ஜோதிடமும் அரசியலும் பகுதி 2 - ஊசி முனை நிலத்தைக்கூட கொடுக்க முடியாது…

ஜோதிடமும் அரசியலும் பகுதி 2 - ஊசி முனை நிலத்தைக்கூட கொடுக்க முடியாது…



பன்னிரண்டு இராசிகளுக்கும் மூல அரசியல் பிரிவு -
ஒருவரது ஜாதகத்தில் முக்கியமாக அவர்களின் லக்னம், ராசி, லக்னாதிபதி, ராசியாதிபதி அவர்களின் பலம் பொருத்தும் ஒருவரது அரசியல் நடத்துமுறையும் மற்றும் கேந்திர ஸ்தானம் அந்த ஸ்தானத்தின் அதிபதிகள் கொண்டு நேரடி அரசியலும் மற்றும் மறைவு ஸ்தானம் அந்த ஸ்தானத்தின் அதிபதிகள் கொண்டு மறைமுக அரசியலையும் தெரிந்துகொள்ளலாம்.

சிம்மம் ராசி = நீயா நானா அரசியல்
கடகம் ராசி = நீயா நானா அரசியல் + நீயா அவனா அரசியல்
மேஷம், விருச்சிகம் ராசி = நீயா நானா அரசியல்
மிதுனம், கன்னி ராசி = நீயா அவனா அரசியல்
தனுசு, மீனம் ராசி = நீயா அவனா அரசியல்
ரிஷபம், துலாம் ராசி = நீயா அவனா அரசியல் + நானா அவனா அரசியல்
மகரம், கும்பம் ராசி = நானா அவனா = அரசியல்

தற்போதைய அரசியல் ஜோதிட விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு முன் பழம் வரலாற்று அணுகுமுறை தெரிந்துகொள்வது முக்கியம் -

அரசியல் பலம் என்பது நவகிரகங்களின் சங்கம பலமும் மற்றும் 12 இராசி பலம், வர்க்க பலங்கள் என அனைத்து அம்சங்களும் சேர்ந்து பார்க்க வேண்டும், ஏனென்றால் காலங்கள் தோறும் அரசியலும் அதனால் ஈட்டபடும் அரசாங்கமும் அதன் அதிகாரங்களும் மாறிக்கொண்டே வருகின்றன, நம் முன்னோர்கள் எழுதி ஜோதிட சாஸ்திரங்களின் காலங்களில் இருந்த  அரசியலமைப்பு முறை என்பது பெரும்பாலும் போர்முறைகளினாலும், படைபலத்தினாலும், ராஐதந்திர யுத்தமுறைகளினாலும் மற்றும் கூட்டுயுத்தங்களினால் தான்  பெரும்பாலும் அரசாங்கமும் அதன் அதிகாரங்களும் மாறிக்கொண்டே வந்துள்ளன கடைசியாக ஆண்ட ஆங்கிலேயர்கள் வரை இதுதான் முறையாக பெரும்பாலும் இருந்தது,

அதற்கு சிறந்த உதாரணமாகும் மகாபாரத உரையாடல் இது -
துரியோதனன் : ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது
கிருஷ்ணன் : அப்படியானால் யுத்தம் நிச்சயம்
துரியோதனன் : அது தான் எங்களின் விருப்பமும்.
தூது வந்த கிருஷ்ணரை அவமதித்து அனுப்பு விட்டான். பின்னர் பாண்டவர்கள் கௌரவர்களுடன் போரிட்டு இழந்த நாட்டை மீட்பது என முடிவு செய்தார்கள். (இதை தான் தற்போதைய அரசியல்வாதிகள் இப்போது "ஒரு தொகுதியை கூட விட்டுக் கொடுக்க கூடாது" என்று சொல்கிறார்கள்)

எனவே அந்த கால போர்முறைகள், படைபலத் திறன்கள், யுத்தமுறைகளின் மற்றும் அரசு உருவாக்கும் முறையின் படியும் ஜோதிட காரகத்துவங்களும் அதை கொண்டு பலன் அறியும் முறைகளும் இருந்தது,  யுத்தமுறைகளினால் அரசு உருவாக்கும் முறையின் காரணமாக சத்திரிய கிரகங்கள் ஆன சூரியன், செவ்வாய் முதல் முக்கியத்துவமும் அதற்கு அடுத்து சனி, குரு, இராகு, புதன் கொடுக்கபட்டது அதாவது அதன் வரிசைபடுத்தினால்

சூரியன் = யுத்த தலைமை, அரசாங்க தலைமை
செவ்வாய் = யுத்த தளபதி, அரசாங்க மற்றும் எல்லை பாதுகாப்பு
சனி = சிப்பாய்கள் & யுத்த தளவாடங்கள், ஆயுதங்கள், சட்ட பாதுகாப்பு
குரு = ஆதாரங்களை திட்டமிடல் மற்றும் தந்திர யுத்தமுறைக்கு உதவுபவர், சட்டம் இயற்றல்
இராகு =  யுத்த தளவாடங்கள், ஆயுதங்கள், கப்பற்படை
புதன் = புதிய மற்றும் இளம் போர்வீரர்கள்

12 இராசிகளில் = அரசியல் முக்கியத்துவம்
முதன்மையான முக்கியத்துவம் - சிம்மம், மேஷம், தனுசு
அதற்கு அடுத்து - மிதுனம், விருச்சிகம், மகரம் கும்பம் (உத்திராடம், அவிட்டம், சதயம்)

இந்த அடிப்படையில் நவகிரகங்களின் சங்கம பலமும் மற்றும் 12 இராசி பலம், வர்க்க பலங்கள் என அனைத்து அம்சங்களும் சேர்த்து அந்த கால அரசு உருவாக்கும் முறை, அரசியல், யுத்தங்கள் பார்க்க பட்டுவந்தன ஆனால்

பின்னர் அதே ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட ஆங்கில அரசியலமைப்பு சட்டம் ( English Constitutional Law,  English Common Law ) இதன் அடிப்படை கூறுகள் பரந்த அளவு உலகில் ஏற்றுக்கொள்ளபட்ட மக்களாட்சி முறையானது 19 ஆம் நூற்றாண்டுக்கு பின் பரவலான பலநாடுகளில் சட்டங்கள் ஆனது, இதை பின்பற்றி இந்திய சுதந்திரம் பெற்ற பின் நமது தேசமும் மக்களாட்சி அரசியலமைப்பு முறைக்கு மாறியது இதனால் ஜோதிட அரசியலும் அதன் காரக பலன் காணும் முறையும் அந்த கால அடிப்படையை தவிர்த்து மற்ற விஷயங்களில் சற்று அதிகமாக மாறிவிட்டது,  


உடல்பலத்தாலும், ஆட்களின் யுத்தபலத்தாலும், இனத்தின் ஒற்றுமை போராட்ட பலத்தாலும் அரசாளும் அதிகாரம் நிர்ணயிக்கபட்ட முறை மாறி நாட்டின் ஒவ்வொரு மனிதனின் விருப்பத்தை ஒட்டி அதன் தொகுப்பாக அனைத்து மக்களின் பொது விருப்பத்தை ஒட்டியும் அந்த விருப்ப ஓட்டு போடுவதன் மூலமாக அரசாளும் அதிகார பிரதிநிதிகள் ஆக்கபட்டனர் அந்த அதிகார பிரதிநிதிகளும் மக்களில் ஒருவாராக இருந்து தேர்ந்து எடுக்கபட்டு வரும்படி அமைக்கபட்டன அதனால் பழைய முறையில் முக்கியத்துவம் இழந்து இருந்த சனி, சந்திரனும், சுக்கிரனும், செவ்வாய்  ஆகிய கிரகத்திற்கு தற்கால அரசியலில் முக்கிய பாத்திரங்களாக மாறிவிட்டன, வாக்கு ஸ்தானங்களான ஆன 2,3 ஆம் ஸ்தானங்களும் மிக முக்கிய பாத்திரங்களாக மாறிவிட்டன.

(கூடுதல் செய்தி - தமிழ்நாட்டை ஆண்டுவந்துள்ள கலைஞர் கடக லக்னம் லக்னாதிபதி சந்திரன் உச்சம், ஜெயலலிதா 10ல் சுக்கிரன் உச்சம்.
கவிஞர்களான சுக்கிரன், சந்திரனை லக்னத்தில் வைத்திருந்தார் அடல் பிஹாரி வாஜ்பாயி.
அதே போல் புரட்சிகள் செய்து அரசாளும் உரிமை அடைந்தவர்களும் உண்டு
புரட்சிக்கு காரகர்கள் ஆன செவ்வாய், சனி  
வங்காளத்தில் ஜோதிபாசு = 10ல் சனி, ம ம்தா பேனர்ஜி - சனி உச்சம், செவ்வாய் சனி வீட்டில்,  
ஆந்திராவில் - சந்திரசேகர் ராவ் - சனி உச்சம், செவ்வாய் ஆட்சி வீட்டில்)

தொடரும்...


0 Response to "ஜோதிடமும் அரசியலும் பகுதி 2 - ஊசி முனை நிலத்தைக்கூட கொடுக்க முடியாது…"

கருத்துரையிடுக

Powered by Blogger