வியாழன், 14 ஏப்ரல், 2016

துன்முகி வருஷத்தின் நவநாயகர்கள் அதன் பலன்கள்…


இந்த துன்முகி வருஷத்தில் நவநாயகர்கள்:

ஒரு தமிழ் வருடத்தில் ராஜா, மந்திரி, சேனாதிபதி, அர்க்காதிபதி, ஸஸ்யாதிபதி, ரஸாதிபதி, தான்யாதிபதி,மேகாதிபதி மற்றும் நீரஸாதிபதி ஆகிய ஒன்பது ஆதிபத்தியங்களைப் பெறும் அதை ஏழு கோள்களில் அதிபதிகளாக கொண்டு கணித செய்து அந்த அந்த வருட நவ நாயகர்களாக யார் வருகிறார்கள் என்பதைக் கணித்து அதை கொண்டு அந்த வருடப்பலன்களை நம் முன்னோர்கள் நிர்ணயித்துள்ளனர்.

இந்த துன்முகி வருஷத்தின் நவநாயகர்கள் அதன் பலன்கள்
 
இதை கொண்டு பார்க்கும் போது பொதுவாக மழை எதிர்பார்க்கும் அளவில் இந்த ஆண்டு இருக்காது என்பதும், வறண்ட காற்று அதிக மாதங்கள் இருக்கும் என்பதும், உணவு பற்றாக்குறைகள் வராது மற்றும் திருமணங்களுக்கு பலம் ஆனால் வீண் செலவுகளோ அல்லது தேவையில்லாத கொண்டாட்டங்களில் மக்கள் விரையம் செய்வார்கள் என்பதும், கடலோர மாவட்டங்களில் மட்டும் புயல் பாதிப்புகள் வரலாம் என்றும், வரிவிலக்குகளோ சலுகைகளோ வரலாம் இருந்தாலும் துன்முகி (துர்முக்) என்பது பேச்சில் கவனமும், தவறுகள் நேர்ந்து விட்டால் சரிசெய்ய கால தாமதத்தை தரும் ஆண்டாகவும் இருக்கும் என்று தெரிகிறது.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக