புதன், 25 மே, 2016

12 இராசிகளும் அது காட்டும் வயது தன்மையும்….

12 இராசிகளும் அது காட்டும் வயது தன்மையும்….

ஜோதிடத்தில் 12 இராசிகளுக்கும் பல்வேறு முறைகளிலும் மனித வாழ்வின் வயதுக்கான அமைப்பை காட்டுவாதாக அமைக்கபட்டுள்ளது அதில் காலபுருஷ தத்துவப்படி வயது காண்பது, திசாரீதியாக வயது பலன் காண்பது என்று பல உள்ளன அதில் ஒரு முறை தான் இது அதாவது ஒவ்வொரு இராசிக்கும் அதன் தன்மையை அடிப்படையாக வைத்து வயது தரப்பட்டுள்ளது இதில் 12 இராசிகளுக்கும் தரப்பட்டுள்ள வயதின் தன்மைகளை பார்ப்போம் -

1. மேஷம் : 28 ½ வயதுக்கான தன்மை கொண்ட இராசி
2. ரிஷபம் : 18 வயதுக்கான தன்மை கொண்ட இராசி
3. மிதுனம் : 33 ½ வயதுக்கான தன்மை கொண்ட இராசி
4. கடகம் : 44 வயதுக்கான தன்மை கொண்ட இராசி
5. சிம்மம் : 28 ½ வயதுக்கான தன்மை கொண்ட இராசி
6. கன்னி : 18 வயதுக்கான தன்மை கொண்ட இராசி
7. துலாம் : 33 ½ வயதுக்கான தன்மை கொண்ட இராசி
8. விருச்சிகம் : 44 வயதுக்கான தன்மை கொண்ட இராசி
9. தனுசு : 28 ½ வயதுக்கான தன்மை கொண்ட இராசி
10. மகரம் : 18 வயதுக்கான தன்மை கொண்ட இராசி
11. கும்பம் : 33 ½ வயதுக்கான தன்மை கொண்ட இராசி
12. மீனம் : 44 வயதுக்கான தன்மை கொண்ட இராசி

இதில் ரிஷபம், கன்னி, மகரம் - விடலை பருவ வயது இராசிகள்
இதில் மேஷம், சிம்மம், தனுசு - இளமை வயது இராசிகள்
இதில் மிதுனம், துலாம், கும்பம் - இடைநிலை பருவ வயது இராசிகள்
இதில் கடகம், விருச்சிகம், மீனம் - முதுமைக்கு முன் பருவ வயது இராசிகள்
இவ்வாறாக நான்கு நிலைகளில் இராசிகளை பிரிவு படுத்துள்ளதாக காண்பதும் ஒரு முறையாக உள்ளது


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக