வெள்ளி, 22 ஏப்ரல், 2016

Identifying characteristics of Mercury - புதனின் தன்மைகளை அடையாளம் காணல்…


Identifying characteristics of Mercury - புதனின் தன்மைகளை அடையாளம் காணல்…
புதன் (புதா - बुध - budha) என்று பெயர் காரணம் சமஸ்கிருதத்தில் புத் என்ற வேர்ச்சொல்லில் இருந்து தான் வந்தது புதா என்றால் நுண்ணறிவு, புத்திசாலிதனம், அறிவார்ந்த, விழிப்படைதல், உணர்வது , அறிவித்தல், கற்றல், புரிந்துகொள்ளும் திறன் என்றெல்லாம் பொருள், இவர் சந்திரன் மகன் என்று புராண ரிதீயாக கருதப்படுகிறது இதனால் இவருக்கு சோம புத்திரன் (सोमपुत्र - somaputra) என்ற பெயரும் உண்டு,

சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் தனித்துவமானதும், மிகவும் சிறிய கோள் ஆக உள்ளது இதுவே. சூரியனோடும் சந்திரனோடும் மிக அதிக தொடர்பு உள்ள கிரகமும் இதுவே, சூரியசந்திரர் களிடம் இருந்து தகவல்களை பெற்று மற்ற கோள்களுக்கு கொண்டு செல்பவரும் இவரே, புதன் வக்கிரம் ஆனால் இரண்டுவிதமான பழக்கமுள்ள குணமுள்ள (double-natured) தன்மையை அழுத்தமாக வெளிப்படுத்துவார், சந்திரனுடன் சேரும் போது அதிகமான சிந்தனை சக்தியும், வேகமான மன இயக்கத்தை, நகைசுவை உணர்வு, பொழுதுபோக்கு அல்லது நண்பர்களிடம் அளவுக்குமீறிய நடவடிக்கைகள், ஞாபக சக்தியில் மாற்றம் ஆகியவற்றை எற்படுத்தி தரும் கிரகமாக மாறுவார்,

சுக்கிரனுக்கு மிகச்சிறந்த நட்பு கிரகமாக இருப்பது புதன் ஆகும் இருவரும் சேர்ந்து அதில் எவர் ஒருவர் ஆட்சி, உச்சம் அடைந்தாலும் அதன் மூலம் அதிக வலிமையடைபவர் சுக்கிரனே ஆகும், இருந்தாலும் அதனால் புதனின் காரணமாக அப்படிபட்ட ஒருவரின் திறமைக்கு அங்கீகாரம் மற்றும் மக்கள் தொடர்பில் முன்னேற்றம், புதிய புதிய படைபாற்றல்களை எற்படுத்தி கொடுப்பார் இந்த புதன்,

புதன் என்றாலே பேச்சாற்றல் ஆகும் அதனால் தான் மேற்கத்திய ஜோதிடத்தில் புதனை The Messenger of Gods என்று அழைப்பார்கள், வேத சோதிடம் கூற்றின் படி புதன் இளவரசன், புத்திகாரகன் என்று அழைக்கப்படுகிறார் அதனால் இளமை தோற்றம், பொதுமக்களின் செல்லம், செல்வாக்கு, நடுநிலை, இரட்டைப் பண்புகள், சூழலுக்குதக்க மாற்றம், ஜோதிடம், சாஸ்த்திர பயிற்சி, ஆய்வு, நாடகம், தவம் புரிதல், வேதாந்த நாட்டம் பயிற்சி, வியாபாரம், பல்வேறு பட்ட விஷயங்களிலும் ஈடுபாடு என புதனை காட்டுவதன் மூலம் ஒருவருக்கு மேலே சொன்ன வற்றை தருபவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

நவீன புதனின் காரகத்துவங்களில் இவர் இளைஞன் என்பதால் புதிய மற்றும் நவீனமான விஷயங்களுக்கு இவரின் காரகத்துவமும் முக்கியம், பொதுவாக சொல்வதானால் இப்போது உருவாகி உள்ள மென்பொருள் துறையின் (Software Industry) முதலான காரகத்துவம் புதனுக்கு தான் கொடுக்க முடியும் இவரை தற்போது சிறப்பாக ஜாதகத்தில் வைத்திருக்கிறவர்கள் மென்பொருள் துறையில் கொடிகட்டி திகழ்கிறார்கள், மேலும் தகவல் தொடர்புத் துறை மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்திலும் (Telecommunication Technology) முதலான காரகத்துவம் புதனுக்கு தான், தற்போது பலரை பணக்காரர்களாக திகழ புதன் வலிமையாக அமைந்த ஜாதகங்கள் வலுவான துணையாக நிற்கிறது.

குருவிடம் சேரும் போது புதனின் திறன்களை முழுமையாக வெளிப்படுத்த முடியாது ஒரு வேளை குரு நன்றாக அமைந்து அவரின் ஒத்துழைப்பு அனுமதி கிடைத்தால் புதனின் திறமை மேலும் பலப்படும் அதன் மூலமாக அவ்வாறு அமைந்த ஜாதகர்கள் சிறப்பான வித்தைக்கு அதிபதியாக விளங்குவார்கள். புதன் வலிமை குன்றி இருப்பதும் அசுப பலத்துடன் இருப்பதும் ஜாதகரின் செயல்பாடுகளுக்கு அதிக பாதிப்பை தரும்.

புதனின் நட்பு பெறும் கோள்கள் சூரியன், சுக்கிரன்.பகை பெறும் கோள் சந்திரன். சமனான நிலை அடையும் கோள்கள் செவ்வாய், வியாழன்,சனி, இராகு, கேது. ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம். தனது திசை நடத்தும் காலம் பதினேழு ஆண்டுகள். புதனின் நட்பு வீடு ரிஷபம், சிம்மம், துலாம். புதனின் பகை வீடு கடகம். புதனின் ஆட்சி பெற்ற இடம் மிதுனம், கன்னி. புதனின் நீசம் பெற்ற இடம் மீனம். புதனின் உச்சம் பெற்ற இடம் கன்னி. புதனின் மூலதிரி கோணம் கன்னி.

12 லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் புதனின் ஆட்சி, உச்ச, நீச ஸ்தானங்கள் பின்வருமாறு -

மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,6 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,5 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1, 4 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  3,12 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  2, 11 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  1,10 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 1 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9, 12 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 8,11 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,10 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6,9 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  5,8 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4,7 ஆம் ஸ்தானத்தில் புதன் ஆட்சி அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் புதன் உச்சம் அடைவார் - 1 ஆம் ஸ்தானத்தில் புதன் நீசம் அடைவார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக