
இப்படி ஒருவரின் தனிபட்ட வாகன யோகத்தை சுக்கிரன் முதன்மையான காட்டினாலும் அடுத்து தொழிலில் ரீதியாகவும் மற்றும் பயன்பாடு தேவைகளின் ரீதியாகவும் நவகிரகங்களை பல்வேறு பட்ட வாகன காரகத்துவங்களாக பிரித்து தந்துள்ளேன் இதை வெறும் தமிழ் தந்தால் பலருக்கு புரிய வாய்ப்பில்லாமல் போகலாம் என்பதால் அதன் ஆங்கில ஆக்கத்தையும் மொழிபெயர்த்து தங்களுக்கு தந்துள்ளேன்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 




0 Response to "ஜோதிடமும் வாகனமும் பகுதி 1 - நவகிரகங்களின் வாகன காரகத்துவங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger